தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின் நீங்கள் தடம் புரண்டால் 'அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள் 2:209
FLASH NEWS....
Labels
PHOTOS
Showing posts with label தகவல் களஞ்சியம். Show all posts
Showing posts with label தகவல் களஞ்சியம். Show all posts
Thursday, August 09, 2012
Monday, August 06, 2012
ஜும்ஆவின் சிறப்புகள்
வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குரிய நாள்
''இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414
மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை
"உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!'' என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ''நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883
ஜும்ஆ தொழுகைக்காகக் குளித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 858
ஜும்ஆ தொழுகைக்கு ஒரு பாங்குதான்
தவ்ஹீத் பள்ளிவாசல்களைத் தவிர உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் என்று கூறப்படுபவற்றில் ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுகின்றனர். இது நபிவழிக்கு எதிரான செயலாகும். அனைத்து தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு கூறுவதைப் போல் ஜும்ஆ தொழுகைக்கும் ஒரு பாங்குதான் கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது.
Subscribe to:
Posts (Atom)
