Thursday, May 19, 2011

குர்ஆன் வசனம்,ஹதீஸ்,துஆ


தினமும் படிப்போம்.

இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மதமும் ஒரு தலைப்பின் கீழ் ஒரு குர்ஆன் வசனம்
ஒரு ஹதீஸ், ஒரு துஆ ஆகியவற்றை அரபி, தமிழ் உச்சரிப்பு மற்றும் பொருளுடன் கூறுவோம்.
வாசகர்கள் தினமும் இதைப் பார்த்து படித்தாலே ஒரு வாரத்தில் ஆசிரியர் உதவி இல்லாமல் மனனமாகிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.. 
இணை வைத்தல்- நிரந்தர நரகம்
வசனம்
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِـمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا
இன்னல்லாஹ லா யக்ஃபிரு அய்யுஷ்ர க்க பிஹி வயக்ஃபிரு மாதூன தா-க்க லி-மய் யஷாவு  வமய் யுஷ்ரிக் பில்லாஹி ஃபகதிஃப்த்தரா இஸ்மன் அலீமா
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.                                    
குர்ஆன் 4:48
ஹதீஸ்
عَنْ جَابِر بْنُ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارَ رواه مسلم 152
அன் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹு
அன்ஹு கால சமிஃத்து ரசூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யகூலு மன் லகியல்லாஹு லா யுஷ்ரிக் பில்லாஹி ஷைஅன் தகலல் ஜன்னத்த. வமன் லகியஹு யுஷ்ரிக் பிஹி தகலன்னார்.
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறைவனைச் சந்திப்பவர் சொர்க்கம் செல்வார். அவனுக்கு இணைவைத்தவராக அவனைச் சந்திக்கிறவர் நரகம் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் 152
  துஆ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா வத்துக்கா வல் அஃபாஃப வல் கினா
இறைவா! நல்வழியையும் இறையச்சத்தையும் சுயக் கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.                
நூல் : முஸ்லிம் 5265
பெரியவர்களும் இதைப் படித்து மனனம் செய்வதோடு சிறார் களுக்கும் இதைச் சொல்-க் கொடுங்கள். அவர்களுக்கு எளிய முறையில் மனனமாகி விடும். இன்ஷாஅல்லாஹ்.
தொகுப்பு : அபூஹிபா, சென்னை
Thanks:Dheenkula Penmani (onlinepj)

No comments:

Post a Comment