Monday, May 23, 2011

வெற்றியாளர்கள் யார்?


நல்லறங்கள் செய்பவர்கள்.
இஸ்லாம் மனிதர்களுக்கு நல்லறங்களை செய்யுமாறு கட்டளையிடுகின்றது. ஆனால் இதை பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதில்லை. நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.
திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர்
ஆவர். அல்குர்ஆன் ; 28;67
நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அல்குர்ஆன் ; 22;77
எதுவெல்லாம் நல்லறங்கள் ?
ஒரு முஸ்லிம் மார்க்கக் கட்டளைகளை மீறாமல் அவன் செய்யும் அனைத்து காரியங்களையும் இஸ்லாம் நல்லறங்களாகவே பார்க்கிறது. தனக்குரிய கடமைகளை அவன் செய்வதிலிருந்து குடும்பத்தினரை அவன் கவனிப்பதும், மற்றவர்களிடத்தில் அவன் உறவு பாராட்டுவதும், சிரிப்பதும், உறங்குவதும், சாப்பிடுவதும் அவனுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு அவன் பொறுமை காப்பதற்கும் ஆபத்தான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு அவன் உதவுவதும் நல்லறங்கள் ஆகும்.

மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட. நூல் : புகாரி ; 56பொருளாதாரத்தைப் பெருக்குவதில் மட்டுமே முழு நேரத்தையும் கழிக்கும் ஆண்கள் தன் மனைவிக்காகவும், குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். எத்தனை ஆண்கள் தன் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுகிறார்கள்?. தன் மனைவி சாப்பிட்டாளா? சாப்பிடவில்லையா? என்று கூட கணவன்மார்களுக்கு தெரிவதில்லை. இவர்கள் இந்த நபிவழியை செயல்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
பேசுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்
மனைவியிடத்தில் சிறிது நேரத்தையாவது ஒதுக்கி பேசுவதுகூட நல்லறமே.
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதை நாம் ஒதுக்கிறோம்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள்.அப்போது உட்கார்ந்தபடியே ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉச் செய்வார்கள். பின்னர் சஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக்கொண்டிருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக்கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக் கொள்வார்கள். நூல் : புகாரி ; 1119
வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பினோமா, சாப்பிட்டோமா, டிவியை பார்த்துவிட்டு தூங்கினோமா என்று வாழ்க்கை நடத்தும் ஆண்கள் ஏராளம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசிக்கொண்டிருந்தது ஆண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.
சிறு உதவிகள் செய்யுங்கள்
அஸ்வத் பின் யஸீத் அவர்கள் கூறியதாவது: "தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?'' என்றுநான் (அன்னை) ஆயிஷா (ர) அவர்கடம் கேட்டேன். அவர்கள், "தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்'' என்று பதிலத்தார்கள்.
நூல் : புகாரி 6039
நாட்டின் ஜனாதிபதியும் ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன் வேலைகளை தானே செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நன்மை என்று கூறி அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.
நோயுறும் போது ஆறுதலாக
உடல் நிலை சரியில்லாத மனைவியிடத்தில் நபிகளார் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ர) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்கன் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது) அவர்கடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, "எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான். இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெயே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்ல் ஒரு சிறிதும், நான் நோயிருந்து குணமடைந்து வெயே செல்லும் வரை எனக்குத் தெரியாது.
நூல் : புகாரி; 4141
அனஸ் பின் மாக் (ர) அவர்கள் கூறியதாவது: நானும் அபூ தல்ஹா (ர) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களுடன்ஸஃபிய்யா (ர) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்கன் துணைவியாரும் கீழே விழுந்தார்கள்.
அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அனஸ் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்: அபூதல்ஹா அவர்கள் தமது ஒட்டகத்திருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி'' என்று கூறினார்கள். உடனே, அபூதல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி)
அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள் மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே, அப் பெண்மணி (ஸஃபிய்யா (ர) அவர்கள்) எழுந்து கொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களுடைய வாகனத்தைச் சரி செய்து தந்தவுடன் இருவரும் ஏறிக் கொண்டனர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், "பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
நூல் : புகாரி 3086
மார்க்கத்திற்கு உட்பட்டு நன்மையை எதிர்பார்த்து. நபிவழியை பின்பற்றி பெண்களிடம் நல்ல முறையில் நடந்து நன்மைகளை அடைவோம்.
பெண்கடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்குநான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி 5186
முதலாளியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!
பெரும்பாலும் வேலைசெய்பவர்கள் தன் முதலாளி தனக்கு இடுகின்ற கட்டளையை வெளிப்படையாக புலம்பிக்கொண்டோ அல்லது மனதிற்குள் புழுங்கிக்கொண்டோ செய்வதை காண்கின்றோம். அந்த வேலையை மனமுவந்து செய்வதற்கும் இறைவனிடத்தில் கூலி இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.
1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கைகொண்டார்.
2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.)
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல் : புகாரி 97
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக, முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமான முறையில் செலவிடக்கூடிய, நம்பகமான கருவூலக்காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல்: புகாரி 2319
தன் முதலாளி தன்னை நம்பி தன்னிடத்தில் ஒப்படைக்கின்ற பொருட்களில் மோசடி செய்பவர்களும் மக்களில் இருக்கின்றனர். இது நயவஞ்கனின் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்கத்தால் அதற்கு மாறுசெய்வான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி :2749
வழியறியாதவர்களுக்கு பாதையை அறிவித்துக் கொடுப்பதும் நல்லறமே.
ஒரு முதியவர் பஸ் நிலையத்தில் நின்று இந்த பஸ் எங்கு செல்கிறது? என்று கேட்டால் அதற்கு ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் இக்கேள்விக்கு மதிப்பளிப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே பதில் கூறுவார்கள். என்றாலும் சிலருக்கு அது அவருக்குப்புரியாத போது அதை அவர் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பார். அப்போது கோபம் கொள்ளாமல் அவருக்கு புரியும் விதமாக கூறவேண்டும்.
இது பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே மருத்துவமனை, மஸ்ஜித், ஆட்டோ நிலையம், குறிப்பிட்ட ஒரு நபருடைய வீடு போன்ற பல இடங்களுக்கும் நாம் வழிகாட்டுவதை கூட இஸ்லாம் நல்லறம் என்றே கூறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர), நூல் : புகாரி 2891
உயிருக்கு போராடுபவருக்கு உதவுவதும் நல்லறமே !
பேருந்து நிலையங்கள் போன்ற நெருக்கடியான இடங்களில் விபத்துகள் ஏற்படுவது எதார்த்தமே! இவ்வாறு விபத்துகள் ஏற்படும் போது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவருக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவாமல் பிரச்சனைகளிருந்து
விலகினால் சரி என்று அனைவரும் ஒதுங்கிவிடுகின்றனர். இந்நேரத்தில் அந்த மனிதருக்கு உடலால் முடியுமென்றால் உதிரத்தையோ அல்லது இயன்ற அளவு பணத்தையோ கொடுத்து உதவினால் ஓர் உயிரை காப்பாற்றிய நன்மை கிடைக்கும்.
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர் அல்குர்ஆன் : 5:32
ஒருவர் மற்றவரை காப்பாற்றும் போது அதை பார்க்கின்ற பொது மக்கள் என்றாவது ஒரு நாள் தங்கள் கண் முன்னால் நடக்கும் விபத்துகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஒரு விபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும் மக்கள் ஒன்றுகூடுகின்றனர்.
இந்நிலை தொடருமானால் மனித சமுதாயம் பெரிய பின் விளைவை சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற நோயாளிக்கு எந்த ஒரு மருத்துவரும் முன் பணம் செலுத்தாவிட்டால் அறுவை சிகிச்சை செய்வதில்லை. இரவு 10 மணிக்கு மேல் உடல்நிலை சரியில்லாதவர்(ஏழை)களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள செவியர்கள்(நர்ஸ்கள்) தங்களது தூக்கத்தை மக்கள் கெடுத்துவிட்டதாக கோபம் கொள்கின்றனர். அரசாங்கம் இந்த மக்களை கவனிப்பதற்காகத் தான் பகல் டியூடி இரவு, டியூடி என்றே நேரத்தை அவர்களுக்கு பிரித்து கொடுத்திருக்கின்றது இதற்கு அரசாங்கம் இவர்களுக்கு சம்பளத்தைகொடுத்திருந்தும் இவர்களுக்கு கை காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே சிறந்த முறையில் கவனிக்கின்றன.
இதை தொழிலாக பார்க்காமல் மக்களின் உயிர்களை காக்கின்ற பொது தொண்டாக இஸ்லாம் மனிதர்களை கவனிக்கச் சொல்கின்றது.
தீமை செய்யாமல் இருப்பதும் நல்லறமே !
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருந்தால் சரி என்ற பழமொழிக்கேற்ப எந்த உதவியும் செய்யாமல் இருப்பவர்கள் கூட சும்மா இருந்து கொண்டு குடும்பங்களை பிரிப்பது போன்ற பெரிய பெரிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருப்பதை காண்கின்றோம். பொருளாதாரத்தாலோ உடலாலோ யாருக்கும் எந்த நல்லதையும் செய்ய முடியாவிட்டாலும் கூட மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பதும் நல்லறமாகும்.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்'' என்று கூறினார்கள். அப்போது "(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்'' என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடல்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்'' என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்'' என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் : 1834
நன்மைக்கு முந்துவோம்
"விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது.
அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. அல்குர்ஆன் : 57:20
இவ்வாறு தீமையான காரியங்களுக்கு முந்தாமல் நன்மையான காரியங்களை செய்வதற்கு போட்டியிடவேண்டும்
ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்
அல்குர்ஆன் 2 : 148
அபூஹுரைரா (ர) அவர்கள் கூறியதாவது : ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்கடம் வந்து, "செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின் றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்;
தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)'' என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்கடையே வாழ்கிறீர்களோ அவர்கல் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துல்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்கல் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்'' என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், "சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத் துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவைக் கூறியதாக அமையும்'' என்று பதிலத்தார்கள்.
நூல் : புகாரி 843
வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்
(Dheenkula Penmani)

No comments:

Post a Comment