Monday, May 30, 2016

கத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 2016

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)

கடந்த 27-05-2016 வெள்ளிகிழமை அன்று (QITC) ‎கத்தர் மண்டலம்‬ சார்பாக (ஹமத் மருத்துவமனை உடன் இணைந்து) மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது.


ஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக ‪ இந்திய‬ ‎இலங்கை‬ ‎முஸ்லிம்‬ மற்றும் ‪‎மாற்றுமத‬ சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ‎ஹமத் மருத்துவ‬ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் ‪இரத்ததானம்‬ அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் வெள்ளம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும்‪ நூற்றி பதினேழு‬ நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை‬ ‪இரத்த வங்கி‬ ‪மருத்துவர்கள்‬,‪ செவிலியர்கள்‬, ‪ஆய்வாளர்கள்‬ என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.


‪‎கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக குருதி கொடையளித்த‬ சகோதர்களுக்கும்‬, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது‪ இதயம் கனிந்த‬ ‪‎நன்றிகளை‬ தெரிவித்துகொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்...


































No comments:

Post a Comment