Wednesday, August 10, 2011

தீன்குலப்பெண்மணி ஆகஸ்ட் 2011

அருள்மிகு ரமலானும் ற்ற வேண்டிய பணிகளும்

ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க லைலத்துல் கத்ரும் ஏரளாமான நன்மைகளை ஈட்டித்தரும் இந்த மாதத்தில் நன்மைகளை அள்ளித்தரும் பணிகளை நாம் செய்ய வேண்டும்.
சிறிய அமல்களிலும் நிறைய நன்மைகளை பெறுவதற்குரிய மாதமாக இருப்பதால் இந்த மாதத்தில் நல்லறங்கள் செய்வதற்கு மக்களை ஆர்வமூட்டும் பணிகளை செய்யவேண்டும். துண்டுபிரசுரங்கள், பயான்கள் மூலம் மக்களிடம் ஆர்வமூட்டலாம்.
இக்காலங்களில் மக்கள் அதிகம் பள்ளிவாசலுக்கு வருவதால் பள்ளிகளில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், ஹதீஸ் நூல்கள், குறிப்பிட்ட தலைப்புகளில் உள்ள நூல்கள், சி.டி. மற்றும் டி.வி.டிகள் அதிகளவில் வைத்து மக்கள் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் ஏற்பாடுகளை செய்யலாம்.
ஸஹர் நேரத்தில் மெகா டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கத் தூண்டும் விதமாக விளம்பரங்கள் செய்ய வேண்டும். வசதியிருந்தால் நெட் வசதி மூலம் சென்னையில் நடக்கும் பயான்களை ஸ்கோப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.
மக்களுக்கு பயன்தரும் தலைப்புகளில் பயான்கள் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இரவுத் தொழுகையில் மக்கள் தொழுவதற்கு வசதிகளை செய்யவேண்டும். குறிப்பாக பெண்கள் தொழுவதற்கு முழு வசதிவாய்ப்புகளை நிறைவாக செய்து தர வேண்டும்.
பள்ளிவாசல்களில் இடையூறு இன்றி தொழுவதற்கும் திக்ர் செய்வதற்கும் திருக்குர்ஆன் ஓதுவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
முடியுமானால் நோன்பாளிகள் நோன்பு துறப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யலாம். கடைசி பத்து நாட்களில் அதிகம் இறைவணக்கம் செய்வதற்கு ஏற்றவாறு முடிந்தால் ஸஹர் உணவுகள் அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுடன் அவர்கள் மன நிறைவாக வணக்கத்தில் ஈடுபட ஏற்பாடுகளை செய்யலாம்.
அதிகமாக மக்கள் வரும் நாட்களில் அவர்களிடம் இருக்கும் அறியாமையை விளக்கி உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வகையில் நல்ல பயான்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நமது ஜமாஅத்தின் பணிகளையும் அவர்களுக்கு விளக்க வேண்டும்.
இரமலான் மாதம் தொடர்பாக நபிமொழிகளில் இடம்பெற்றிருக்கும் அறிவுரைகளை தினமும் ஒவ்வொரு செய்தியாக கரும்பலகைகளில் எழுதி போடலாம். மக்களின் மார்க்க அறிவை தூண்டும் விதமாக பரிசு போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தலாம். குறிப்பாக பெண்களின் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களிடம் மார்க்க அறிவை பெருக்கலாம்.
இரமலான் மாதம் முப்பது நாட்களும் மக்களிடம் நல்லபணிகளை செய்தும் அவர்களை செய்யத்தூண்டியும் இந்த வருட இரமலான் மாதத்தின் நன்மைகளை நிறைவாக பெற்றுக் கொள்ள முயற்சிகளை செய்வோம்.

No comments:

Post a Comment