Thursday, October 06, 2011

இணையதளத்தில் சாவுக்கடல் ஆவணம்

இணையதளத்தில் சாவுக்கடல் ஆவணம் 

குகைவாசிகள் பற்றி திருக்குர் ஆன் கூறும் போது ஆவணச்சுருள்களை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றதாக்க் கூறுகிறது. அதை மெய்ப்படுத்தும் வகையில் அந்த ஆவணச்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விபரத்தை நம்முடைய திருக்குர் ஆன் தமிழாக்கத்திலும் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
சாவுக் கடல் (Dead Sea) ஆவணச் சுருள் தற்போது இணையதளத்தில் கிடைக்க உள்ளது. இயேசு போதித்த கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு பவுல் என்பவர் உண்டாக்கிய பொய்க் கிறித்தவக் கொள்கை ஆட்டம் காணும் நாள் நெருங்கிவிட்டது.
இஸ்ரேல் அருங்காட்சியகமும், கூகுலும் இணைந்து சாவுக் கடல் (Dead Sea) ஆவணச் சுருளை இணையதளத்தில் வெளியிடும் திட்டத்தை துவங்கி உள்ளது. 2016 -ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் முடிவடைந்து ஆவணச் சுருள் முழுவதும் பொது மக்களின் பார்வைக்கு வெளிவரும். 
இஸ்ரேலிய அரசு அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.dss.collections.imj.org.il) சுருளின் சில பகுதிகள்  வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் 5 முக்கிய ஆவணச் சுருள்களின் தொகுப்பு  வெளியிடப்பட்டுள்ளது.
அவை
  • பைபிளில் (பழைய ஏற்பாட்டில்) இடம் பெற்றுள்ள ஏசயா (Isaiah) என்னும் புத்தகம்,
  • கோயில் சுருள் (Temple Scroll) ,
  • மற்றும் மூன்று புத்தகங்கள்.
இதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய, இதனுடைய மேற்பரப்பு அதிநவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. 
2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படும் இந்த ஆவணச் சுருள் 1947 -ல் ஜெருசலேமிலிருந்து 13 மைல் தொலைவில் சாவுக் கடலின் வடமேற்குக் கரையில் உள்ள 11 குகைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1300 அடி கீழே உள்ளது.  தொடர்ந்து நடந்த ஆய்வில் 1952 -ஆம் ஆண்டு 15,000 ஆவணச் சுருள்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.  இவை 500 ஆவணச் சுருள்களின் தொகுப்பாகும்.
கோவில் சுருள் (Temple Scroll) , என்று சொல்லப்படும் சுருள் தான் இருப்பதிலேயே அளவில் பெரிய சுருள். இது 28 அடி நீளம் உடையது. இதில் சில பகுதிகள் சிதிலமடைந்து 26.7 அடி உள்ளது.
மொத்தமாக 825 முதல் 870 ஆவணச் சுருள்களின் தொகுப்புகள் கண்டெடுக்கப்பட்ட. 
இந்தச் சுருள்களை தொல் பொருள் ஆராய்ச்சியளர்கள் பைபிளைச் சார்ந்தவை, பைபிளைச் சாராதவை என இரண்டு வகைகளாகப் பிரிகின்றனர்.  இந்தச் சுருள்கள் விலங்கினங்களின் தோலினாலும், காப்பர் தகடுகளினாலும் உருவாக்கப்பட்டுள்ள.
இவை அரபி எழுத்துக்கள் போல் வலமிருந்து இடது பக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதில் குறியீடுகள் இல்லை. எழுத்து மட்டும் தான் உள்ளது (பண்டைய கால அரபி எழுத்துக்கள் போல்).
பத்திகளைப் பிரிப்பதற்கு மட்டும் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ள. சில இடங்களில் வார்த்தைக்கு இடையில் இடைவெளி கூட இல்லை. தற்போது இவை அனைத்தும் இஸ்ரேலின் தொல்பொருள் துறையிடம் (Israel Antiquities Authority) உள்ளது (ஒரு சில துண்டுச் சுருள்களை தனி நபர்களும் வைத்துள்ளனர்). 
1947 - ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்தச் சுருள்கள் இத்தனை ஆண்டுகாலம் ஒரு சில மத குருமார்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால்  தற்போது அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு ஆன்லைனில் வந்துள்ளது.  மூல சுருள்கள் (இஸ்ரேலின் கட்டுபாட்டிலிருக்கும்) ஜெரூசலேத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஒவ்வொரு நுழைவாயிலிலும், மின்காந்த அட்டைகள், சங்கேத வார்த்தைகள் (Secret Code) மூலமே நுழைய முடியும்.
2000 -ஆம் ஆண்டுகளுக்கு முன் ஜெரூசலேத்தைச் சேர்ந்த யூதர்களால் எழுதப்பட்ட அல்லது தொகுக்கப்பட்டது தான் இந்தச் சுருள்கள், பின்னர் இவர்கள் ஜெரூசலேமிலிருந்து சாவுக் கடலின் அருகில் உள்ள கும்ரான் (Qumran) என்ற பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர் என வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிறித்துவர்களால் மறைக்கப்பட்ட ஹீப்ரு பைபிளின் உண்மைகள் மற்றும் கிறித்துவ மதம் உருவான உண்மை வரலாறு போன்ற தகவல்கள் இந்த சுருள்களில் உள்ளதாக நம்பப்படுகின்றது.  
இதை ஸ்கேன் செய்து புகைப்படம் எடுக்கும் பணி, முன்னால் நாசா விஞ்ஞானியின் உதவியுடன் நடைபெற்றது. இதற்காக கலிபோர்னியாவிலிருந்து வர வழைக்கப்பட்ட 2.5 லட்சம் டாலர் மதிப்புள்ள கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. 
மறைக்கப்பட்ட இந்த ஆவணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும் அது ஹீப்ரு மொழியில் உள்ளதால் அந்த மொழியை அறிந்தவர்களுக்கு மட்டுமே உடனடியாக பயன் கிடைக்கும். அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படால் அதை ஒட்டி உலகின் அனைத்து மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டு விடும்.
அப்போது பவுல் உண்டாக்கிய போலி கிறித்தவம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விடும். இயேசு உண்டாக்கிய உண்மை கிறித்தவமான ஏகத்துவக் கொள்கை மேலும் புத்துயிர் பெறும். இன்ஷா அல்லாஹ்
தமிழில்
S.சித்தீக்

சிதிலமடைந்த சுருள்களில் ஒன்று

 சிதிலமடையாமல் முழுமையாக கிடைத்த பிரதிகளில் ஒன்று


கும்ரான் மலைக் குகை



கும்ரான் மலைக்குகை

Jazakallahu Hairan: onlinepj.com


No comments:

Post a Comment