இமாம்களின் மாற்றுக்கருத்துகள்
இமாம்கள் ஒரு கருத்தைக் கூறிவிட்டால் அதை மறுத்து ஆய்வு செய்யக் கூடாது என்று மத்ஹபை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் பின்பற்றும் மத்ஹப் நூல்களில் ஒரு இமாமின் கூற்றை இன்னொரு இமாம் மறுத்து கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆசிரியரின் கருத்தையே மாணவர்கள் மறுத்து கூறியுள்ள செய்திகள் ஏராளம் மத்ஹப் நூல்களில் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக தமிழக அரபிக் கல்லூரியில் பாடத்திட்டத்தில் உள்ள ஹனஃபி மத்ஹப் நூலான முக்தஸர் அல்குதூரி என்ற நூலில் இடம்பெற்றுள்ள சில செய்திகளை மட்டும் இங்கே தருகிறோம். இதில் அபூஹனீஃபா இமாமின் பிரசித்தி பெற்ற மாணவர்களான அபூயூசுஃப், முஹம்மத் ஆகியோர் தம் ஆசிரியருக்கு எத்தனை விஷயங்களில் மாற்றுக் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பதை கவனியுங்கள்.
... ( : 8)
கிணற்றில் எலியோ அல்லது மற்றவைகளோ பெற்றுக் கொள்ளபட்டு அது எப்போது (கிணற்றில்) விழுந்தது என்று தெரியவில்லையானால் ... அது ஊதிப்போய் இருந்தாலோ அல்லது வெடித்திருந்தாலோ (அதில் உளூச் செய்து தொழுதவர்கள்) மூன்று பகல், மூன்று இரவு தொழுகையை திரும்பத் தொழவேண்டும். இது அபூஹனீஃபாவின் கூற்றாகும். எப்போது விழுந்தது என்று உறுதியாகும் வரை அவர்கள் மீது எதையும் திரும்ப தொழுதல் இல்லை. இது அபூயூஃசுப், முஹம்மதின் கருத்தாகும்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 8)
( : 10)
அபூஹனீஃபா, முஹம்மத் அவர்களின் கருத்துப்படி மண்ணின் இனத்தில் ஆன மண், மணல், கல், சாந்து, சுண்ணாம்புகல், சுருமா, (பலநிற) கற்கள் போன்ற பொருள்களில் எந்த ஒன்றிலும் தயம்மும் செய்வது கூடும். அபூயூசுஃப் அவர்களின் கருத்துப்படி மண், மணல் இவற்றைக் கொண்டே தவிர மற்றவைகளில் கூடாது. (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 10)
( : 11)
அபூஹனீஃபா, முஹம்மத் அவர்களின் கருத்துப்படி பயணத்தில் தண்ணீர் (இருப்பதை) மறந்துவிட்டு தயம்மும் செய்து தொழுதுவிட்ட பின்னர் தண்ணீர் (இருப்பது) நினைவுக்கு வந்தால் அவர் தொழுகையை திரும்ப தொழமாட்டார். அபூயூசுஃப் கருத்துப்படி திரும்ப தொழுவார். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 11)
( : 19-20)
லுஹர் தொழுகையின் முதல் நேரம், சூரியன் சாயும் போது, அதன் இறுதி நேரம், ஒரு பொருளின் நிழல் அது போன்று இரு மடங்கு மாறும் வரையாகும். இது அபூஹனீஃபாவின் கருத்தாகும். (லுஹரின் இறுதி நேரம்) ஒரு பொருளின் நிழல் அதுபோன்று மாறும் வரையாகும். இது அபூயூசுஃப், முஹம்மதின் கருத்தாகும். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 19,20)
( : 20-21)
மஃரிப் தொழுகையின் முதல் நேரம், சூரியன் மறையும் போது, அதன் கடைசி நேரம், செம்மேகம் மறையும் போது. (செம்மேகம்) என்பது (சூரியன் மறைந்து) சிவப்பு நிறத்திற்கு பிறகு அடிவானத்தில் பார்க்கப்படும் வெண்மை நிறமாகும். இது அபூஹனீஃபாவின் கருத்தாகும். (சூரியன் மறைந்து) சிவப்பு நிறம் (மட்டுமே) என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்கள். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 20,21)
( : 22)
அந்த தொழுகையின் நேரம் வருவதற்கு முன்னர் பாங்கு சொல்வது கூடாது. பஜ்ர் தொழுகையைத் தவிர. இது அபூயூசுஃப் அவர்களின் கருத்தாகும். (மற்ற இரு இமாம்கள் இந்த கருத்தை கூறவில்லை)
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 22)
( : 24)
(ஸஜ்தா செய்யும் போது) தன் மூக்கு, நெற்றியை (தரையில் வைத்து) ஸஜ்தா செய்வார். இந்த இரண்டில் ஒன்றை மட்டும் (கொண்டு ஸஜ்தா செய்வதை) சுருக்கிக் கொண்டால் அபூஹனீஃபா கருத்துப்படி கூடும். (அபூயூசுஃப், முஹம்மத் ஆகிய) இருவர் கருத்துப்படி கூடாது. (நூல்:முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 24)
( : 28)
தொழுகையில் ஓதுவதில் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவானது, குர்ஆன் என்று சொல்லுமளவுக்கு இருப்பதாகும் என்று அபூஹனீஃபா கூறுகிறார். சிறிய அல்லது நீளமான ஆயத்துகளில் மூன்றுக்கு குறைவானது கூடாது என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 28)
( : 25)
(பெண்கள் பள்ளிவாசலில்) ஜமாஅத்தில் கலந்து கொள்வது வெறுக்கப்பட்டதாகும். (என்றாலும்) பஜ்ர், மஃரிப், இஷா தொழுகைக்கு (கலந்து கொள்ள) கிழவி செல்வதில் தவறில்லை. இது அபூஹனீஃபாவின் கருத்தாகும். அனைத்து தொழுகையிலும் கிழவி (கலந்து கொள்ள) செல்லலாம் என்று அபூ யூசுஃப், முஹம்மத் கூறுகிறார்கள். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 25)
( : 31)
இரவில் உபரியான தொழுகைகளை ஒரே ஸலாத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடும். அதற்கு மேல் அதிகப்படுத்துவது வெறுக்கப்பட்டதாகும் என்று அபூஹனீஃபா கூறுகிறார். ஒரே ஸலாத்தில் இரண்டு ரக்அத்களுக்கு மேல் அதிகப்படுத்தக்கூடாது என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 31)
( : 35-36)
அபூஹனீஃபா கருத்துப்படி கப்பலில் அமர்ந்த வண்ணம் எந்த நிலையிலும் தொழுவது கூடும். இடையூறு இருந்தால் தவிர (அமர்ந்து தொழுவது) கூடாது. இது அபூயூசுஃப், முஹம்மதின் கருத்தாகும்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ, பக்கம் : 35,36)
( : 36)
(ஜும்ஆவில்) தூய்மையான நிலையில் நின்ற வண்ணம் குத்பா கொடுப்பார். அல்லாஹ்வை நினைவு கூர்வதுடன் சுருக்கிக் கொண்டால் அபூஹனீஃபாவின் கருத்துப்படி கூடும். குத்பா என்று சொல்லப்படும் அளவிற்கு நீளமான உரை இருப்பது அவசியமாகும். என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்கள். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 36)
( ) ( : 37)
அபூஹனீஃபாவின் கருத்துப்படி (பெருநாள் அன்று) திடல் வழியில் தக்பீர் கூறமாட்டார். அபூயூசுஃப், முஹம்மத்தின் கருத்துப்படி தக்பீர் கூறுவார்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 35,36)
மனிதனின் கருத்துகளில் நிச்சயம் தவறுகள் இருக்கும். அதை திருக்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து சரியானதை ஏற்று நடப்பதே சரியான வழியாகும். இதையே இமாம் ஷாஃபி அவர்களும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
141
ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள் '' நான் இந்த புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் '' அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் '' என்று தன் திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்த புத்தகங்களிலே திருமறை குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பி விட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்).
(முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)
No comments:
Post a Comment