வானவர்கள்
மலக்குகள் ஆண்களா? பெண்களா?
வானவர்கள் என்று சொன்னதும், அவர்கள் ஆண்களாக இருப்பார்கள் என்று தவறுதலாக நினைத்துவிடக் கூடாது. அதுபோல, அவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் கருதிவிடக் கூடாது. காரணம், வானவர்களுக்குள் ஆண், பெண் என்ற பால்வேற்றுமையிலான பாகுபாடு அறவே கிடையாது. காரணம், ஒருவேளை வானவர்கள் ஆண்களாக இருந்தால் உறுதியாக
அவர்கள் பெண் துணையின் பக்கம் தேவையுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் வானவர்கள் பெண்கள் கிடையாது என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக கூறியுள்ளான்.
"உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா?'' என்று இவர்களிடம் கேட்பீராக! வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
(குர்ஆன் 37 : 149, 150)
அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்துவிட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
(திருக்குர்ஆன் 43 : 19)
உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கிவிட்டு, தனக்கு வானவர்களைப் புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்! (திருக்குர்ஆன் 17 : 40)
வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது. மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.
(திருக்குர்ஆன் 53 : 26, 27)
இதன் மூலம், வானவர்கள் என்ற படைப்பினம் பெண்களாகவும் இல்லை; அதற்கு எதிர்பாலினமான ஆண்களாகவும் இல்லை என்பதை சந்தேகமற புரிந்து கொள்ளலாம். மேலும், வானவர்கள் பெண்களாக அல்லது ஆண்களாக இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வது மாபெரும் குற்றம் என்றும், அவ்வாறு கற்பனையான கருத்தைத் தெரிவிப்பவர்கள் மறுமையை சரியாக நம்பாதவர்கள் என்றும் அல்லாஹ் கண்டித்திருப்பதை என்றென்றும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறகுகளைக் கொண்ட மலக்குகள்
அல்லாஹ் தமது விருப்பத்தின்படி தமது படைப்பினங்களுக்குப் பல்வேறு விதவிதமான தோற்றங்களை, தகவமைப்புகளைக் கொடுத்துள்ளான். கிளியின் மூக்கு, ஒட்டகத்தின் திமில், மயிலின் தோகை போன்ற அமைப்பை உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் வானவர்கள் என்ற படைப்பினத்திற்கு இறக் கைகளைக் கொடுத்துள்ளான். அதே நேரம், மலக்குகள் அனைவருக்கும் ஒரே விதமான எண்ணிக்கையில் இறக்கைகள் இருக்காது. மாறாக, எண்ணிக்கையில் வேறுபடும் விதத்தில் அவர்களுக்கு இறக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். உதாரணமாக வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு 600 இறக் கைகள் இருக்கின்றன. இதே எண்ணிக்கையில்தான் மற்ற வானவர்களுக்கும் சிறகுகள் இருக்கும் என்று சொல்லக்கூடாது. இந்த தகவல்களைப் பின்வரும் குர்ஆன் வரிகள் மற்றும் ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் (தமது) படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(திருக்குர்ஆன் 35 : 1)
அபூ இஸ்ஹாக் அஷ் ஷைபானீ அவர்கள் கூறியதாவது :
நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் அவர்கüடம், "(வஹீ லி வேத வெüப்பாடு நின்று போயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை நெருங்கி வர) அந்த நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கு இடையிலுள்ள நெருக்கத்தை போல் அல்லது
அதை விடச் சமீபமாக இருந்தது. பிறகு, "அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்' என்னும் (53:9,10) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது
அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவருடைய நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்'' என்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கüடம் தெரிவித்தார்கள் என்று விளக்கினார்கள்.
ஆதாரம் : புகாரி (3232)
மலக்குகளின் நிலைமாறும் வடிவம்
ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் வாழ்விடம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்றவாறு வடிவங்கள் தோற்றங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பறப்பதற்கு ஏற்றவாறு பறவைகளுக்கு இருக்கும் சிறகுகள். நீரில் வாழ்வதற்கு ஏற்றவாறு மீன்களுக்கு இருக்கும் செதில்கள் என்று இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்னும் சொல்வதெனில், ஒரே இனமாக இருந்தாலும் குளிர்பிரதேசம் மற்றும் வெயில் பிரதேசத்தில் வாழ்பவைகளுககு இடையே தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதைப் பார்க்கிறோம். இதுபோலவே, மலக்குகளின் நிலையும் இருக்கிறது. மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குள் பால் வேறற்றுமையிலான வேறுபாடு கிடையாது. அவர்களுக்கு பசி, தாகம் போன்ற பலவீனங்கள் இல்லை. அவர்களுக்கு பிரத்யேக தோற்றமாக சிறகுகள் இருக்கும் என்பது போன்ற பொதுவான அம்சங்கள் மலக்குகளுக்கு இருந்தாலும், அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப வடிவம் கொண்டவர்களாக, சூழ்நிலைக்கு ஏற்ப உருவம் மாறும் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது
அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் "ஹிரா' குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பலவா நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை "ஹிரா' குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, "ஓதுவீராக'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத்தெரிந்தவன் இல்லையே!'' என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்)
அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக'' என்றார். அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக!'' என்றார். அப் போதும் "நான் ஓதத்தெரிந்தவன் இல்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "அலக்' (அட்டை
போன்று ஒட்டிப் பிடித்துத் தொங்கும்) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி!'' எனும் இறைவசனங்களை (96:1 லி5) அவர் ஓதினார்.
அறிவிப்பர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி (3)
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள் : நான் நடந்துபோய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிரிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே, நான் "ஹிரா'வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு நான் அச்சமடைந்தேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி (என் வீட்டாரிடம்) எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்று சொன்னேன். (அவர்களும் போர்த்தி விட்டார்கள்.) அப்போது அல்லாஹ், "போர்த்தியிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளை தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்'' எனும் வசனங்களை (74:1லி5) அருளினான். பின்னர் வேதஅறிவிப்பு (வஹீ) தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : புகாரி (4)
முதலில், ஹிரா குகையில் இருந்த நபி (ஸல்) அவர்களைக் கட்டித் தழுவும் விதத்தில் சிறிய வடிவம் கொண்டவராக ஜிப்ரீல் (அலை)
அவர்கள் வருகிறார்கள். பிறகு மற்றொரு முறை அவர்களே வானம் மற்றும் பூமியின் இடைவெளியை மறைக்கும் பிரமாண்டமான தோற்றத்தில் வருகிறார்கள். இதே ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபிகளாரிடம் மனித வடிவத்திலும் வந்துள்ளார்கள். இவரல்லாத மலக்குமார்களும் தங்களது இயல்பான தோற்றத்தில வராமல் மனித வடிவத்தில் வந்து சென்றுள்ளார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக
அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று
அவர்கள் கூறினர்.
(திருக்குர்ஆன் 11 : 69 முதல் 73)
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக
அவருக்குத் தோற்றமளித்தார். "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 19 : 16/19)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான்.
அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று
அந்த வானவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார். அதற்கு
அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம் (5016)
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில்
(அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஈமான் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஈமான் என்பது,
அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், "இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்'' என்றார்கள்.
அடுத்து "இஹ்ஸான் என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்)''
என்றார்கள்.
அடுத்து அவர் "மறுமை நாள் எப்போது?'' என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (லிஉம்மை விட) மிக அறிந்தவரல்லர். (அது பற்றி எனக்கும் தெரியாது; உமக்கும் தெரியாது. வேண்டுமானால்,) அதன் (சில)
அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்'' என்று கூறிவிட்டு, "உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது...'' எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்)
அவர்கள் "அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள்'' என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இ(ப்போது வந்துபோன)வர்தாம் ஜிப்ரீல். மக்களுக்கு
அவர்களது மார்க்கத்தைக் கற்றுத் தர வந்திருந்தார்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி (50)
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரரிலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சில வேளைகளில் மணியோசையைப் போன்று என்னிடம் வேதஅறிவிப்பு (வஹீ) வரும். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக்கூடியதாக இருக்கும். மணியோசை மூலம் அவர் (வானவர்) கூறியதை நான் மனனமிட்டுக் கொண்ட நிலையில் அது நிறுத்தப்படும். இன்னும் சில வேளைகளில் வானவர் ஒரு மனிதரைப் போன்று எனக்குக் காட்சியளித்து என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி (2)
அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கüடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி (ஸல்)
அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்கüடம், "இவர் யார் (தெரியுமா)?'' என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், "இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா'' என்று பதிலüத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்
திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்பு தான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரிய வந்தது.)'' என்று கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி 4980
இவ்வாறு தங்களது பணிக்கேற்ப வடிவம் கொண்டவர்களாக மலக்குகள் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக அர்ஷை சுமக்கும் மலக்குகளை குறிப்பிடலாம். ஏழு வானங்கள் மற்றும் பூமியை உள்ளடக்கியிருக்கும் அர்ஷை சுமப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் அதற்கேற்ப மாபெரும் வடிவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்குச் சான்றாக, அவர்களைப் பற்றி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதைக் காண்போம்.
அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அ(ர்ஷை சுமக்கும் வான)வரின் காது சேனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளி என்பது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : அபூதாவூத் (4102)
மலக்குகள் அழகானவர்களா?
அல்லாஹ் அழகை விரும்பக்கூடியவன். அவன் அழகிய முறையில் தமது படைப்பினங்களை படைத்துள்ளான். அழகிய முறையில் படைக்கப்பட்ட மனித இனத்தில் வெண்மை, கருப்பு என்று வேறுபாடு இருப்பது போல, மலக்குகள் மத்தியிலும் இதுபோன்ற வேறுபாடு இருக்கின்றது. அழகான தோற்றம் கொண்ட மலக்குமார்கள் இருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் செய்தி நமக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம். திடீரென்று நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் (சக்கராத்தின்) நேரத்தில் சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் கபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு
அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலில் இருந்து வெளியேறிவிடு என கூறுவார். தோல்பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போல அந்த (ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும். அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல்
அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள்.
ஆதாரம் : அஹ்மத் (17803)
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளிúறி வா என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல அவனுடைய உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்படும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்க மாட்டார். உடனே கம்பளி துணியில் வைத்து விடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தைவிட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்பார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக் கப்படாது என்று கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத் (17803)
வளரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment