Wednesday, May 04, 2011

ஜெர்ரி தாமஸ் விவாதத்தில் இருந்து ஓட்டம்


ஜெர்ரி தாமஸ் விவாதத்தில் இருந்து ஓட்டம்

கிறித்தவ மத போதகரான ஜெர்ரி தாமஸ் வித்தியாசமான மத போதகராவார். இவர் முஸ்லிம்களை விவாதத்துக்கு அழைப்பதையும் அவர்களில் யாராவது விவாதம் செய்ய மறுத்தால் அதை அம்பலப்படுத்தி இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று பிரச்சாரம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் கரைத்துக் குடித்த மாமேதை என்ற தோற்றத்தை அவர் அப்பாவி கிறித்தவ மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக ஜாகிர் நாயக்கை இவர் விவாதிக்க அழைப்பு கொடுத்த கடிதத்தையும் விவாதத்துக்கு ஜாகிர் நாயக் மறுத்து எழுதிய கடிதத்தையும் தனது இணைய தளத்தில் வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொண்டதுடன் இஸ்லாத்தின் மிகப் பெரிய அறிஞரே என்னோடு விவாதிக்க மறுத்து ஓட்டம் பிடித்து விட்டதில் இருந்து கிறித்தவ மார்க்கம் தான் உணமையானது என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
SAN என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு பல பாகங்களிலும் கிளைகளை ஏற்படுத்தி ஆதரவாளர்களை உருவாக்கி வைத்துள்ளார்.
குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.
ஜெர்ரி தாமஸ் என்பவர் முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் உளறியவகளையும் நாமே பலவீனமானவை இட்டுக்கட்டப்பட்டவை என நிராகரித்துள்ள ஹதீஸ்களைத் திரட்டி வைத்துக் கொண்டு அது தான் இஸ்லாத்தின் கருத்து என்று சித்தரிப்பது தான் இவரது வழி முறை. ஜாகிர் நாயக்கோ இன்னும் அவரைப் போன்றவர்களோ இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைச் சொல்வதால் இமாம்களின் சில உளறல்களை ஜெர்ரி தாமஸ் போன்றவர்கள் எடுத்து வைக்கும் போது அவர்க்ள வாயடைக்கும் நிலை ஏற்படும். இதற்கு பயந்து தான் விவாதத்தில் இருந்து பின்வாங்குகிறார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரை இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனில் இருந்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்தும் மட்டும் விமர்சிக்க வேண்டும். வேறு எவருடைய கருத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்ற நிலை பாட்டில் இருப்பதால் நம்மோடு இவர்கள் விவாதிக்கும் போது நிராயுதபாணிகளாகத் தான் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இவரது ஆணவத்தை அடக்க வேண்டும்; விவாதத்தில் இவரை இழுத்து வந்து இவரது அறியாமையையும், கிறித்தவத்தின் பொய்மையையும் நிரூபிக்க வேண்டும் என்று சில நணபர்கள் நமக்குச் சுட்டிக் காட்டினார்கள்.
அவரது கூட்டத்தின் சென்னை பகுதி பொறுப்பாளர்கள் நம் சகோதரர்களிடம் வந்து நீங்கள் எல்லோருடனும் விவாதம் செய்கிறீர்கள். ஆனால் ஜெர்ரி தாமஸுடன் மட்டும் விவாதம் செய்ய மறுப்பது ஏன் என்று நம் சகோதரர்களை உசுப்பி விட்டனர். இது குறித்து அந்தச் சகோதரர்கள் நம்மைத் தொடர்பு கொண்ட போது ஜெர்ரி தாமஸுடனும் அவர்களின் உலக அறிஞர்களுடனும் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி அனுப்பினோம். ஆனால் விவாதத்துக்கு உங்களிடம் சவால் விடுபவர்கள் எங்கள் தலைமையின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து மூலம் அழைப்பு தரட்டும் என்று சொல்லி அனுப்பினோம்.
இதன் பின்னர் அந்த இயக்கத்தினர் பின் வரும் கடிதத்தை நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தனர்.
Let the name of Lord Jesus Christ, the God and Saviour, be ever praised and glorified. Amen. 
Dear Bro. Hakim, 
As invited by you and accepted by us, brothers from Sakshi Apologetics Network, led by Bro. Ajoy, would be coming tomorrow to discuss about a possible scholarly and public debate between Janab P J Abdeen and our representative Bro. Jerry Thomas on a mutually convenient date, venue, topic and other terms. As discussed previously, we would expect this debate to take place with a translator as Bro. Jerry Thomas is not conversant in Tamil.   
We hope that this possible debate would be of great educative value to both Christian and Muslim communities and would be conducted in a peaceful and cordial atmosphere. While we respectfully disagree with Janab P J Abdeen  in many of his claims regarding Islam and Christianity, we believe engaging each other in the spirit of love and truth is the best way to express those. Therefore, in continuation with our earlier discussions, we are earnestly looking forward to meet you all and discuss the possibility of a debate. 
Thanks and regards, 
SAN
இக்கடிதத்தின் தமிழாக்கம்
கடவுளும் காப்பாற்றுபவருமான ஜீஸஸ் ன் பெயர் புகழப்படட்டும் கண்ணியப்படுத்தப்படட்டும்.

தாங்கள் எங்களை அழைத்து நாங்கள் அதை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் சகோதரர் அஜாஸ் அவர்கள் தலைமையில் இயங்கும் Sakshi Apologetics Network (SAN) உள்ள சகோதரர்கள் சகோ பி.ஜே மற்றும் Jerry Thomas ஆகிய இருவருக்கும் இடையே ஆரோக்கியமான பொது விவாதத்தின் சாத்தியம், தேதி, இடம், போன்ற விசயங்கள் குறித்து கலந்துரையாட நாளை வருகின்றார்கள்.

Jerry Thomas
க்கு தமிழ் தெரியாததால் இந்த விவாதம் தமிழ் மொழிபெயர்ப்பாளருடன் நடைபெறுவதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த சாத்தியமான விவாதம் முஸ்லிம் மற்றும் கிருத்துவ மக்களிடையே மிகப்பெரும் தெளிவை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

மேலும் இந்த விவாதம் அமைதியான நட்பு ரீதியான முறையிலேயே நடைபெறும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

பி.ஜே அவர்களின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் தொடர்பான கருத்துக்களுக்கு நாங்கள் மறியாதையுடன்  வேறுபடும் அதே வேளையில்அன்பு மற்றும் சத்தியத்துடன் அதைப் பகிர்ந்து கொள்வதே அதை வெளிப்படுத்துவதற்கு சரியான வழி என்று நாங்கள் நம்புகின்றோம்.
இதற்கு முன்னர் தங்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து உங்கள் அனைவரையும சந்தி்த்து விவாதம் எந்த அளவிற்கு சாத்தியமானது என்பதைக் குறித்து ஆலோசிக்க ஆவலாக இருக்கின்றோம்.
இதன் பின்னர் விவாதத் தலைப்புகள், விவாதிக்கும் நாட்கள், விவாதிக்கும் நடைமுறைகள் மற்றும் செலவுகள் குறித்து முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அலுவலகத்திற்கு மார்ச் 23 அன்று நம்முடைய சம்மதத்தின் பேரில் ஜெர்ரி தாமசின் பிரதிநிதிகள் வந்தனர்.
அப்போது பேசப்பட்ட பேச்சுக்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
வீடியோவில் பதிவு செய்ய அவர்கள் துவக்கத்தில் மறுப்பு தெரிவித்தாலும் அதற்கான நியாயங்களை எடுத்துச் சொன்னவுடன் தங்களுக்கும் ஒரு பிரதி தர வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் வீடியோ பதிவுக்கு ஒப்புக் கொண்டனர்.
அந்த வீடியாவைக் காண
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
விவாதம் எப்படி அமைய வேண்டும்; அதன் தலைப்புகள், எதை ஆதாரமாக எடுத்து வைப்பது ஆகியவற்றில் அவர்கள் எதை ஒப்புக் கொண்டார்களோ அதில் பலவற்றை மறுக்கும் வகையில் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் நமக்கு பதில் கடிதம் மின்ன்ஞ்சல் மூலம் தந்தார்கள்.
குறிப்பாக ஆதாரமாக எதை வைக்க வேண்டும் என்பது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் எழுதியவைகளையும்  ஆதாரப்பூர்வமற்ற ஹதீஸ்களையும் ஆதாரமாக எடுத்துக் காட்டக் கூடாது. நாங்கள் எதை ஆதாரம் இல்லை என்று சொல்கிறோமா அதை ஆதாரமக்க் காட்டக் கூடாது என்று வீடியோ பதிவில் ஒப்புக் கொண்டனர். முதலில் அதை அவர்கள் ஆட்சேபித்தாலும் நாங்கள் உங்களிடம் விவாதிக்கும் போது கத்தோலிக்க பைபிளை ஆதாரமாக்க் காட்டக் கூடாது எனக் கூறும் நீங்கள் அதே அளவுகொள் படி தான் நாங்கள் ஆதாரமாக ஏற்காதவைகளை எடுத்து வைக்க்க் கூடாது என்று நாம் தெளிவு படுத்தியவுடன் ஒப்புக் கொண்டனர். (வீடியோ ஆதாரம் பார்க்க)
ஆனால் நமக்கு எழுதிய பதிலில் அதையும் இன்னும் பேசப்பட்ட பலவற்றையும் மறுத்து எழுதி இருந்தனர். அந்தக் கடிதம் இது தான்.
In the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in incarnation is known as Jesus Christ, in whose name every knee shall bow and every tongue shall confess be glorified for ever and ever.
Dear Friends at TNTJ,
Thanks for sending us a copy of the DVD of our previous discussion. We greatly appreciate your gesture. As mentioned previously, we have a few agreements and certain differences following our first discussion with you. We have noted those below for further discussion.
1.      1. Panel Debates and One-on-One Debates: We agree with TNTJ that a few debates can be conducted as panel debates in the format suggested by TNTJ. There can be equal number of panellists from both the sides to debate on the various topics allotting two days for every subject agreed by both sides.
 However, we also think that a few debates should be conducted directly with Janab P Jainul Abdeen one-on-one with our representative in the format proposed by SAN in its proposal agreement draft, which was used in our first discussion. These debates could be on any or all of the topics that Janab P J wrote against the Christian faith (and its equivalent in Islam). We hope that you would see the rationale behind this proposal. We cannot hold a panel responsible for the writings and allegations of Janab P J and we are sure that Janab P J would take the responsibility of his writings.  
2.    Number of Debates: We still think that we should arrive at a number of debates acceptable to both the parties. Though initially our proposal was to debate on one of the topics proposed by us (or any another agreed by both the parties), as we want the debates to take place, we are presently agreeing for at least four panel debates (on two topics from the Christian side and two topics from the Muslim side) AND two one-on-one debates (one topic from the Christian side and one topic from the Muslim side). This would make it altogether six debates. However, we are open to include a few more debates later depending on the agreements on other points.
3.    Date of the Debates: Considering the convenience of both the parties, we think we can begin the debates after the Hajj. However, depending on the number of debates, we can either close these before the Easter lent 2012 or halt during the lent time and restart after the Easter of 2012.
4.    Participants and Other Arrangements: We agree that for indoor panel debates, each side can have at least 150 participants. However, for the one-on-one outdoor public debate, we can have equal number of volunteers to make arrangements and control the public. We are also open to the suggestions of TNTJ regarding food and other arrangements, or any other suggestions acceptable to both the parties that may arise during the course of discussions.
5.    Order of Presentations: We are of the opinion that order of the presentations should be decided beforehand and TNTJ can choose either the first or second presentations as long as it is decided in the Agreement to be signed by three TNTJ and Sakshi representatives each.
6.    Time of Presentations: We believe 15 minutes to make the Opening Presentation (including translation) as recommended by TNTJ for the panel debates is too short a time for a meaningful and substantial presentation of our position . We believe that the Opening Presentation time should be increased by mutual agreement depending on the nature of the topic and which should be followed by a series of rebuttals extending for two days.
7.    Source of Presentations:

(a) On Quoting the Holy Bible and Islamic Scriptures:
We have deliberated on the suggestion that the Holy Bible need not be quoted on Islamic topics and Quran need not be quoted in Christian topics. However, we think as the debates are between Christians and Muslims, their respective perspectives are based on the Holy Bible and Quran. For example, a Muslim disagrees with the divinity of Lord Jesus Christ due to his perspective derived from Quran. Hence a Christian while proposing the case for the divinity of Lord Jesus Christ from the Holy Bible has to correct the views of Quran too. Otherwise, we cannot see how a Muslim can arrive at the conclusion we are proposing. So, we think that religious texts of both the groups should be available for all the topics for both groups.
(b) On Quoting Quran Without Hadiths:
We would like to clarify that we are not planning to quote Shia Hadiths though we think that much of it is also Sahih and Hasan. However, considering that Shia hadiths have been rejected historically by people who do not follow that tradition, we agree not to quote Shia Hadiths. However, we can neither totally keep aside the Sunni Hadiths and other relevant texts nor let Janab P J decide what we should quote and what we should not be quoting. In fact, it is practically impossible not to use Hadiths while interpreting Quran. We do not find much details of Hazarat Muhammad in Quran though Quran asks Muslims to follow the pattern of Hazarat Muhammad. We do not find details of how to offer namaz, ablution, whether to have circumcision, or how to conduct Hajj etc in the Quran alone. How can we speak on any of these without the Hadiths? However, if Janab P J thinks that many Hadiths are weak or fabricated, which traditionally have been considered as sound and good and are considered so even in Tamil Nadu by the majority of Muslims, we are sure that Janab P J can present his case on the stage itself.  When the large section of Sunni Muslims (of different groups) themselves do not agree with Janab P J’s criteria, it is not reasonable to expect Christians to agree to those as a precondition for debates. 
8.    Transparency in Correspondence: The correspondences between the TNTJ and Sakshi will be put up on the internet to ensure transparency and also to remove any misunderstandings, if required.

We look forward to your response to move forward with the proposed debates in line with our desire to pursue and bear witness to the Truth at all times.

Sakshi Apologetics Network
இந்தக் கடிதத்தின் தமிழாக்கம்
டிஎன்டிஜே நண்பர்களுக்கு,
நமது முந்தைய கலந்துரையாடலின் dvd  தந்தமைக்கு நன்றி; பாராட்டுகள்.  முன்னர் குறிப்பிட்டது போல நமது முதல் கலந்துரையாடலில் சில கருத்து ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன.  மேலும் ஆலோசிப்பதற்காக அவற்றைக் கீழே குறிப்பிடுகிறோம்.
1.    குழு மற்றும் தனிநபர் விவாதங்கள்:
tntj கூறியபடி சில விவாதங்களை குழுவாக tntj பரிந்துரைத்த முறையிலேயே நடத்துவதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.  இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட தலைப்புகளில், ஒவ்வொரு தலைப்புக்கும் இரண்டு நாள் ஒதுக்கி இரு தரப்பிலும் சமமான எண்ணிக்கையுள்ள குழுவாக இருக்கலாம்.
எனினும் நமது முதல் கலந்துரையாடலின் போது நாங்கள் வழங்கிய ஒப்பந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாப் p.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடன் நேரடியாக ஒத்தைக்கு ஒத்தையாக எங்கள் san பிரதிநிதியுடன் சில விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம்.  இந்த விவாதங்கள் ஜனாப் pj கிறிஸ்துவம் குறித்து எழுதிய அனைத்து அல்லது சில தலைப்புகளிலும் (அதற்கு இணையான இஸ்லாமிய தலைப்புகளிலும் இருக்கலாம்.  இதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.  ஜனாப் pj யின் எழுத்துக்களுக்கும் அவதூறுகளுக்கும் ஒரு குழுவைப் பொறுப்பாக்க முடியாது; ஜனாப் pj அதற்கு பொறுப்பேற்பார் என்று நம்புகிறோம்.
2.    விவாத எண்ணிக்கை:
விவாதங்களின் எண்ணிக்கையில் இரு தரப்பும் ஒத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  நாங்கள் கொடுத்த தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் (அல்லது இருவரும் ஏற்கும் வேறொரு தலைப்பில்) விவாதிக்க வேண்டும் என்றே நாங்கள் கோரினோம்.  விவாதம் நடக்க வேண்டும் என்பதற்காக தற்போது குறைந்தது நான்கு குழு விவாதமும் (இரண்டு கிறிஸ்துவ தலைப்பு, இரண்டு முஸ்லிம் தரப்பு) இரண்டு ஒத்தைக்கு ஒத்தை விவாதம் (ஒரு கிறிஸ்துவ தலைப்பு, ஒரு முஸ்லிம் தலைப்பு) நடத்த ஏற்றுக் கொள்கிறோம். இவை மொத்தம் ஆறு விவாதங்கள் ஆகும்.  எனினும் ஏனைய விஷயங்களில் ஏற்படும் உடன்பாட்டைப் பொறுத்து பின்னர் இன்னும்  சில விவாதங்களுக்குப் பரிசீலிக்கிறோம்.
3.    விவாத தேதிகள்:
இரு தரப்பின் வசதியைக் கருத்தில் கொண்டு ஹஜ்ஜுக்குப் பின் விவாதங்களைத் துவங்கலாம் எனக் கருதுகிறோம்.  இருப்பினும் விவாத எண்ணிக்கையைப் பொறுத்து 2012 ஈஸ்டர் லென்ட்டுக்கு முன்னர் முடித்துக் கொள்ளலாம் அல்லது லெண்ட்டு காலத்தில் நிறுத்தி 2012 ஈஸ்டருக்குப் பிறகு தொடரலாம்.
4.    பங்கு கொள்வோரும் இதர ஏற்பாடுகளும்:
உள்ளரங்கு குழு விவாதங்களுக்கு தரப்புக்கு குறைந்தது 150 பேர் பங்கு கொள்ளலாம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  எனினும் ஒத்தைக்கு ஒத்தை திறந்த வெளி விவாதங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யவும் பொது மக்களைக் கட்டுப்படுத்தவும் சமமான அளவு தொண்டர்களை வைத்துக் கொள்ளலாம்.  உணவு மற்றும் ஏற்பாடுகள் பற்றிய tntj யின் யோசனைகளையும் நாங்கள் ஏற்கத் தயாராக உள்ளோம்.
5.    விவாதிக்கும் வரிசை:
விவாதிக்கும் வரிசையை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.  tntj பிரதிநிதி மூவரும்             SAN பிரதிநிதி மூவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டிருக்குமேயானால் முதலாவதாகவோ, இரண்டாவதாகவோ வாதங்களை எடுத்து வைப்பதை tntj தேர்வு செய்யலாம்.
6.    விவாதிக்கும் நேரம்:
குழு விவாதத்தை துவக்கி பேசுவதற்கு (மொழிபெயர்ப்பு உட்பட) 15நிமிடம் என்ற tntj யின் பரிந்துரை மிகக் குறைவானது.  எங்கள் வாதங்களை அர்த்தமுடனும் தெளிவாகவும் எடுத்துரைக்க இது போதாது என்று நம்புகிறோம்.  தலைப்புக்கு ஏற்றவாறு துவங்க உரையின் நேரத்தை பரஸ்பரம் பேசி அதிகரிக்க வேண்டும் என்று கருதுகிறோம்.  அதைத் தொடர்ந்து மறுப்புரைகளை இரண்டு நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம்.
7.    விவாதத்திற்கான ஆதாரங்கள்:
அ) பைபிளையும் இஸ்லாமிய நூல்களையும் மேற்கோள் காட்டுவது குறித்து;
இஸ்லாமியத் தலைப்புகளில் பைபிளையும் கிறிஸ்துவ தலைப்புகளில் குர்ஆனையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பது பற்றி நாங்கள் ஆய்வு செய்தோம்.  எனினும் இந்த விவாதங்கள் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடக்கிறது.  பிரச்சனைகளை அவர்கள் பைபிள் மற்றும் குர்ஆன் அடிப்படையிலேயே அணுகுகிறார்கள். 
உதாரணமாக இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை முஸ்லிம்கள் மறுப்பதற்கு குர்ஆனின் கண்ணோட்டமே காரணமாகும்.  எனவே இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை நிலைநாட்ட முற்படும் ஒரு கிறிஸ்துவர் குர்ஆனின் கருத்துகளையும் திருத்த வேண்டியுள்ளது.  இல்லையெனில் எங்கள் கருத்தை ஒரு முஸ்லிம் ஏற்க மாட்டார்.  ஆகவே இரு தரப்பாரின் மத நூல்களும் எல்லா தலைப்புகளிலும் இரு தரப்பாரும் பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம்.
ஆ)  ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆன் மேற்கோள் காட்டுவது குறித்து:
ஷீஆக்களின் ஹதீஸ்கள் ஸஹீஹ் மற்றும் ஹசன் என்று நாங்கள் கருதிய போதும் அவற்றை மேற்கோள் காட்ட நாங்கள் எண்ணவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.  ஷீஆ அல்லாதவர்கள் அவற்றை ஏற்க ஆண்டாண்டு காலமாக மறுத்து வருவதால் ஷீஆ ஹதீஸ்களை மேற்கோள் காட்டக் கூடாதென்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  எனினும் சன்னி ஹதீஸ்களையும் தொடர்புடைய இதர நூல்களையும் மொத்தமாக ஒதுக்கிவிட எங்களால் முடியாது.  நாங்கள் எதை மேற்கோள் காட்ட வேண்டும் அல்லது காட்டக் கூடாது என்பதை ஜனாப் pj முடிவு செய்ய விட மாட்டோம்.  ஹதீஸ்கள் துணையின்றி குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமே இல்லை என்பது தான் உண்மை.  முஸ்லிம்கள் ஹசரத் முஹம்மதை பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.  ஆனால் ஹசரத் முஹம்மது பற்றி குர்ஆனில் அதிக விபரங்கள் இல்லை. 
எவ்வாறு தொழுவது, ஒழு செய்வது, கத்னா செய்வது தேவையா, எப்படி ஹஜ் செய்வது என்ற விபரங்கள் குர்ஆனில் மட்டும் தனித்து விவரிக்கப்படவில்லை.  ஹதீஸ்கள் துணையின்றி இவற்றைப் பற்றி எப்படி பேச இயலும்.  காலம் காலமாக சரியானது என்றும் உறுதியானது என்றும் நம்பப்பட்டு வரும் தமிழக மக்களில் பெரும்பாலானவர்களும் அவ்விதமே நம்பும் பல ஹதீஸ்கள் பலவீனமானவை இட்டுக்கட்டப்பட்டவை என்று ஜனாப் pj நினைத்தால் அதை அவர் மேடையிலேயே விளக்கலாம்.  (பல பரிவுகளை சேர்ந்த) அதிகமான முஸ்லிம்களே ஜனாப் pj யின் அடிப்படைகளை ஏற்காத போது விவாதத்திற்கு முன் நிபந்தனையாக அதை கிறிஸ்துவர்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.
8.    தகவல் தொடர்பில் ஒளிவு மறைவு இன்மை:
ஒளிவு மறைவு இன்மையை உறுதி செய்யவும் கருத்து வேறுபாடுகளை நீக்கவும் தேவைப்பட்டால் tntj மற்றும் SAN க்கு இடையிலான தகவல் தொடர்பு வலைதளத்தில் வெளியிடப்படும்.
எப்போதும் உண்மையைத் தொடர வேண்டும் அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்ற எங்களின் ஆசையின்படி விவாதத்தை நோக்கி நகர உங்களின் பதிலை எதிர்ப்பார்க்கிறோம்.
இது தான் அவர்கள் எழுதிய கடிதத்தின் சாராம்சம். நம்மைப் பொருத்த வரை விவாதம் நடத்த விரும்பும் இரு தரப்பும் நேருக்கு நேர் சந்தித்து அனைத்தையும் கலந்தாலோசனி அடிப்படையில் முடிவு செய்தால் ஒரு சந்திப்பில் அல்லது இரண்டு சந்திப்பில் அனைத்து விஷயங்களிலும் எது சரியான முறையோ அதை இரு சாராரும் ஒப்புக் கொண்டு விவாத ஒப்பந்த்த்தில் கையெழுத்து போட்டு விவாத ஏற்பாடுகளில் இறங்கலா. இதை விடுத்து எப்படி விவாதம் நட்த்துவது என்று கடிதப் போக்கு வரத்து, மின்ன்ஞ்சல் போக்கு வரத்து நடத்தினால் விவாத ஒப்பந்தமே முடியாது. அதிலேயே பல வருடங்கள் ஓட்டலாம். இதை நாம் பல அனுபவங்கள் அடிப்படையில் கண்டறிந்துள்ளோம். விவாதத்தில் இருந்து ஓட்டம் பிடிப்பவர்கள் இந்தத் தந்திரத்தைக் கையாள்வதை முன்னரே நாம் அறிந்துள்ளதால்  இவர்களின் மேற்கண்ட பதில் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது
இவர்கள் கூறும் அத்தனை விஷயங்களும் சரியானவை என்று கருதினால் என்ன செய்திருக்க வேண்டும். முன்னர் நாம் பேசியதில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அதற்கு நியாமான காரணங்கள் உள்ளன என்று எழுதி இன்னொரு சந்திப்புக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் இட்த்துக்கு நம்மை அழைத்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமல் விவாத ஒப்பந்தக் கடிதம் என்பதை பல் வருடங்களுக்கு நீட்டலாம் என்ற நோக்கத்தில் மின்ன்ஞ்சல் மூலம் விவாத ஒப்பந்தம் பற்றி ஒரு விவாதம் நட்த்தி இழுத்தடிக்கப் பார்த்தால் அதை நாம் நம்பி ஏமாற மாட்டோம்.
வீடியோவில் பதிவான விஷ்யங்கள் எப்படி கலந்து பேசி முடிவு எட்டப்பட்ட்தோ அதை மாற்ற வேண்டுமானால் அது போல் கல்ந்து பேசித்தான் மாற்ற வேண்டும் என்ற சாதாரண நடைமுறையைக் கூட இவர்கள் பேணவில்லை. இவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் நேரில் பேசப்பட்டால் அதற்கான நியாயத்தை நம்மிடம் அவர்களால் கூற இயலாது என்பதை உணர்ந்து கொண்டனர். விவாத ஒப்பந்த்த்தில் நடக்கும் மினி விவாதத்தையே தவிர்க்க நினைப்பவர்கள் எப்படி விவாதத்தைச் சந்திப்பார்கள்?
எனவே அவர்களின் கடிதத்தில் கூறப்பட்ட எந்த விஷயம் பற்றியும் நாம் பதிலளிக்காமல்  எதைப் பேசுவதாக இருந்தாலும் நேரில் தான் பேச வேண்டும் என்று எழுதினோம். நேரில் பேசி தக்க காரணம் இருந்தால் எந்த மாற்றம் செய்யவும் நாம் தயார் என்பதால் நேரடி சந்திப்புக்குத் தான் வர வேண்டும் எனற கருத்தில் பின்வரும் கடிதம் எழுதப்பட்ட்து.
In the name of Allaah the Most Gracious the Most Merciful
Dear friends at SAN,
We are in receipt of your belated response. Thank you.   We are surprised at the content. 
You have, in your mail, gone back on what we had mutually agreed upon during our first interaction.
The averments are self contradicting.
You have also taken unilateral decisions.
How we expected of you the basic courtesy of consultation before thrusting any decisions on others!
There seems to be a sinister design of you trying to evade a meaningful debate.
Corresponding through mail is time consuming and a delaying tactic. If your plan is to postpone the debate infinitely, we then refuse to fall a prey to your acts of aggrandisement.
We however will not let this great opportunity slip away.
Let us have a face to face discussion. It shall be recorded as always. Whatever time it may take, all terms of the debate shall be finalized in that sitting. We expect you to come well prepared for signing an agreement on that day. 
We will make ourselves available between 21st and 30th of this April, 2011. Please inform when among these days will be convenient for you. Kindly confirm the date at least a week in advance.
Thanking you,
Tamilnadu Thowheed Jamaath.
 இந்தக் கடித்த்தின் தமிழாக்கம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புள்ள SAN நண்பர்களுக்கு
உங்கள் காலம் கடந்த பதில் கிடைத்தது. நன்றி. அதில்  உள்ளவை  ஆச்சரியம் அளிக்கிறது.
நமது முதல் கலந்துரையாடலின் போது இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட முடிவுகளிலிருந்து பின்வாங்கி  உள்ளீர்கள்.
அதில்  உள்ளவை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
தன்னிச்சையாகவும் முடிவுகள் எடுத்துள்ளீர்கள்.
உங்கள்  முடிவுகளைப் பிறர் மீது திணிக்கும் முன் கலந்து பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகத்தை  உங்களிடம் எதிர்பார்த்தோம் .
அர்த்தமுள்ள விவாதத்திலிருந்து நீங்கள் நழுவுவதற்கான திட்டமாக உங்கள் பதிலை உணர்கிறோம்.
மெயில் மூலமாக கருத்து பரிமாறுவது கால விரயமாகும். காலங்கடத்தும் தந்திரமுமாகும்.  முடிவின்றி காலங்கடத்துவது தான் உங்கள் நோக்கமாக இருந்தால் அந்த சூழ்ச்சிக்கு நாங்கள் துணை போக மாட்டோம்.
எனினும் இந்த வாய்ப்பை நாங்கள் நழுவவிடவும் விடமாட்டோம்.
நாம் நேருக்கு நேர் பேசலாம். எப்போதும் போல் அவை பதிவு செய்யப்படும். எவ்வளவு நேரம் ஆனாலும் விவாதத்தின் அனைத்து விதி முறைகளையும் அப்போதே முடிவு செய்யலாம். அன்றே ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக வருவீர்கள் என்று ஏதிர்பார்கிறோம்.
2011, ஏப்ரல் மாதத்தில் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாங்கள் காத்திருக்கிறோம். இதில் உங்களுக்கு வசதியான நாளைத் தெரியப்படுத்துங்கள். தயவு செய்து ஒரு வார அவகாசத்தில் உறுதி செய்யவும்.
நன்றியுடன் , 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்           
எதைப் பேசுவதாக இருந்தாலும் நேரில் பேசுவோம் என்று நாம் கூறிய பிறகு அவர்கள் சொல்ல வேண்டியதை நேரில் சொல்லி தாங்கள் விதிக்கும் நிபந்தனைகள் சரியானவை என்று நாம் எற்றுக் கொள்ளும் வகையில் விளக்கம் தரலாம். நாங்கள் நேரில் வருகிறோம் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லாமல் மின்னஞ்சல் மூலமாக இழுத்தடிக்கலாம் என்ற தந்திரத்தின் அடிப்படையில் பின்வரும் கடிதத்தை எழுதினார்கள்
n the name of the Triune Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in incarnation is known as Jesus Christ, in whose name every knee shall bow and every tongue shall confess be glorified for ever and ever.
Dear Friends at TNTJ,
Your email is in black color and our responses are given in red color. Please copy Bro.Ajoy Varghese in all correspondence.
Thanks and regards,
SAN
We are in receipt of your belated response. Thank you.   We are surprised at the content. 
You have, in your mail, gone back on what we had mutually agreed upon during our first interaction.
SAN: Thank you for your response. Our first meeting was to collect the details of your views and proposals. Some of which were agreed upon and the others were to be discussed and confirmed later. Please refer to the video in case of doubts. Our representatives have clearly maintained that we will revert after discussions within SAN.
The averments are self contradicting.
You have also taken unilateral decisions.
How we expected of you the basic courtesy of consultation before thrusting any decisions on others!
SAN: No decisions are taken unless the Agreement is signed between SAN and TNTJ.  We are currently at a discussion stage and no decision will be taken hastily under artificial pressures since the debates are expected only later this year. The video contains merely your views expressed and the email contains merely our counter-views on optimizing the value of the debates. Every decision has to be a joint-decision and so the questions of unilateral decisions do not arise.
There seems to be a sinister design of you trying to evade a meaningful debate.
SAN: The allegation of a 'sinister design' is contradicted by the fact that SAN has visited TNTJ headquarters as part of its interest to conduct the debate and agreed with many of the points that were proposed by TNTJ even though it is not part of SAN's standard debate format. A series of debates, full day debates, panel debates etc were all agreed to by SAN even though our views were different.
We also brought along our standard format for signing the Agreement straightaway during our last meeting, if required. However, TNTJ had its own views which were respectfully heard and discussed and in most part agreed to by SAN. We also agreed to the entire discussion being videotaped despite the unfortunate fact that SAN was not informed about the same in advance. To allege a ‘sinister design’ just because there are points of disagreement between two parties is a sign of innocence, we presume. Please refrain from allegations, especially wild and unsubstantiated ones since it spoils the joy of the debating experience and the preparations.
Corresponding through mail is time consuming and a delaying tactic. If your plan is to postpone the debate infinitely, we then refuse to fall a prey to your acts of aggrandizement.
We however will not let this great opportunity slip away.
SAN: We are happy to note your eagerness for the debate. So please send in your responses by email ASAP. Rather than a delaying tactic, there is instant and concrete communication email. We think email correspondences are actually quicker and more concrete in an internet age. AS SOON AS WE RECEIVE YOUR RESPONSES TO OUR EARLIER MAIL POINT BY POINT, we will send you the possible dates for our meeting with you from the 21st to the 30th April so that there is a concrete discussion. The decision about signing the Agreement will be taken depending on the content of the discussion during our face to face meeting again. ARTIFICIAL PRESSURES ON FINALISATION OF AGREEMENTS WILL BE COUNTERPRODUCTIVE AS MUTUAL CONSENT IS PREREQUISITE TO A PROPER AGREEMENT.
Let us have a face to face discussion. It shall be recorded as always. Whatever time it may take, all terms of the debate shall be finalized in that sitting. We expect you to come well prepared for signing an agreement on that day. 
We will make ourselves available between 21st and 30th of this April, 2011. Please inform when among these days will be convenient for you. Kindly confirm the date at least a week in advance.
Thanking you,
 இந்தக் கடிதத்தின் தமிழாக்கம்
மூன்றும் ஒன்றாய் இருக்கின்ற யோகோவின் பெயரால், உலகில் உள்ள உண்மைக் கடவுள் எவரின் பெயரால் எல்லா நபிமார்களும் அழைத்தார்களோ, யார் மனித வடிவில் இயேசு கிருஸ்து என்று அழைக்கப்பட்டாரோ, எந்தப் பெயருக்கு எல்லா மூட்டும் வளையுமோ, எல்லா நாவும் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமோ.. அந்தப் பெயருக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்த நண்பர்களே! 
உங்களுடைய இ-மெயில் கருப்பு எழுத்திலும், அதற்கு நாங்கள் அனுப்பியுள்ள பதில்கள் சிவப்பு நிறத்திலும் உள்ளன. உங்களுடைய அனைத்துக் கடிதப்போக்குவரத்துகளிலும் (இ-மெயில்) சகோ.அஜோய் வர்க்கீஸ் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு (Cc) கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன்,
SAN
TNTJ: உங்களுடைய பதிலைப் பெற்றுக் கொண்டோம். நன்றி! ஆனால் நம்முடைய முதல் கட்டப் பேச்சு வார்த்தையில் நாம் இருவரும் ஒப்புக்கொண்ட விசயங்கள் குறித்து நீங்கள் எழுதியுள்ளவை எங்களை ஆச்சரியப்படுத்துகின்றன.
SAN:  உங்களுடைய பதிலுக்கு நன்றி! நம்முடைய முதல் சந்திப்பு உங்கள் தரப்பு பார்வையையும், உங்கள் திட்டங்களையும் அறிந்து கொள்வதற்காகவே அமைக்கப்பட்டது. அவற்றில் சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. சிலவற்றை SAN அமைப்பில் உள்ள மற்றவர்களிடம் பேசி விட்டு கூறுவதாகக் கூறினோம். சந்தேகம் இருந்தால் எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு முறை பார்க்கவும். எங்கள் அமைப்பின் பிரதிநிதிகள் SAN அமைப்பில் உள்ள மற்றவர்களிடம் பேசிய பிறகு பதில் கூறுவதாகச் சொன்னதைக் காண முடியும்.
TNTJ:  உங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. நீங்கள் தன்னிச்சையாக முடிவை எடுத்துள்ளீர்கள்.. எந்த முடிவையும் எங்கள் மீது திணிப்பதற்கு முன்னர் எங்களிடம் அது குறித்து பேசுவீர்கள் என்ற குறைந்த பட்ச எண்ணத்தை நாம் எதிர்பார்த்தோம்.
SAN:  SANக்கும் TNTJவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வரை எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக கருதப்படாது. செயற்கையாக தாங்கள் தரும் அழுத்தத்திற்கு பணிந்து எந்த முடிவும் வேகமாக எடுக்கப்பட மாட்டாது. ஏனெனில் நாம் இன்னும் பேச்சுவார்த்தை என்ற கட்டத்தில் தான் உள்ளோம். அது போல இந்த விவாதம் இந்த ஆண்டின் கடைசியில் தான் நடைபெற உள்ளது. அந்த வீடியோ உங்கள் தரப்பு பார்வையையும், இந்த இ-மெயில், விவாதத்தை சிறப்பாக சிறப்பாக நடத்துவதற்காக எங்கள் தரப்பு பார்வையையும் கொண்டுள்ளன. எல்லா முடிவுகளும் கூட்டு முடிவுகளாகவே இருக்கும். எனவே தன்னிச்சையான முடிவு என்ற பேச்சுக்கு இங்கு இடம் இல்லை.
TNTJ: அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதிலிருந்து தப்பிச்செல்வதற்கான வியூகம் அமைப்பது போன்று தோன்றுகிறது.
SAN:  தப்பிச்செல்வதற்கான வியூகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் TNTJவின் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விவாதம் குறித்து பேசியது SAN. மேலும் TNTJ முன்வைத்த விவாத முறைகளான தொடர் விவாதம், முழுநாள் விவாதம், குழுவிவாதம் போன்றவை எங்களுடைய விவாத முறைகளுக்கு மாற்றமாக இருந்தும், அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். மேலும் ஒப்பந்தத்தை முடிவு செய்து விட்டு கையெழுத்து இடுவதற்கென்று ஒப்பந்தப் படிவத்தையும் தயாராகக் கொண்டு வந்தோம். ஆனால் TNTJ மாற்றுக் கருத்துடன் இருந்தது. எனவே உங்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தோம். அதுமட்டுமல்லாமல் நம்முடைய பேச்சுவார்த்தைகள் வீடியோ எடுக்கப்படும் என்ற ஒன்றுக்கு நாங்கள் தயாராக வராமல் இருந்தும் அதற்கு ஒப்புக் கொண்டோம். ஆகவே மாற்றுக் கருத்துக்களை வைப்பது தப்பிச் செல்வதற்கான வியூகம் என சொல்வது சரியாகாது. மேலும் இது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் விவாதம் செய்வதினால் ஏற்படும் ஆனந்தத்தையும், விவாத ஏற்பாடுகளையும் பாதிக்கும் எனக் கூறிக் கொள்கிறோம்.
TNTJ:  இ-மெயில்கள் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை போல் தெரிகிறது. விவாதத்தை காலவரையறை இல்லாமல் இழுத்துக் கொண்டிருப்பது உங்களுடைய திட்டம் என்றால், அதற்கு இரையாக நாங்கள் தயாராக இல்லை. ஆனால் கிறித்தவர்களுடன் விவாதம் செய்வதற்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பை நழுவவிடவும் நாங்கள் விரும்பவில்லை.
SAN:  விவாதம் செய்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். எனவே உங்களுடைய பதில்களை இ-மெயில் மூலமாக உடனடியாக தெரிவிக்க வேண்டுகிறோம். இது காலம் தாழ்த்தும் திட்டம் அல்ல. மாறாக திட்டவட்டமான கருத்துப் பரிமாற்றம். இந்த இண்டெர்நெட் யுகத்தில் இ-மெயில் மூலமாக பேசுவதால் இன்னும் வேகமாக இருக்கும் என்று நம்புகிறோம். எங்களுடைய முந்தைய மெயிலுக்கு உள்ள ஒவ்வொரு கருத்துக்கும் தாங்கள் பதிலளித்தவுடன் ஏப்ரல் 21 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதிக்குள் உள்ள ஒரு நாளில் மறுபடியும் சந்தித்து முடிவெடுக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்றைய தினம் (21-30) நடக்கும் நேரடிப் பேச்சுவார்த்தையில், நடக்கும் பேச்சுக்களைப் பொறுத்து ஒப்பந்தம் கையெழுத்து இடுவதற்கான முடிவு எடுக்கப்படும். ஒப்பந்தத் தேதியை முடிவு செய்வதில் நடைபெறும் செயற்கையான அழுத்தம் என்பது பலனைத் தராது. ஏனெனில் இருதரப்பும் ஒப்புக் கொள்வதே முதல் தேவை.
TNTJ:  நேருக்கு நேரான பேச்சுவார்த்தை நடக்கும், அதை எப்போதும் போல் வீடியோ பதிவு செய்து கொள்ளலாம். எவ்வளவு நேரம் ஆனாலும் நடைபெறவிருக்கும் விவாதத்தின் அனைத்து விதிகளையும் அந்த அமர்வில் முடிவு செய்து விடலாம். அந்த சந்திப்பிற்கு (21-30) ஒப்பந்தம் செய்யத் தயார் செய்ய தகுதியான நிலையில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு ஏற்ற நேரத்தைக் குறிப்பிடவும். அது போக இந்தச் சந்திப்பு குறித்து குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கவும்.
நன்றி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
விவாத ஒப்பந்தம் பேச வந்து அவர்கள் நினைத்து வந்த எந்த நிபந்தனையையும் தலைப்பையும் விவாத முறைகளையும் நிலை நாட்ட முடியவில்லை. எதிர்க் கேள்விக்கு ஏற்கத்தக்க பதில் அவர்களிடம் இல்லை. எனவே மீண்டும் விவாத ஒப்பந்தம் செய்ய நேரில் பேசினால் தாங்கள் கூறும் பொருத்தமற்ற காரணங்கள் ஒன்றும் எடுபடாது. தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதற்கு தலையாட்டும் நிலை தான் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்குத் தான் மேற்கண்ட கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலைத் தந்த பின் நேரில் சந்திப்போம் என்று கூறி நழுவ முயற்சித்து மேற்கண்ட கடிதத்தை எழுதியுள்ளனர். தாங்கள் நினைத்து வந்தது ஒன்றும் எடுபடவில்லை என்று அவர்களே மேற்கண்ட கடிதத்தில் ஒப்புக் கொண்டும் உள்ளனர்.
விவாதம் மற்றும் விவாத ஒப்பந்தங்கள் குறித்து கடிதப் போக்குவரத்து நட்த்தி விவாத்த்துக்கு தயார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதே நேரத்தில் விவாதத்தில் இருந்து பின் வாங்கும் வகையில் இழுத்தடிக்கத் தான் கடிதப் போக்கு வரத்து என்பதில் ச்ந்தேகம் இல்லை. எனவே அவர்களை விடக் கூடாது என்பதற்காக பின் வரும் கடித்த்தை எழுதினோம். அதற்கு பதிலும் இல்லை. நாம் கேட்டுக் கொண்ட படி அவர்கள் நேரிலும் வரவில்லை. எனவே அனைத்தையும் வெளியிட்டுள்ளோம்.
In the name of Allaah the Most Gracious the Most Merciful
Dear friends at SAN,
Thank you for your mail. It is without a conclusion.
 Your response only confirms our apprehensions. We are worried our worst fears may come true.
We are annoyed at your attitude of refusing to come to the talking table. All issues can be negotiated. An agreement can be signed after concessions are reached.
We fervently invite you once again to sit across with us, at your convenient day and time this April, 2011. Please give us just 3 days notice. We are scaling down from a weeks’ notice, only to make it happen. We attach much more significance to a debate with you than anything else. 
We expect nothing in response but your confirmation of date.
Thanking you,
Tamilnadu Thowheed Jamaath.
இதன் தமிழாக்கம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புள்ள SAN நண்பர்களுக்கு
உங்கள் மெய்லுக்கு நன்றி. அது முடிக்கப்படாமல் உள்ளது.
உங்கள் பதில் எங்கள் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. நாங்கள் அஞ்சியவாறு நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். 
பேச்சு வார்த்தைக்கு நீங்கள் வர மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்தையும் பேசி தீர்க்கலாம். உடன்பாடு ஏற்பட்ட பின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடலாம்.
இந்த 2011, ஏப்ரல் மாதத்தில் உங்களுக்கு வசதியான ஒரு தேதியிலும் நேரத்திலும் நேரில் பேச உங்களை மீண்டும் வலியுறுத்தி அழைக்கிறோம். எங்களுக்கு மூன்றே நாள் அவகாசம் கொடுங்கள். எப்படியாவது நீங்கள் வர வேண்டும் என்பதால் ஒரு வார அவகாசத்தையும் குறைக்கிறோம்.  உங்களுடன்  விவாதிப்பதை  மற்ற அனைத்தையும் விட முக்கியமானதாக கருதுகிறோம். 
தேதியை நீங்கள் உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த பதிலையும்  உங்களிடமிருந்து  நாங்கள் எதிர்பார்க்கவில்லை.         
நன்றியுடன் , 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்           
ஏப்ரல் மாதம் முடியும் வரை அவர்களிடம் இருந்து பதிலும் இல்லை. நேரில் வரவும் இல்லை. விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்து விட்டது இதன் மூலம் நிரூபணமாகி விட்ட்து.
ஆனாலும் இத்துடன் இதை நாம் முடித்துக் கொள்ளவில்லை. அவர்கள் நேரில் பேசி ஒப்பந்தத்தில் கைஎழுத்துப் போடும் வகையில் போதிய அவகாசத்துடன் பேச வந்தால் அதற்கான வாசல் திறந்து இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறோம். கிறித்தவ நண்பர்கள் இவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஏற்கனவே சவால் விட்டபடி விவாத ஒப்பந்த்த்துக்கான சந்திப்புக்கு அவர்களை வற்புறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலமையகம்

03.05.2011. 06:43

No comments: