Monday, September 05, 2011

நோய் நலம் விசாரிப்போம் - தொடர் : 2

நோய் நலம் விசாரிப்போம்.

தெரிந்தவர் தெரியாதவர் ஏன்ற பகுபாடின்றிநோய்நலம் விசாரித்த நபிகள் நாயகம் (ஸல்) நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரிக்குமாறு போதித்த நபி (ஸல்) அவர்கள், அந்த விஷயத்திலும் முஃமின்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். தமது சீரிய சொல்லுக்கு சிறந்தவொரு செயல்வடிவம் கொடுத்தார்கள். நோயாளிகளைச் சந்திக்கும் நற்பண்பை நடைமுறைக்குக்
கொண்டுவந்தார்கள். தமக்காக தரணியில் எதையும் இழப்பதற்குத் தயாராக இருந்த தமது தோழர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு நலிலிவடைந்து இருக்கும் வேளையிலே, அவர்களைச் சந்தித்து அன்போடு ஆறுதல் கூறினார்கள்; அக்கறையோடு அறிவுரை வழங்கினார்கள்; ஆதரவுக்கரம் நீட்டினார்கள். இவ்வாறு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனம்
நெகிழவைக்கும் மகத்தான நற்பண்பிற்கு நிகரற்ற சொந்தக்காரராக இருந்தார்கள்; தலைச்சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார்கள். இதைப் பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
"விடைபெறும்' ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்)
அவர்கள் இருந்தார்கள்.  அப்போது நான் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத்தருவாயை அடைந்துவிட்டேன்.  நான் தனவந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்கள் இல்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என்றார்கள்.
பின்னர் நான் "பாதியைக் கொடுக்கட்டுமா?'' எனக் கேட்டேன்.
அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு செல்வதைவிட தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைப்பொறுத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட உமக்கு நன்மையுண்டு'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி),
நூல் : புகாரி (1295), (2742), (2744)
அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் நாடி நரம்பில் (ஹிப்பான் பின் அரிஃகா என்பவனால்) தாக்குண்டார்கள்.
அப்போது அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாசலிலேயே (அவருக்காக) கூடாரமொன்றை அமைத்தார்கள். (அவருடைய கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் இட்டிருந்த "பனூ கிஃபார்' குலத்தாரை நோக்கி வழிந்தோடிய சஅத் (ரலி) அவர்கüன் இரத்தம் அவர்களை திடுக்கிடச் செய்துவிட்டது. அப்போது மக்கள், "கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன?'' என்று கேட்டுக்கொண்டே, அங்கே பார்த்த போது, தமது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அ(ந்த நோயிலேயே அல்லது அந்த கூடாரத்)திலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (463), (4122)
நான் (என் பனூசலமா குலத்தாரிடையே) நோயுற்று சுயநினைவில்லாமல் இருந்தபோது என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (தண்ணீர் கொண்டுவரச் சொல்லி) உளூ செய்துவிட்டு தாம் உளூ செய்த தண்ணீரில் சிறிதை என் மீது ஊற்றினார்கள்.
நான் உணர்வு பெற்று, "அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய சொத்துக்கு யார் வாரிசு? என்னுடைய சொத்துக்கு என் சகோதரர்கள் மட்டுமே எனக்கு
வாரிசாக ஆகும் நிலையில் நான் உள்ளேனே?'' என்று கேட்டேன். அப்போதுதான் பாகப்பிரிவினை தொடர்பான (4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி), நூல் : புகாரி (194), (4577)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஃபதக்' நகர முரட்டுத்துணி விரிக்கப்பட்ட கழுதை மீதமர்ந்து தமக்குப் பின்னால் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல்நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். லி இது பத்ரு போருக்கு முன்னால் நடந்தது. லி அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்கüன் தலைவர்) "அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்' இருந்தார். லி அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது. லி அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, "எங்கள் மீது புழுதியைக் கிளப்பாதீர்'' என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி,
அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : புகாரி (4566),(5663)
சஅத் பின் உபாதா (ரலிலி) அவர்கள் நோயுற்றபோது, அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலிலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி),
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) ஆகியோருடன் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தபோது (சஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் " என்ன, இறந்துவிட்டாரா?'' என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள்.
அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாக கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலைக் கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை. மாறாக, இதோ இதன் காரணமாகவே தண்டிக்கிறான் அல்லது தயவு காட்டுகிறான்''
என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிலி), நூல் : முஸ்லிலிம் (1683)
முன்சென்ற செய்திகளின் மூலம் இஸ்லாம் நமக்கு சொல்லும் பாடம் என்ன? நோய்நலம் விசாரிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தனியாகச் சென்றுள்ளார்கள்; தமது தோழர்களுடனும் சென்றுள்ளார்கள். இதன்மூலம், மறுமை வெற்றிக்கு வித்திடும் நற்காரியத்தில் மற்றவர்களையும் பங்கேற்க வைத்துள்ளார்கள், நபி (ஸல்) அவர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இன்றைய காலகட்டத்தில் இருப்பதுபோல குறைந்த நேரத்தில் நெடுந்தொலைவைக் கடக்க உதவும் நவீன வாகனங்கள் அன்றைய காலத்தில் இருக்கவில்லை; தரமான சாலைவசதிகள் இருக்கவில்லை. இருப்பினும், கடினத்தையும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நோய்நலம் விசாரிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள்;
அவர்களின் அருமைத் தோழர்களும் சென்றார்கள்.
இன்றைய காலத்திலோ பெரும்பாலான மக்கள் பல்வேறான வாகனவசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் சொத்தையான, அற்பமானக் காரணங்களைக் கற்பித்துக் கொண்டு நோய்நலம் விசாரிக்கச் செல்லாமல் இருக்கிறார்கள்; நலம் விசாரிப்பதைப் புறக்கணிக்கிறார்கள்.
 இத்தகைய மக்களுக்கு பின்வரும் சம்பவம் மாபெரும் பாடமாக, படிப்பினையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
 (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து. சலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்லப் போனார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் சகோதரரே! என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?'' என்று விசாரித்தார்கள்.
அதற்கு "நலமுடன் இருக்கிறார்'' என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்?'' என்று கேட்டு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ நீளங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான
அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது சஅத் (ரலிலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்
அவர்களுடன் இருந்த தோழர்களும் (சஅத் (ரலிலி) அவர்களை)
நெருங்கினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிலி),நூல் : முஸ்லிலிம் (1684)
இன்று முஸ்லிலிம்களில் சிலர், நோய்நலம் விசாரிக்கும் நற்குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்; மற்றவர்கள் நலத்தில் கரிசனம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு, இவர்கள் படைத்தவனிடம் நன்மை பெற்றுத்தரும் காரியத்தின் பக்கம் பயணிப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம், இவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; தங்களின் சிறப்பான செயலைச் சீராக்கிக் கொள்ள வேண்டும். காரணம், இவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நன்கு பழக்கமானவர்கள் மற்றும் நிலையான பயனளிப்பவர்கள் போன்றவர்கள் நோயாளிகளாக நலிலிந்து கிடக்கும் சமயத்தில் மட்டுமே நோய்நலம் விசாரிக்கும் நற்காரியத்தைக் கடைபிடிக்கி றார்கள். இது தவறாகும். காரணம், இவர்களைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோயாளிகளிடம் நலம் விசாரிக்கும் தன்மையில் பாரபட்சமாக நடக்கவில்லை. மாறாக தமக்கு தெரிந்த, தெரியாத, நெருக்கமான, நெருக்கமற்ற மக்கள் அனைவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் நோய்நலம் விசாரித்தார்கள். இந்தப் பேருண்மையைப் பின்வரும் ஹதீஸ்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிலிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக்குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர் "ஆம். இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று நான் பிரார்த்தித்துவந்தேன்'' என்று கூறினார். அதைக்கேட்டு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) "அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) "உன்னால் அதைத் தாங்க முடியாது'. அல்லது "உன்னால்
அதற்கு இயலாது' என்று கூறிவிட்டு, "இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!'' என்று நீ பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி), நூல் : முஸ்லிலிம் (5216)
நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாüயிடம் நலம் விசாரிக்கச் சென்றால், "கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால்
(இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப்படியே) நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், "கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்'' என்று சொன்னார்கள். (இதைக்கேட்ட) அந்தக் கிராமவாசி, "நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்'' என்று சொன்னார்.
உடனே நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலிலி), நூல் : புகாரி (3616) (5656) (7470)
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது "உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல் முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்?''
என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "காய்ச்சல். அதில்
அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!'' என்று கூறினார். அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது'' என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி), நூல் : முஸ்லிலிம் (5031)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றோம். அப்போது நான் எனது கையை அவர் மீது வைத்தேன். (அவரது உடல் அனலாகத் தகித்தது.) அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று போல் கடுமையான வெப்பமுள்ள ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை'' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் இவரைவிடக் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகுவோரை நான் அறிவிக்கட்டுமா? இதோ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருக்கும் இவ்விரு மனிதர்கள்தான்'' என்று தம் தோழர்களிடையே இருந்த இரு மனிதர்களைப் பற்றிச் சொன்னார்கள்.
 அறிவிப்பவர் : சலமா பின் அல்அக்வஉ (ரலிலி), நூல் : முஸ்லிலிம் (5368)
இதுபோல, தம்மைக் காட்டிலும் குறைந்த வயதுள்ளவர்களிடம் நோய்நலம் விசாரிப்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுள்ளார்கள். எந்தளவிற்கெனில், தமக்குப் பணிவிடைகள் புரிகிற யூதமதத்தைச் சார்ந்த சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது அவனைச் சந்தித்து நலம் விசாரித்தார்கள். இவ்விஷயத்தில் இன்றைய முஸ்லிலிம்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? சற்று நினைத்துப் பாருங்கள். இன்று முதலாளியாக இருக்கும் ஒருவர், தம்மிடம் வேலை செய்பவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையிலோ வீட்டிலோ இருக்கும்போது அவரிடம் சென்று நோய்நலம் விசாரிக்கும் காட்சியைப் பார்க்க இயலுமா? இன்றையக்
காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது அரிதாகிவிட்டது என்பதை எவரால்தான் மறுக்க இயலும்? மறுக்க இயலாது. பெரும்பாலும் பெரும்பாலான மக்கள் கல்வி, வயது, செல்வம் என்று எல்லா விதத்திலும் தங்களுக்கு சரிநிகராக இருக்கும் மக்களை மட்டும் சந்தித்து நோய்நலம் விசாரிப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் ஒருபோதும் இவ்வாறு இருக்கக்கூடாது. நோயாளிகளுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் பாகுபாடும் பார்க்காமல் நோய்நலம் விசாரிக்கும் நற்காரியத்தின் பக்கம் விரைய வேண்டும். இப்போதனையைப் பின்வரும் சம்பவத்தின் மூலம் கற்றுக் கொள்ள மறந்துவிடக்கூடாது.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய்நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, "இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!'' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், "அபுல் காசிம் லி நபி (ஸல்) அவர்களின் லி கூற்றுக்குக் கட்டுப்படு!'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்)
அவர்கள், "இவனை நரகத்லிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி), நூல் : புகாரி (1356), (5657)
நோய்நலம் விசாரித்த நபித்தோழர்கள் :
நோய்நலம் விசாரிக்குமாறு போதித்து அதை நடைமுறைப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அந்நேரங்களில் தமது  தோழர்களை அழைத்துச் சென்றுள்ளார்கள். நலம் விசாரிக்கச் செல்லும் பழக்கத்தை தமது தோழர்களுக்கு பழக்கியிருந்தார்கள். இதற்கானச் சான்றுகளைக் கடந்த பத்திகளில் படித்துள்ளோம். நபிகளாரின் நடவடிக்கைகளை உற்று கவனித்து அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதை, திருத்திக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்த நபித்தோழர்கள், இந்த விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டார்கள். திருத்தூதரைப் போல தாங்களும் நோய்நலம் விசாரிப்பதில் கவனத்துடன் செயல்பட்டார்கள்; மறுமை வெற்றிக்குரிய நன்மைகளைச் சம்பாதித்தார்கள். உதாரணமாக,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நேரங்களில் நபித்தோழர்கள், அவர்களைச் சந்தித்து அன்புடன் நலம்விசாரித்தார்கள். நபிகளார் மீதுள்ள தங்களது நேசத்தை பாசத்தை வெளிப்படுத்தினார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
 (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்துகொண்டிருந்த போது) தமது குதிரையிலிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களது "கணைக்கால்' அல்லது "தோள்பட்டை' கிழிந்துவிட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் "தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்' என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி
அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்தபோது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்தபோது, "பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்;
அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிலிக் (ரலிலி),
நூல் : புகாரி (378), (688), (805), (1113)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நான் அவர்கüடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; உங்கல் இருவர் காய்ச்சலால்
அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்'' என்று சொன்னார்கள். நான், "(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?'' என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, "ஒரு முஸ்லிலிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது
அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை'' என்று சொன்னார்கள்.
 அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலிலி),நூல் : புகாரி (5660)
அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்கüடமிருந்து அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெüயேறி
னார்கள். உடனே மக்கள், "அபுல் ஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?'' என்று (கவலையோடு) விசாரிக்க,
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (4447), (6266)
வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்

 

No comments:

Post a Comment