Sunday, April 15, 2012

வானவர்கள்-தொடர் :4

கருத்தைப் பரிமாறும் மலக்குகள்
எம். முஹம்மது சலீம், எம்..எஸ்.சி, மங்கலம்.

சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மைகளைப் போல கொடுக்கப்படும் வேலையை மட்டும் மலக்குகள் செய்துவிட்டு அமைதியாக இருப்பார்கள். மாறாக, மலக்குகள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைப்பது தவறாகும். காரணம், மலக்குகள் மனிதர்களைப் போன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். நமக்கு தெரிந்த விஷயத்தை தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது போல, தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதை போலவே மலக்குகளும் செயல்படுகிறார்கள்.

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது,

அவர்கüடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்கüல் ஒருவர் இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். அதற்கு மற்றொருவர் கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது என்று கூறினார். பின்னர்

அவர்கள் உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள் என்று பேசிக்கொண்டார்கள்.

அப்போது அவர்கüல் ஒருவர் இவர் உறங்குகிறாரே! என்றார். மற்றொருவர் கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது என்றார். பின்னர் அவர்கள் இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாüயின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார்.

அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும் என்றார்கள். அப்போது அவர்கüல் ஒருவர் இவர் உறங்குகிறாரே! என்று சொல்ல, மற்றொருவர் கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது என்றார்.

அதைத் தொடர்ந்து அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாü முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத் (ஸல்)

அவர்கள் மக்களை (நல்லவர், கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள் என்று விளக்கமüத்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). ஆதாரம் : புஹாரி (7281)

துர்வாடையை வெறுக்கும் மலக்குகள்

உயிர்வாழ உணவு உட்கொள்ள வேண்டும்; தூங்க வேண்டும் என்று எல்லா உயிரினங்களுக்கு மத்தியிலும் சில ஒற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நமக்கும் மலக்குகளுக்கும் இடையே ஒரு முக்கியமான ஒற்றுமைகளும் இருக்கின்றன. நாற்றத்தை, மோசமான வாசனையை சுவாசிப்பதை விட்டும் மனிதர்கள் விரண்டோடுவதை போன்றே மலக்குகளும் நடந்து கொள்கிறார்கள். கெட்ட வாடைகளின் மூலம் வானவர்கள் தொல்லையடைகிறார்கள்; அவதியடைகிறார்கள். இதனை பின்வரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே

அவற்றிலிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி), ஆதாரம் : முஸ்லிம் (974)

மலக்குகளும் மறைவான ஞானமும்

மலக்குகள் என்பவர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை என்றதுமே சிலர், மலக்குமார்களை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தி பல்வேறு தவறான விஷயங்களை பரப்புவதற்கு தயாராகிவிடுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், அல்லாஹ்விற்கு மறைவான ஞானம் இருப்பது போன்று மலக்குகளுக்கும் இருக்கிறது என்று சொல்வது. ஆனால் மறைவான ஞானம் என்பது

அல்லாஹ்விற்கு மட்டுமே இருக்கும் ஆற்றல். அது அவனுக்குரிய தனித்தன்மை. அந்த ஆற்றல் அவனைத் தவிர எவருக்கும் எந்த படைப்பினத்திற்கும் இல்லை என்பதுதான் உண்மை. அவ்வகையில் மலக்குகளுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பதை பின்வரும் ஆதாரங்கள் நமக்கு சொல்கின்றன.

 வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன.

அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 16 : 77)

சில முஸ்லிலிம்கள் பின்வரும் வசனத்தை வைத்து கொண்டு மலக்குகளுக்கு மறைவான ஞானம் இருப்பதாக சொல்கிறார்கள். அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? என்று மலக்குகள் கேட்டதை வைத்துக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்கள். இந்த வாதம் தவறானது என்பதற்கு அந்த வசனத்திலேயே சான்று இருக்கிறது.

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன் என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது  அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 2 : 30 லி 32)

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அல்லாஹ கூறிவதிலிலிருந்தும், “”நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை என்று வானவர்கள் வாக்குமூலம் கொடுப்பதிலிருந்தும்

அல்லாஹ் ஒருவனைத் தவிர யாருக்கும் மறைவான ஞானம் அறவே இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஒருவேளை, பூமியில் மனித இனத்தை படைக்கப்போகிற தகவலுடன் சேர்த்து அவர்களின் தன்மையையும் வானவர்களுக்கு

அல்லாஹ் தெரிவித்திருக்கலாம். அதனால் அவர்கள் அவ்வாறு கேள்வியை கேட்டிருக்கலாம் என்று நாம் விளங்கிக் கொள்ளும் போது எந்த கேள்வியும் எழாது.  இல்லையேல் மறைவான ஞானம் எனும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான தன்மையில் அவனுக்கு இணைகற்பித்தவர்களாக ஆகிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடும். மேலும் மலக்குகளுக்கு மறைவான ஞானம்

இல்லை என்ற இக்கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில்  கீழ்க்காணும் ஹதீஸ் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் ஈமான் எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழைய படியே நெஞ்சை) மூடிவிட்டார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், திறங்கள் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், யார் இவர்? எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஜிப்ரீல் என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? எனக் கேட்டார். அவர்கள், ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர்,(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், இவர் யார்? எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்கüல் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள் என்று பதிலüத்தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் திறங்கள் என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலüத்தபின்) அவர் கதவைத் திறந்தார். (நீண்ட ஹதீஸ்)

அறிவிப்பவர் : அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (349) (3207)

வானவர்களுக்கு மறைவான ஞானம் இருந்தால் வானத்தின் காவலராக இருக்கும் வானவர்கள் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் வானுலகத்தின் கதவை

திறந்திருப்பார்கள். மாறாக, யார் இவர்? என்றும், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? என்றும், (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்றும் வானத்தின் காவலர்களாக இருக்கும் வானவர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதிலிலிருந்து அவர்களுக்கு மறைவான ஞானம்

இல்லை என்பதை விளங்க முடிகிறது. இதுபோன்று விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்கும் மற்றொரு செய்தியை இங்கு காண்போம்.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம். திடீரென்று நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள். ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் (சக்கராத்தின்) நேரத்தில் சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் கபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும்

அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலிலிலிலிருந்து வெளியேறிவிடு என கூறுவார். தோல்பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும்.

அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்க அருகாமையில் அந்த உயிரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இவ்வாறு ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்யீனில் பதிவு செய்யுங்கள். அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான். (நீண்ட செய்தியின் ஒரு பகுதி)                                                            

ஆதாரம் : அஹ்மத் (17803)

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளிúறி வா என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல அவனுடைய உடலிலிலிலிருந்து உயிர் கைப்பற்றப்படும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்கமாட்டார். உடனே கம்பளி துணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தைவிட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறினார்கள்.                                                  ஆதாரம் : அஹ்மத் (17803)

நன்மை மற்றும் தீமை செய்த ஆத்மாக்கள் வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்கிறார்கள் என்பதிலிலிருந்து  வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை;  அவ்வாறு இல்லாததாலேயே யாருடைய உயிர் கொண்டு வரப்படுகிறது? என்று அவர்களுக்கு தெரியவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்



மலக்குகள் அல்லாஹ்வை பார்த்துள்ளார்களா?



அல்லாஹ்வை எந்தவொரு மனிதரும் பார்த்ததில்லை. இன்னும் சொல்வதெனில், அவனால் மனிதர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்கள் எனும் புனிதர்களும் அவனைப் பார்த்ததில்லை. ஆதிதூதர் முதல் இறுதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை எவரும் அல்லாஹ்வை பார்த்ததில்லை. மனிதர்கள் மட்டுமல்ல எந்தவொரு படைப்பினமும் அவனைப் பார்த்ததில்லை. இன்னும் சொல்வதெனில், அவனைப் பார்க்கும் தன்மையில் யாருக்கும் கண்கள் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு திருமறையில் இருக்கும் சான்றை பார்ப்போம்.



அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன் 6 : 102, 103)



ஒருவன் மட்டுமே படைப்பாளன். அவனைத் தவிர இருக்கும் அனைத்தும் படைப்பினங்கள். அந்த படைப்பினங்களை அல்லாஹ் பார்க்கிறானே தவிர அவை அவனை பார்ப்பதில்லை என்று மேற்காணும் வசனம் சொல்கிறது. அல்லாஹ்வுடன் வானவர்கள் உரையாடுவார்கள் என்று  இருக்கும் செய்திகளை வைத்துக் கொண்டு அவர்கள் அவனிடம் நேரடியாக பார்த்து பேசுவார்கள் என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. காரணம், அல்லாஹ்வைக் காணும் விதத்தில் எந்தவொரு படைப்பினும் படைக்கப்படவில்லை. இதில் வானவர்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.



மலக்குகளைப் பார்க்கும் படைப்பினம்

மிகைத்தவன் தந்திருக்கும்  மகத்தான வேலைகளைச் செய்துமுடிப்பதற்காக மலக்குகள் நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள்; பல்வேறு காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை நம்மால் பார்க்க இயலாது.  ஆனால் சேவல்களுக்கு மட்டும் மலக்குகளை பார்க்கும் தன்மை கொடுக்கப்பட்டுள்ளது. இதை இறைத்தூதரின் இனிய போதனை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து  அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்  : புகாரி (3303)

நபி (ஸல்) அவர்கள், “படைப்பினங்கள்என்று பொதுவாக குறிப்பிடாமல். சேவல்என்று குறிப்பிட்டு சொல்லியிருப்பதன் மூலம் சேவல்கள் மட்டுமே மலக்குகளைப் பார்க்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதுபோல எல்லா வானவர்களும் சேவல்களுக்கு தெரிய மாட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. ஏனெனில் நம்மைச் சுற்றி வானவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று பல செய்திகள் இருக்கின்றன. அவ்வாறு சேவல்கள் மலக்குகள் அனைவரையும் பார்ப்பதாக இருந்தால் எல்லா நேரத்திலும் கூவிக்கொண்டேதான் இருக்க வேண்டும். இவ்வாறு நடைமுறையில் இல்லை. மேலும், “”நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றனஎன்று நபிகளார் சொல்வதிலிருந்து அருளைத் தரும் வானவர்களை மட்டுமே சேவல்கள் பார்க்கின்றன என்று நாம் விளங்கலாம்.



மலக்குமார்களின் உணவு என்ன?

பூமியில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் உணவருந்தும் தன்மையில் இருப்பதைப் பார்க்கும் நாம், ஒருவேளை வானவர்களும் அவ்வாறே படைக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரேயடியாக முடிவு செய்துவிடக் கூடாது. காரணம், நமக்கு வானவர்களை பார்க்கும் தன்மை கொடுக்கப்படவில்லை. ஆகையால், இது சம்பந்தமாக புனித குர்ஆனின் வரிகளை புரட்டிப்பார்க்கும் போது, வானவர்களுக்கு பசி, தாகம் போன்ற எந்தவொரு பலவீனங்களும் இயற்கை தேவைகளும் இல்லை. அவர்கள் உணவை உட்கொண்டுதான் உயிர்வாழவேண்டும் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை அழகிய முறையில் அறிந்து கொள்ளலாம்.





நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். “”பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப் பட்டுள்ளோம்என்று அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன் 11 : 69 முதல் 73)

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்றொரு நபியான லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தாரில் இருக்கும் இறைமறுப்பாளர்களுக்கு வரவிருக்கும் வேதனையை,  அழிவைப் பற்றி எச்சரிப்பதற்காக வானவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவ்வாறு வந்த வானவர்கள் தாங்கள் செல்லும் வழியில் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து அவருக்குக் கிடைக்கவிருக்கும் குழந்தை செல்வம் எனும் நற்செய்தியை தெரிவிக்க செல்கிறார்கள். அப்போது நடந்த சம்பவத்தைதான் மேற்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன.  இந்த வசனங்களின் துணையால் வானவர்களின் தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டுவந்த காளைக் கன்றின் இறைச்சியை மலக்குமார்கள் சாப்பிடுவதற்கு நெருக்கவில்லை என்பதன் மூலம் அவர்கள் பசி என்ற பலவீனத்திற்கு, உணவருந்த வேண்டும் என்ற தேவைக்கு எதிரானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.; 



மலக்குகளின் பயணம் வேகம்

படைப்பாளனான அல்லாஹ், தமது படைப்பினங்களுக்கு மத்தியிலே பல்வேறான வேறுபாடுகளை வைத்துள்ளான். ஆதலால், அனைத்தும் உயிரினங்களும் தோற்றம், தேவைகள் போன்ற விஷயங்களில் வேறுபட்டு விளங்குவதைப் போன்று, பயணிக்கும் விஷயத்திலும் வேறுபாடுகளை கொண்டுள்ளன. பகுத்தறிவுள்ள மனிதர்களின் பயணத்திற்கும் பகுத்தறிவற்ற பறவைகளின் பயணத்திற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா? இவ்வாறு ஒவ்வொரு வாழ்வினங்களின் பயணத்திற்கும் இடையே மாற்றங்கள் வேறுபாடுகள் இருப்பது போல மலக்குமார்களின் பயணத்திற்கும் நமது பயணத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் காலத்தில் கடந்து செல்லும் நெடுந்தொலைவினை அவர்கள் ஒரு நாளிலேயே கடந்து சென்றுவிடுவார்கள். இதற்குக் கீழ்க்காணும் வசனம் சான்றாக இருக்கிறது.  

வானவர்களும் ஜிப்ரீலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான (பயண வேகத்திலே) ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.

(திருக்குர்ஆன் 70 : 4)



மேற்கண்ட வசனம், வானவர்களின் பயண வேகத்தில் ஒரு நாள் தொலைவு என்பது நாம் கணக்கிடும் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு பயணிக்கும் தொலைவுக்கு நிகரானது என கூறுகிறது. இதை சென்ற நூற்றாண்டு முன்னால் வாழ்ந்தவர்களால் விளங்கிக் கொள்ள இயலாது. நாட்கள் என்பது ஒருபோது மாறாது என்றே அவர்கள் நம்பினார்கள். ஆனால், ஒரு நாள் என்பது பயண வேகத்தைப் பொறுத்து வேறுபடும் என்பதை 1905 ஆம் ஆண்டு ஐன்ஸ்டடீன் என்ற அறிவியல் அறிஞர் கண்டறிந்தார். இது ரிலேட்டிவிட்டி என்ற சார்பியல் கோட்பாடு எனப்படுகிறது. உதாரணமாக, இநத பூமியில் இருந்து ஒருவர் ஒளியின் வேகத்தில் விண்ணை நோக்கி பயணம் செய்கிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் (3,00,000) கி.மீ. இந்த பயணவேகத்தில் சென்று ஐம்பது ஆண்டுகளில் செய்கிற காரியங்களை செய்துவிட்டு பூமிக்கு திரும்பி வந்தால் இங்கு சிறிது நேரமே கழிந்திருக்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்வெளி பயணம் சென்று பல வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை ஒரே இரவில் நிறைவேற்றிவிட்டு பூமிக்கு வந்தார்கள். இவ்வாறு சார்பியல் கோட்பாட்டை எழுதப்படிக்காத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளார்கள் என்பதன் மூலம் குர்ஆன் இறைவனின் கூற்றாகதான் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்


No comments:

Post a Comment