FLASH NEWS....

السلام عليكم ورحمة الله وبركاته. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Wednesday, August 08, 2012

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
எஸ். அப்பாஸ் அலீ

நபி (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை ஏகத்துவ இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

இதே போன்று நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள்  குடித்தார்கள் என்பதே அந்தப் பொய்யான செய்தி.

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸ்களைப் பற்றியும் அறிவில்லாத சில அறிவிலிகள் நபி (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இது போன்ற செய்திகளை மக்களிடம் சொல்லி, நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் காட்டுமிராண்டி போல் மற்றவர்களிடம் சித்தரித்துக் காட்டுகின்றனர்.

எனவே இந்த ஆய்வுக் கட்டுரையில் நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்களா? என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தபோது தன் இரத்தத்தை என்னுடைய மகனிடம் கொடுத்தார்கள். என் மகன் அதை பருகிவிட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இந்த விசயத்தை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் (என் மகனிடம்), "நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டார்கள். "உங்கள் இரத்தத்தை கீழே கொட்ட நான் விரும்பவில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவருடைய தலையை வருடிவிட்டு, "நரகம் உன்னைத் தீண்டாது. உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகும். மக்களால் உனக்குக் கேடு உண்டாகும்'' என்று சொன்னார்கள்.

Thursday, June 07, 2012

இசை ஹராமா

இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்?
ரிபாஸ் கத்தார்
பதில்
இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுஇசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.
அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல் :  அஸ்ஸனனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272  புகாரி (5590)
விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது

Wednesday, June 06, 2012

அல்லாஹ் உருவமற்றவனா?

                    அல்லாஹ் உருவமற்றவனா?

                                                                
அபூஉஸாமா.


பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, 'அவருக்கு வாய் நீளம்' என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.
அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உளிய நடையில் அருளப்பட்ட திருக்குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது.
ஆனால், திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்றுதான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும்.
அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உண்மையில் முகம் என்று பொருள் கொடுப்பதா? அல்லது இலக்கியமாக, முகம் என்பது திருப்தியையும், பார்வை என்hது கண்காணிப்பையும் குறிக்கும் என்று பொருள் கொடுப்பதா? என்பதில் முஸ்லிம்களிடம் நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வருகின்றது.
எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு முதலில் அகராதிப் பொருள், அதாவது அதன் நேரடிப் பொருள் கொடுக்க வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இது எல்லா மொழியிலும் உள்ள விதியாகும். அரபு மொழிக்கும் இதுதான் சட்டமாகும்.
திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செயததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 5:38)
இந்த வசனத்தில் கையை வெட்டுங்கள் என்று கூறப்படுகின்றது. இதற்கு நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். கையை வெட்டுங்கள் என்றால் அவளது பலத்தைக் குறைத்தல் என்று மாற்றுப் பொருள் கொடுக்கக் கூடாது.