இறைவனுக்கு உறவுகள் இல்லை
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா,
கடையநல்லூர்
எந்தத் தேவையுமில்லாதவனே கடவுள்!
அதற்கடுத்து, அல்லாஹுஸ்ஸமது-الله الصمد-அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன் என்பது இதற்குப் பொருள்.
பகுத்தறிவு பேசுகிறவர்கள் மதத்தை வெறுப்பதற்கு கடவுளின் பெயரால் நடக்கும் சுரண்டல்தான் முக்கிய காரணமாக உள்ளது.
மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மனிதர்களை மூளைச் சலவை செய்து வயிறு வளர்க்கிறார்கள். சுயநலத்திற்காக கடவுளையே பலவீனமாக்கி சுயலாபம் அடைகிறார்கள். புரோகிதம் என்ற பெயரில் கடவுளை வைத்து கடவுளுக்கு இடைத்தரகராக இருந்து கொண்டு கடவுளை வைத்து ஏமாற்றுகிறார்கள். கடவுளுக்குப் படையல் வைக்க வேண்டும், கடவுளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும், கடவுளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும், கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும் என்று கடவுளின் பெயரைப் பயன்படுத்தித்தான் புரோகிதர்கள் தங்களது வயிறுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
எந்தப் புரோகிதனும், நான்தான் இந்தக் கோயிலைக் கட்டிக் காக்கிறேன், இந்தக் கோவிலைப் பெருக்குகிறேன், தண்ணீர் ஊற்றிக் கழுவுகிறேன், நான்தான் இதற்காக எல்லா முயற்சிகளையும் செய்கிறேன் என்று கூறி அவன் பெயரைச் சொல்-லி மக்களிடம் வசூல் செய்திருந்தால் கூட அதைக் குறைசொல்ல முடியாது. அவர்கள் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி சுரண்டவில்லை என்று கருதலாம். அவன் செய்வது தவறாக இருந்தாலும். உள்ளதைச் சொல்லி-த்தான் கேட்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இல்லாமல் கடவுளுக்கு காணிக்கை தாருங்கள் என்று போதனை செய்து தான் இந்தச் சுரண்டல் நடக்கிறது.
ஆனால் அவை கடவுளுக்குச் செல்வதில்லை. கடவுளுக்குத் தாருங்கள் என்று மக்களிடம் கேட்டுவாங்கிக் கொண்டு தங்களது பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்கின்றனர்.
கடவுள் பெயரைப் பயன்படுத்தி வயிறு வளர்க்காதீர்கள் என்று சொன்னால் இவர்கள் நிறுத்த மாட்டார்கள்.
அதனால்தான் அல்லாஹ் இந்தத் தீமைக்கு ஆணிவேறாக இருக்கிற அடிப்படையை வீழ்த்துகிறான். உதாரணத்திற்கு ஒரு விஷச்செடியின் காம்பினை வெட்டவெட்ட அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும். திரும்பவும் வெட்டுவீர்கள். அது திரும்பவும் வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியே வெட்டவெட்ட அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு ஒரே வழி வேரோடு
விஷச்செடியைக் பிடுங்கி எறிய வேண்டும். விஷச்செடியின் வேரில் ஆசிட்டை ஊற்றி வேறைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதன்பிறகு அறவே அது முளைக்காது.
