Sunday, August 14, 2011

முஸ்லிம்களை நீங்கள் கூறுபோட்டது ஏன்?

இஸ்லாத்தில் ஏன் பிரிவினைகளை ஏற்படுத்துகிறீர்கள். உங்களால் பல முகல்லாக்கள் இரண்டுபட்டு விட்டது இது சரியா?

தில்
தவ்ஹீத் பிரச்சாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட பிரிவினை இஸ்லாத்தில் ஏற்பட்ட பிரிவினை அல்ல. இஸ்லாத்தின் நன்மைக்காக ஏற்பட்ட பிரிவினை.
தவ்ஹீத் வருவதற்கு முன்பு தமிழகத்தில் அனைத்து முகல்லாக்களும் சத்தியத்தில் ஒன்றாய் இருந்து நாம் வந்த பிறகே அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டால் தான் இஸ்லாத்தில் ஒன்றாய் இருந்தவர்களைப் பிரித்து விட்டீர்களே என்று குறை கூற முடியும்.
ஆனால் அந்த நேரத்தில் இப்படிப்பட்ட நிலை இருக்கவில்லை. எல்லா பகுதிகளிலும் ஊர் ஜமாத்தார்கள் மக்களை அசத்தியத்தில் கட்டிப்போட்டு வைத்திருந்தனர். அப்போது மக்கள் இணைவைப்புக் காரியங்களையும் பித்அத்தான அநாச்சாரங்களையும் சமூகத் தீமைகளையும் அரங்கேற்றுவதில் தான் ஒன்றுபட்டு இருந்தனர்.
தவ்ஹீத் பிரச்சாரம் வந்த பிறகு இந்த கூட்டத்திலிருந்து கணிசமான மக்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஏகத்துவத்தின் பக்கமும் நபிவழியின் பக்கமும் திரும்பினர். இப்படி அவர்கள் பிரிந்து வந்தது நல்லதா? கெட்டதா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பிரிவினை ஏற்பட்டதன் விளைவு முன்பு சமூகத்தில் மிகவும் விமரிசையாக அரங்கேறிய பயங்கரமான தீமைகள் பல இடங்களில் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் குறைந்து போயுள்ளன. இஸ்லாம் இதைத் தானே எதிர்பார்க்கின்றது.
எனவே தவ்ஹீத் பிரச்சாரம் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தவில்லை. மாறாக அசத்தியத்திலிருந்து மக்களை நல்வழிப்படுத்தி இஸ்லாத்தை நிலைநிறுத்தியுள்ளது.
நம்முடைய இம்மை மறுமை வாழ்வு சிறக்க இது அவசியமானது. இந்த பிரிவினை அவசியம் என்று குர்ஆனும் நபிமொழியும் வலியுறுத்துகின்றது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு

onlinepj.cpm

No comments:

Post a Comment