Tuesday, June 28, 2011

மிஃராஜ்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்.



மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்.

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.
ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.
இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)
இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.
(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)
இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.
நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

Thursday, June 23, 2011

இந்த வார உணர்வில் (ஜுன் 24)

இந்த வார உணர்வில் (ஜுன் 24)
விரைவில்
ஆன்லைன் எடிஷன்

Monday, June 20, 2011

Saturday, June 18, 2011

உணர்வு


உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-40 ஜுன் 03 –09

 Read Paper Click Here

Monday, June 13, 2011

நடைமுறைக்கு வந்த நபி வழி

நடைமுறைக்கு வந்த நபி வழி
உரை : எம்.எஸ்.சுலைமான்.


Sunday, June 12, 2011

தீன்குலப் பெண்ணின் குணங்கள்


ஏழுத்து : ஏம்.ஏம்.சைபுல்லாஹ்
ஆறாவது குணம்

பயனுள்ள கல்வியைத் தேடுவதில் ஆசை கொள்ள வேண்டும்

عَنْ عَائِشَةَ أَنَّ أَسْمَاءَ سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِ الْمَحِيضِ فَقَالَ تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَتَهَا فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطَهَّرُ بِهَا فَقَالَتْ أَسْمَاءُ وَكَيْفَ تَطَهَّرُ بِهَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِينَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ فَقَالَ تَأْخُذُ مَاءً فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تُبْلِغُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا ثُمَّ تُفِيضُ عَلَيْهَا الْمَاءَ فَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ رواه مسلم
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளிய-ன் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். அதற்கு அஸ்மா (-) அவர்கள், "அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்' என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன். மேலும், அஸ்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், "தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக்கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 
நூல் : முஸ்லிம் 552

தீன்குலப்பெண்மணி


இறைவனை நினைவுகூருவோம்

எழுத்து : ஜீனத் நிஸா

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர்.
எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர்களையோ தனக்கு விருப்பத்திற்குரியவர்களையோ குடும்பத்தினரையோ தொழிலில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ  தன்னை விட்டு கடந்து போன தனக்கு வர விருக்கின்ற இன்ப துன்பங்களை பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இச் சிந்தனை போக்குகள் அவனுடைய நிம்மதி தூக்கம் உணவு போன்ற அன்றாடம் அவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் நிறுத்திவிடுகின்றது. இச்சிந்தனை போக்குகளின் தாக்கம் சில நேரங்களில் தவறான முடிவுகளின் பக்கமும் தற்கொலைகளின் பக்கமும் கொண்டு செல்கின்றது.
நம்முடைய செயல்பாடுகள் அனைத்தையும் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிந்தனை போக்கு இறை நினைவு மட்டுமே!
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன்  62 :10
நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 8 : 45
"உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலி-மையை அதிகப் படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!'' (என்றும் அவர் கூறினார்).
அல்குர்ஆன் 7:69

உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-41 June 10-16, 2011

இப்படியும் சில தஃப்ஸீர்கள்

        "வன்ஹர்' என்பதன் பொருள் 
தொடர்: 6
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

 

ஒரு அரபு சொல்லுக்குப் பொருள் செய்வதாக இருந்தால் அரபு அகராதியின் படி பொருள் செய்ய வேண்டும். குறிப்பாக, குர்ஆனில் உள்ள ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்யும் போது இதே வார்த்தை குர்ஆனின் ஏனைய இடங்களில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ஹதீஸ்களில் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைக் கவனித்து பொருள் செய்ய வேண்டும்.
இந்த அணுகுமுறை இறைவனுடைய வார்த்தையை சரியான முறையில் புரிய, அவ்வார்த்தைக்குப் பிழையில்லாத பொருள் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த வழிமுறையை மீறும் பட்சத்தில் மொழியாக்கம் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத பொருளை உதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. இந்த வகையிலமைந்த ஒரு விளக்கத்தை இங்கே காண்போம்.
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
அல்குர்ஆன் 108:2
எந்த ஒரு வணக்க வழிபாட்டையும் "இறைவனுக்காக' என்ற தூய எண்ணத்துடன் செய்திட வேண்டும் என்ற அடிப்படையில், "இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவீராக 'என இவ்வசனத்தில் இறைவன் நபிகளாருக்குக் கட்டளையிடுகின்றான்.
"அறுப்பீராக' என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வன்ஹர் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இது நஹ்ர் என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. இவ்வார்த்தைக்கு அறுத்தல் என்பது பொருளாகும்.
இந்த வார்த்தை இதே பொருளில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அறுத்துப் பலியிடுவதற்கான நாள் என்ற பொருளில் யவ்முன் நஹ்ர் என்ற சொல் ஹதீஸ்களில் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க புகாரி 67, 369, 968)
வன்ஹர் என்பதற்கு அனைத்து தர்ஜுமாக்களிலும் அரபு அகராதியின் படி "அறுப்பீராக' என்றே மொழிபெயர்த்துள்ளனர்.
ஆனால் இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம் வித்தியாசமாக இருக்கின்றது.
அரபி ??? 1
நூல்: அத்துர்ருல் மன்சூர்
பாகம் 15 பக்கம் 704
நீர் அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்குவீராக என்று பொருள் என அபுல் அஹ்வஸ் கூறுகிறார்.
அரபி ??? 2
நூல்; அத்துர்ருல் மன்சூர்
பாகம் 15 பக்கம் 703
அதாஃ கூறுகிறார்: நீர் தொழும் போது ருகூவிலிருந்து தலையை உயர்த்தி சீராக நிற்பீராக என்று பொருளாகும்.
அரபி ??? 3
தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்துவீராக என்று பொருளாகும் என அபூ ஜஃபர் கூறுகிறார்.
நூல்: அத்துர்ருல் மன்சூர்
பாகம் 15 பக்கம் 702
வன்ஹர் என்ற வார்த்தைக்குப் பொருள் ஒருவர் கிப்லாவை முன்னோக்குதல் என்கிறார். மற்றொருவர் சீராக நிற்குதல் என்கிறார். மிகவும் எளிதான அனைவருக்கும் நன்கு தெரிகின்ற ஒரு வார்த்தைக்கு இந்த இமாம்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விளக்கமளித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த வார்த்தைக்கு அரபு அகராதியிலும், ஏனைய ஹதீஸ்களிலும் பொருளைப் பார்த்திருந்தால் இத்தகைய விளக்கத்தை இமாம்கள் அளித்திருக்க மாட்டார்கள்.
குர்ஆன் வசனங்களை சரியாகப் புரிந்து கொள்ள இமாம்கள் கூறும் விளக்கங்கள் தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஏகத்துவம்

சோதனையின்றி சொர்க்கமில்லை 

Or do you think that you will enter Paradise while such [trial] has not yet come to you as came to those who passed on before you? They were touched by poverty and hardship and were shaken until [even their] messenger and those who believed with him said,"When is the help of Allah ?" Unquestionably, the help of Allah is near.

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம், பள்ளிவாசல் தடை, அடக்கத்தலம் மறுப்பு, திருமணப் பதிவேடு மறுப்பு, பொதுக்கூட்டத்திற்குத் தடை, பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம் கண்டது தான் இந்த ஜமாஅத்! அப்போதெல்லாம் தவ்ஹீது அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதும், ஆக்கிரமித்து நின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
அல்குர்ஆன் 2:214
அந்த அளவுக்குத் தவ்ஹீதுவாதிகள் பாதிக்கப்பட்டார்கள்; சோதிக்கப்பட்டார்கள். இந்த வசனம், உதிரம் சிந்திய அவர்களின் காயத்திற்கு ஒற்றடமானது. உடைந்து போன அவர்களது உள்ளத்திற்கு ஆறுதலானது. ஒவ்வொரு தவ்ஹீதுவாதிக்கும் வேதனையே வாழ்க்கையானது.
தவ்ஹீதுவாதிகளுக்கு எதிர்ப்பலைகள், எரிமலைகள் புதிதல்ல! அல்லாஹ்வின் அருளால் அவர்கள் எந்த எதிர்ப்பலையிலும், எரிமலையிலும் எதிர் நீச்சல் போடுவதற்குத் தெம்பும் தைரியமும் கொண்டிருக்கிறார்கள்.
இதை இங்கு சொல்வதற்குக் காரணம், ஏகத்துவாதிகளின் வியர்வையிலும் உழைப்பிலும் வளர்ந்த துரோகி ஜவாஹிருல்லாஹ், "அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்'' என்று தேர்தலுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் கொக்கரித்திருப்பது தான்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் இவர் இதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கருவருப்பதற்கு இந்தத் தேர்தல் களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்.
திருவிடைச்சேரி சம்பவத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று திமிராக எக்காளமிடுகின்றார்.
ஏதோ இவருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கிடைத்தது போன்று பேசுகின்றார். இவருக்குக் கிடைத்திருப்பது ஒரு எம்.எல்.ஏ. பதவி தான். அதுவும் அதிமுக போட்ட பிச்சை தான். இதற்கே இந்த ஆட்டம் போடுகிறார். கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை.
இருப்பினும் அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்து, தவ்ஹீத் ஜமாஅத்தை அடக்க நினைத்தால் இவருக்கு நாம் சொல்லிக் கொள்வது, தன்னைக் கடவுள் என்று வாதிட்ட ஃபிர்அவ்னிடம் வீர முழக்கமிட்ட மந்திரவாதிகளின் அக்னி வரிகளைத் தான்.
"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்'' என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
"எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்று அவர்கள் கூறினார்கள்.
அல்குர்ஆன் 20:71, 72

ஏகத்துவம் ஜூன் 2011