Monday, April 23, 2012

இஜ்மா கியாஸ்


இலங்கையில் விவாதிக்கப்பட்ட  தலைப்பு பற்றிய உரைகளைக் காண
Part 01


Part 02


Part 03


Part 04



திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

இலங்கை விவாதத்தில் தோற்ற போலி சுன்னத் ஜமாஅத்தினராகிய தப்லீக் ஜமாஅத்தினர் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக விவாதத்தின் போது ஒப்புக் கொண்டனர். மேலும் கேவலமான தோல்வியையும் அடைந்தனர். தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே நமது தமிழாக்கத்தில் பதில் அளித்துள்ளோம். அதை அறிந்து கொள்ள

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு



நபிகள் நாயகத்தின் உள்ளத்தில்...

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு அருளப்பட்டது என்பதை முன்னுரையில் விளக்கியுள்ளோம். திருக்குர்ஆன் எவ்வாறு தொகுத்து பாதுகாக்கப்பட்டது என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

(திருக்குர்ஆன் 75:16-19, 20:114)

"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.

இன்னொரு வசனத்தில் "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.

எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், கூறியவுடனே ஒலி நாடாவில் பதிவது போல் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறை வனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.

திருக்குர்ஆன் நபிகள் நாயகத் தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.

நபித்தோழர்களின் உள்ளங்களில்...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது

Sunday, April 15, 2012

குர்ஆன், ஹதீஸ் தமிழில்

குர்ஆன், ஹதீஸ் தமிழில்

PDF வடிவில் DOWNLOAD செய்து கொள்ள .

குர்ஆன்.
(மௌலவி பீ. ஜைனுலாப்தீன் தமிழாக்கம்)


மூலம் - தமிழாக்கம் - அடிக்குறிப்பு .(PJ)
தமிழாக்கம் (Small file)




ஹதீஸ்.( Tamil and English tarnslations)

  • புஹாரி


DOWNLOAD .



  • முஸ்லிம்


DOWNLOAD .



  • அபூ தாவூத்


DOWNLOAD .





மூலம் - தமிழாக்கம் - அடிக்குறிப்பு
DOWNLOAD .
 
  • சுனனுந் நசாயீ
 
 
மூலம் - தமிழாக்கம் - அடிக்குறிப்பு
 
DOWNLOAD .


EXTRA


DOWNLOAD .
 







சிறந்த தம்பதிகள்

சிறந்த தம்பதிகள்
யாசர் அரஃபாத், மங்களம்லிதிருப்பூர்


பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிரிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாககும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறது. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத் குடும்பங்களிலும் பெருகிய வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன் சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படை காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.

அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்க்கேற்ப தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.