தீய நண்பன்
ஜீனத் நிஸா, ஆசிரியை அர்இர்ஷாத் கல்வியகம், மேலப்பாளையம்
கெட்ட தோழன்
நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.
தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான்.
அபூமூசா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவ னிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!
நூல் : புகாரி 2101
நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். அல்குர்ஆன் 9:67