துரத்தும் பாம்புகள்
ஏன். ராஜ் முஹம்மத் ஏம்.ஒ.ஏஸ்.ஸி,
செய்யாததை செய்ததாக சொல்பவனுக்குரிய தண்டனை
நாம் ஐவேளை கடமையான தொழுகைகளை தொழுவதில்லை. ஆனால்
பிறரை தொழுமாறு கட்டளையிடுவோம், அல்லது தீமையான காரியங்களில் மூழ்கியிருப்போம். ஆனால் தீமையை விட்டு பிறரை தடுப்போம். இதுப் போன்ற செயல்களை செய்பவர் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுவார். அதாவது நன்மையை ஏவிக்கொண்டு தாம்
அதைச் செய்யாமலும், தீமையைத் தடுத்துக்கொண்டு தாமே அதைச் செய்துகொண்டும் இருப்பருக்கு மறுமையில் கழுதை செக்கை இழுத்து வருவதைப் போன்று நரகத்தில் சுற்றிவருவார்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
அல்குர்ஆன் 61:2,3
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமை நாüல் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள்
அவரைச் சுற்றி ஒன்று கூடி, "இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், "நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால்,
அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.
நூல்கள் : புகாரி 3267, 7098, முஸ்லிம் 5713
குர்ஆனை கற்று அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களுக்குரிய தண்டனை
சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை குர்ஆனை கற்பதற்கு மிக அதிகமாக ஆர்வம் காட்ட கூடியவர்களை நாம் காண்கிறோம். ஆனால்
குர்ஆனுடைய வரிகளை நாம் தெளிவாக அறிந்தாலும் அதனை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு மாறாக அனைத்து செயல்களையும் செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.
உதாரணமாக : வட்டி வாங்க கூடாது, பொய் சொல்ல கூடாது, விபச்சாரம் செய்ய கூடாது, பெற்றோர்களை துன்புறுத்தக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் குர்ஆனுக்கு மாற்றமாக பெயர் தாங்கி முஸ்லிம்கள் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதே போல் அல்லாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது என்றும், கடமையான தொழுகைகளை தொழ வேண்டும் என்றும், பர்ளான நோன்பை கடைபிடிக்க வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதனை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்காமல், குர்ஆனை அலட்சியம் செய்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிகக் கொடுமையான வேதனையை



