Thursday, June 07, 2012

இசை ஹராமா

இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்?
ரிபாஸ் கத்தார்
பதில்
இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுஇசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.
அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல் :  அஸ்ஸனனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272  புகாரி (5590)
விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா

கேள்வி: சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாடலாமா? இசை வாசிக்கலாமா?- குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் எடுத்துக் கூறவும்
o.m.m. jalal 

பதில் :
இசை கூடுமா?
பாட்டுப் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா? என்பதை அறிவதற்கு முன்னால் இசையைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அறிந்து கொள்வோம்.
நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

இசை

இசை ஓர் ஆய்வு


நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம்.

ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள்.

இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள். எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டது.

Wednesday, June 06, 2012

அல்லாஹ் உருவமற்றவனா?

                    அல்லாஹ் உருவமற்றவனா?

                                                                
அபூஉஸாமா.


பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, 'அவருக்கு வாய் நீளம்' என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.
அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உளிய நடையில் அருளப்பட்ட திருக்குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது.
ஆனால், திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்றுதான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும்.
அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உண்மையில் முகம் என்று பொருள் கொடுப்பதா? அல்லது இலக்கியமாக, முகம் என்பது திருப்தியையும், பார்வை என்hது கண்காணிப்பையும் குறிக்கும் என்று பொருள் கொடுப்பதா? என்பதில் முஸ்லிம்களிடம் நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வருகின்றது.
எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு முதலில் அகராதிப் பொருள், அதாவது அதன் நேரடிப் பொருள் கொடுக்க வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இது எல்லா மொழியிலும் உள்ள விதியாகும். அரபு மொழிக்கும் இதுதான் சட்டமாகும்.
திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செயததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 5:38)
இந்த வசனத்தில் கையை வெட்டுங்கள் என்று கூறப்படுகின்றது. இதற்கு நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். கையை வெட்டுங்கள் என்றால் அவளது பலத்தைக் குறைத்தல் என்று மாற்றுப் பொருள் கொடுக்கக் கூடாது.

பெண்கள் பள்ளிக்கு வரலாமா


பெண்கள் பள்ளிக்கு வரலாமா மறுப்புக்கு மறுப்பு

கோவை போலி சுன்னத் ஜமாஅத்தினர் பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று ஒரு பிரசுரத்தைப் பரப்பி மக்களைக் குழப்பி வருகின்றனர். அந்த பிரசுரத்துக்கு அப்பாஸ் அலி அவர்கள் மறுப்பு தயாரித்து அனுப்பியுள்ளார். அதைச் சரிபார்த்து இங்கே வெளியிடுகிறோம்.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

சில தினங்களுக்கு முன்னால் கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை சார்பில் ஒரு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அந்த நோட்டீஸில்  பெண்கள் பள்ளிக்கு சென்று ஜமாத் தொழுகையில் கலந்து கொள்வது ஹராமான செயல் என்றும் எனவே பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்றும் போலி சுன்னத் வல்ஜமாத்தினர் கூறியிருந்தனர்.

தங்கள் நிலைபாட்டை நிரூபிப்பதற்காக மார்க்க ஆதாரங்களை மறைத்து திரித்துக் கூறுவதில் இவர்கள் யூத நஸாராக்களை மிஞ்சிவிட்டனர். தன்னுடைய சொந்த சரக்கை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவதும் அல்லாஹ் கூறிய சட்டத்தை மக்களிடத்தில் கூறாமல் மறைப்பதும் யூத நஸாராக்களின் கேடுகேட்ட செயலாகும்.

போலி சுன்னத் ஜமாஅத்தினர் அந்த நோட்டீஸில் இந்த இழிசெயலைச் செய்து தாங்கள் சுன்னத் ஜமாத்தினர் இல்லை. சுன்னத்துக்கு (நபிவழிக்கு) எதிரானவர்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இவர்களை சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லாமல் பித்அத் ஜமாஅத்தினர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது.

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுகையில் கலந்துகொள்வது நபிவழி என்பதையும் இதற்கு எதிராக பித்அத் ஜமாத்தினர் வைக்கும் வாதங்களுக்கு சரியான விளக்கத்தையும் இந்த பிரசுரத்தின் வாயிலாக நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.

Monday, June 04, 2012

விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு 04

இரண்டாம் பகுதி
இந்தப் பகுதியில் விரலை அசைக்கக் கூடாது என்று கூறுபவர்கள் இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் ஹதீஸ்கள் என்ன?அந்த ஹதீஸ்கள் அவர்களின் கருத்துக்கு ஆதாரமாக அமைந்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்துவோம்.
இருப்பில் விரலசைக்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கிடையே விரலை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
சிலர் இருப்பின் ஆரம்பித்திலிருந்து விரலை நீட்டி வைக்க வேண்டும் என்கின்றனர்.
சிலர் அஷ்ஹது அன்லாயிலாஹ என்று சொல்லும் போது விரலை நீட்டி சலாம் கொடுக்கும் வரை இவ்வாறே விரலை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.
சிலர் லாயிலாஹ என்று சொல்லும் போது விலை உயர்த்தி இல்லல்லாஹ் என்று சொல்லும் போது விரலை விட்டுவிட வேண்டும் என்கின்றனர்.
ஹதீஸ்களை சரியான முறைப்படி விளங்காத காரணத்தால் இவர்களிடத்தில் இத்தகைய குழப்பம் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் விரலசைப்பதில் குழப்பம் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இந்தக் குழப்பமான சட்டங்களுக்கு இவர்கள் ஹதீஸிலிருந்து நேரடியாக ஆதாரங்களைக் காண்பிக்க முடியாது.
விரலை அசைக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்கள் பலதாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரே கருத்தைத் தரக்கூடியவை.
விரலசைக்கக் கூடாது என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
ஹதீஸ் 1
911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.
நூல் : முஸ்லிம் (1016)
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இருப்பில் சுட்டு விரலை உயர்த்துவார்கள் என்று இருப்பதால் விரலை நீட்டி வைத்திருக்க வேண்டும். அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
ஆனால் இந்தச் செய்தியில் நமக்கு எதிரான எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை. இந்த ஹதீஸில் விரலை நீட்ட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அசைக்கக் கூடாது என்று சொல்லப்படவில்லை.
நாம் விரலை அசைக்கும் போது விரலை நீட்டிய நிலையில் தான் அசைத்துக் கொண்டிருக்கின்றோம்.
விரலை நீட்டுவதும் அசைப்பதும் ஒன்றுக்கொன்று முரணான காரியங்கள் இல்லை. இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது.
879أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நூல் : நஸாயீ 870
இவர்கள் காட்டிய செய்தியில் விரலை நீட்டிய தகவல் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் நீட்டுதலும் அசைத்தலும் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது.
விரலசைத்தல் தொடர்பான ஹதீஸில் இவர்கள் காட்டிய ஹதீஸில் உள்ளதை விட கூடுதல் விளக்கம் இடம்பெற்றுள்ளது என்பதே உண்மை.
தலைவர் தேசியக் கொடியை உயர்த்திக் காட்டினார் என்று ஒருவர் கூறுகிறார். இன்னொருவர் கொடியை உயர்த்தி அசைத்துக் காட்டினார் என்று கூறுகிறார். இரண்டும் முரண்பாடான தகவல் என்று யாரும் புரிய மாட்டோம். மாறாக ஒருவர் சொன்னதை மற்றவர் விளக்கிக் கூறியுள்ளார் என்று புரிந்து கொள்வோம்.
இவர்கள் காட்டியுள்ள மேற்கண்ட ஹதீஸ் இது போன்றே அமைந்துள்ளது. எனவே விளக்கம் குறைவாக உள்ள ஹதீஸை வைத்து விளக்கமாக உள்ள ஹதீஸை மறுப்பது தவறான போக்காகும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஏராளமான நபிமொழிகளை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
நபி (ஸல்) அவர்கள் விரலை (ரஃபஅ) உயர்த்தினார்கள் என்ற கருத்தில் இப்னு மாஜாவிலும் (902) அபூதாவுதிலும் (840) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ்களையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்க் கூறுகிறார்கள்.
திர்மிதியில் 3511 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் பசதஸ் ஸப்பாபத என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சுட்டு விரலை நீட்டினார்கள் என்பது இதன் பொருள்.
உயர்த்தினார்கள் என்பதிலும் நீட்டினார்கள் என்பதிலும் வார்த்தை வேறுபாடு மட்டுமே உள்ளது. இரண்டின் பொருளும் ஒன்று தான்.
எனவே ஹதீஸ்கள் மொத்தம் நான்காக இருந்தாலும் அனைத்திலும் ஒரே விசயம் தான் கூறப்பட்டுள்ளது. எனவே மேல் சொன்ன அனைத்து விளக்கங்களும் இந்த செய்திகளுக்கும் பொருந்தக்கூடியது.
ஹதீஸ் 2
1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي
வாஇல் பின் ஹுஜுர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது "ரக்அத்'தில் (இருப்பில்) அமர்ந்த போது, தமது இடக்காலைப் படுக்கவைத்து, வலக்காலை நட்டு வைத்தார்கள். தமது வலக் கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, (ஆட்காட்டி) விரலைப் பிரார்த்தனைக்காக நீட்டினார்கள். தமது இடக்கையை இடப்பக்கத் தொடையின் மீது வைத்தார்கள்.
நூல் : நஸாயீ (1147)
இந்தச் செய்தியில் நீட்டினார்கள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் நஸப என்ற அரபுச் சொல் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
நஸப என்ற அரபுச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இங்கே உயர்த்தினார்கள் நீட்டினார்கள் என்ற அர்த்தத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சொல்லுக்கு ரஃபஅ (உயர்த்தினார்கள்) என்ற பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.
நாம் எந்தப் பொருளை உயர்த்தினாலும் அதற்கு நஸப என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாக்க் காட்டும் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் விரலை உயர்த்தி அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ கிரந்தத்தில் 870 வது அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ரஃபஅ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில் உயர்த்தினார்கள் என்பதைக் குறிக்க நஸப என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ கிரந்தத்தில் 1147 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.
1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي
நஸப என்ற சொல்லும் ரஃபஅ என்ற சொல்லும் உச்சரிப்பதில் வேறுபட்டாலும் இரண்டின் பொருளும் ஒன்றுதான். விரலை உயர்த்தினார்கள் என்ற கருத்தையே இரண்டு வார்த்தைகளும் தருகின்றன.
எனவே ரஃபஅ என்ற சொல் இடம்பெற்ற ஹதீஸிற்கு நாம் அளித்த பதில் அனைத்தும் நஸப என்ற சொல் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸிற்கும் பொருந்தக்கூடியது.
முன்பு நாம் அளித்த விளக்கங்களை மீண்டும் ஒரு முறை படித்தால் இந்தச் செய்தியில் விரலை அசைக்கக் கூடாது என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை என்பதை அறியலாம்.
நஸப என்ற சொல்லுக்கு மரம் செடி கொடிகளை நடுதல் என்ற பொருளும் உள்ளது. நடப்பட்ட மரம் செடி கொடிகள் அசையக்கூடியவையாகும். இவை அசைவதால் இவை நடப்படவில்லை என்று யாரும் சொல்ல மாட்டோம்.
இந்த அடிப்படையில் விரலை நஸப் செய்தார்கள் என்பதையும் விளங்கினால் இதில் விரலைப்பதற்கு எதிரான கருத்து ஒன்றும் இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள்.
அரபு மொழியில் நஸப என்ற சொல்லுக்கு கீழே தாழ்த்தி மேலே உயர்த்துதல் என்ற பொருளும் உள்ளது.
جمهرة اللغة (1 / 350):
نصب وَالنّصب من قَوْلهم: نصب الْقَوْم السّير نصبا إِذا رَفَعُوهُ. وكل شَيْء رفعته فقد نصبته.
கூட்டத்தினர் நடந்துசெல்லும் போது அடியெடுத்து வைப்பதற்கு நஸப என்று சொல்லப்படும். நீ எந்த பொருளை உயர்த்தினாலும் அதை நஸப் செய்துவிடுகின்றாய்.
நூல் : ஜம்ஹரதுல் லுஹா பாகம் : 1 பக்கம் : 350
لسان العرب (1 / 758):
. والنَّصِبُ: المريضُ الوَجِعُ؛ وَقَدْ نَصَبه الْمَرَضُ وأَنْصَبه. والنَّصْبُ: وَضْعُ الشيءِ ورَفْعُه
ஒரு பொருளைத் தாழ்த்தி அதை உயர்த்துவதற்கு நஸப் என்று சொல்லப்படும்.
நூல் : லிசானுல் அரப் பாகம் : 1 பக்கம் : 758
நடந்து செல்லும் போது காலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்துவோம். இவ்வாறு உயர்த்துவதும் தாழ்த்துவதும் இருந்தால் அதற்கு நஸப என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என மேற்கண்ட அரபு அகராதி நூற்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அர்த்தத்தை இவர்கள் ஆதாரமாக்க் காட்டிய செய்தியில் பொருத்தினால் நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்தினார்கள் என்ற பொருள் தான் வரும்.
எனவே விரலை அசைப்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கும் இந்த ஹதீஸை இதற்கு எதிரான ஆதாரம் என்று இவர்கள் தவறாக விளங்கிக் கொண்டார்கள்.
ஹதீஸ் 3
நபி (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்று ஒரு செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் பைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்கமாட்டார்கள்.
நூல் : நஸாயீ (1253
இந்த ஹதீஸ் விரலசைப்பது நபிவழி என்று கூறும் ஹதீஸை விட வலிமையானது என்பதால் இதனடிப்படையில் விரலசைப்பது கூடாது என்று வாதிடுகின்றனர்.
ஆனால் இவர்கள் சொல்வது போல் இந்த ஹதீஸ் சரியானதல்ல. அபூதாவூத், நஸயீ ஆகிய நூற்களில் இந்த செய்தி இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1. அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)
2. ஆமிர் பின் அப்தில்லாஹ்
3. முஹம்மது பின் அஜ்லான்
4. ஸியாத்
5. இப்னு ஜுரைஜ்
6. ஹஜ்ஜாஜ்
7. அய்யூப் பின் முஹம்மது
இதில் மேலிருந்து மூன்றாவதாக முஹம்மது பின் அஜ்லான் என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களை தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.
எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள பலமான ஹதீஸைத் தட்ட முடியாது.
ஒரு பேச்சுக்கு இந்த ஹதீஸ் சரியானது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்தச் செய்தியை வைத்து விரலசைப்பது தொடர்பாக வரும் செய்தியை மறுக்க முடியாது.
ஏனென்றால் ஒரு செயல் நடந்தது என்று ஒருவரும் நடக்கவில்லை என்று இன்னொருவரும் கூறினால் ஹதீஸ் கலை விதியின் அடிப்படையில் செயல் நடந்தது என்று கூறுபவரின் கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
செயல் நடக்கவில்லை என்று அறிவிப்பவர் அந்தச் செயலை பார்க்காமல் விட்டிருப்பார். இவரல்லாத மற்றவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஒருவர் கொலை செய்ததை இரண்டு பேர் பார்த்து சாட்சி சொல்கிறார்கள். குறுக்கு விசாரணைக்குப் பின்னர் இவர்கள் நல்ல சாட்சிகள் என்று உறுதியாகி விடுகிறது. இப்போது ஊரே திரண்டு வந்து இவர் கொலை செய்யவில்லை என்று சொன்னால் அதை உலகின் எந்த நீதிமன்றமும் ஏற்காது. அவர் கொலை செய்வதை இவர்கள் பார்க்கவில்லை என்பதால் பார்த்தவர்களின் கூற்று பொய்யாகி விடாது.
இந்த விதியின் அடிப்படையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைக்கவில்லை என்ற செய்தியை ஏற்க முடியாது. மாறாக விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை ஏற்பது தான் சரியானது.
ஷாத் வகையைச் சார்ந்த பலவீமான செய்தி
மேலும் இந்தச் செய்தியை இவர்கள் ஆதாரமாக்க் காட்ட தகுதி அற்றவர்களாவர். ஏனெனில் பலர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்பதற்கு இவர்கள் கொடுத்த விளக்கத்தின் படி இதையும் இவர்கள் ஷாத் என்று தான் கூற வேண்டும்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.
நூல் : நஸாயீ (1253)
மேற்கண்ட அறிவிப்பில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து ஸியாத் என்ற நபர் அறிவித்துள்ளார். முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் பலர் இந்த ஹதீஸை முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து அறிவித்துள்ளனர்.
அவர்கள்
லைஸ் பின் சஅத்,
அபூ காலிதில் அஹ்மர்,
இப்னு உஐனா,
யஹ்யா பின் சயீத்
ஆகிய நால்வர் ஆவர்.
இந்த நால்வரும் தங்களுடைய அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஷாரா செய்வார்கள் என்ற தகவலை மட்டுமே அறிவிக்கின்றனர்.
முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் ஸியாத் மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஹதீஸை ஆமிர் பின் அப்தில்லாஹ்விடமிருந்து முஹம்மது பின் அஜ்லான் மட்டும் அறிவிக்கவில்லை. உஸ்மான் பின் ஹகீம் மக்ரமா பின் புகைர் முஹம்மது பின் அஜ்லான் ஆகிய மூவர் இந்த ஹதீஸை ஆமிரிடமிருந்து அறிவிக்கின்றனர்.
இந்த மூவரில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அல்லாத மற்ற இருவரும் இந்த வாசகத்தை குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் இஷாரா (சமிக்கை) செய்வார்கள் என்று மட்டுமே அறிவித்துள்ளனர்.
எனவே இவர்களின் வாதப்படி ஷாத் என்று கூறுவதாக இருந்தால் இவர்கள் ஆதாரமாக்க் காட்டும் மேற்கண்ட ஹதீஸைத் தான் ஷாத் என்று கூற வேண்டும்.             
Thanks: