Monday, September 05, 2011

ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

ஷைத்தானின் ஊசலாட்டங்கள்
பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில்
முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
ஊசலாட்டம்
ஷைத்தான் எந்தெந்த விசயத்தில் எப்படியெல்லாம் நமக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான் என்பதையும் அதற்காக எப்படி பாதுகாப்புத் தேடுவது என்பதைப் பற்றியும் நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கவர்ச்சிகரமான சொற்களையும் பொய் ஜோடனைகளையும் கூறி மனித உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தி மனிதனை நிலைகுலையச் செய்து தவறில் சேர்ப்பதே ஷைத்தானின் ஊசலாட்டமாகும்.  
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!                       (அல்குர்ஆன்: 6:112)
இப்படி கவர்ச்சிகரமான சொற்களைப் பயன்படுத்தித்தான் முதல் மனிதரும் முதல் நபியுமாகிய ஆதம் அவர்களையும் அவர்களது மனைவியையும் ஷைத்தான் கெடுத்ததாக குர்ஆனில் அல்லாஹ் சொல்லுகிறான்.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.
                                                                                                 (அல்குர்ஆன்: 7:20)
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
(அல்குர்ஆன்: 20:120)
கொள்கையில் குழப்பம் ஏற்படுத்துதல்
ஷைத்தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுள் கொள்கையிலேயே குழப்பம் ஏற்படுத்தி ஒரு மனிதனை ஆட்டம் காணச் செய்துவிடுவான். எப்படியெனில், எல்லாவற்றையும் படைத்த ஒருவன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை முதலிலில் நமது எண்ணத்தில் விதைத்துவிட்டு, பிறகு அல்லாஹ்வைப் படைத்தது யார்? என்று சிந்திக்க வைக்க முயற்சிப்பான். இப்படி யோசிப்பது தவறானதாகும்.
அல்லாஹ் படைக்கப்பட்டவனாக இருந்தால் அவன் கடவுளாகவே இருக்க முடியாது. அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்த கடவுள். இல்லாத ஒன்றை இருக்கிற மாதிரி சித்தரித்து நமது அடிப்படையையே ஆட்டம் காணச் செய்வான். இதிலிலிருந்து அல்லாஹ்விடத்தில் தான் பாதுகாப்புத் தேட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தான் பாதுகாப்பவன். இப்படி நாம் பாதுகாப்புத் தேடும் போது ஷைத்தான் நம்மை வெல்ல முடியாமல் தோற்றுப் போகிறான். ஏனெனில் பாதுகாப்புத் தேட அவனை விட வேறு பெரிய இடம் எதுவுமில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, "இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான்.
இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அடையும் போது அவர் 
அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி),
 நூல்: புகாரி 3276, முஸ்லிலிம் 212,213,214
எனவே நாம் குர்ஆனின் 114, 113, 112 ஆகிய மூன்று அத்தியாயங்களைத் தொடர்ச்சியாக ஓதி வந்தால் ஷைத்தானின் சேட்டைகள் நம்மிடம் பலிலிக்காது. நம்மை விடவும், பெரியவனிடம் உதவி தேடிவிட்டான் என்று நினைத்து நம்மை விட்டு ஷைத்தான் விரண்டோடுவான்.
தீய காரியங்களைச் செய்யத் தூண்டுதல்
போதை, விபச்சாரம்,, திருடுதல் போன்ற தீய காரியங்களையும் மானக்
கேடான வெட்கங்கெட்ட செயல்களையும் செய்யத் தூண்டுவதும் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இது போன்ற காரியங்களை
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லிலித் தான் நமக்குத் தீயது என்று விளங்க வேண்டுமா? நம் அறிவைக் கொண்டு சிந்தித்தாலே திருடுவது பாவமான காரியம் என்று தெரியும். மது குடிப்பவனிடம் கேட்டாலும் அது தவறு என்று தான் சொல்லுவான். அதில் எந்த நன்மையும் இல்லை என்பான். மதுப்பழக்கத்தால் பலவித நோய்கள் வரும் என்பான். ஆடை விலகி நிர்வாணமாக விழுந்து கிடக்கும் நிலை இதனால் ஏற்படும் என்று ஒத்துக் கொள்வான்.
ஆனாலும் மது குடிப்பதை விட மாட்டான் என்றால் என்ன
அர்த்தம்? அவனுக்குள் இருக்கிற ஷைத்தான் அவனை இயக்குகிறான் என்று விளங்க வேண்டும். இங்கு தான் அல்லாஹ்விடத்தில் அப்பீல் போட்டு ஷைத்தானின் தீங்கிலிலிருந்து நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றா தீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர்
வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும்
தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒரு போதும் உங்களில் எவரையும்
அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை
அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.                        (அல்குர்ஆன்: 24:21)
அல்லாஹ்வின் நினைவை மறக்கச் செய்வது
ஷைத்தான் நம்மிடம் இருக்க வேண்டிய அல்லாஹ்வின் நினைவை மறக்கடிக்கச் செய்து விடுவான். உதாரணத்திற்குச் சொல்வதாகயிருந்தால், பாங்கு சொல்லிலிக் கொண்டிருப்பார்கள், பள்ளிக்குச் செல்லலாமே என்று வீட்டை விட்டு வந்தால் வரும் வழியில் குறவன், குறத்தி ஆட்டம் பாட்டத்தைப் பார்த்து தொழுகையைக் கோட்டை விடுவது ஷைத்தானின் வேலையாகும். இப்படி எத்தனையோ தேவையில்லாத செயல்களில் ஈடுபட வைத்து தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம்
அல்லாஹ்வை நினைப்பதை ஷைத்தான் தடுக்கிறான். 
ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தவர்கள்.
                                                                                                (அல்குர்ஆன்: 58:19)
வறுமை பற்றிய பயத்தை ஏற்படுத்துவது
நாம் மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காவும், உற்றார் உறவினருக்காகவும் செலவிடுகிறோம். இதனால் நமது பொருளாதாரம் குறையாது. மாறாக அல்லாஹ்வின் அருளால் ஒன்றுக்குப் பத்து பிறகு நூறு பிறகு ஏழுநூறு மடங்கு வரை வளம் பெருகும் என்று நம்பி செலவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வது மலக்குமாரின் தூண்டுதல். ஆனால் ஷைத்தான் இப்படிச் செலவு செய்வதினால் நமக்கு வறுமை ஏற்படுவதாக பயமுறுத்துகிறான். ஷைத்தானின் அச்சுறுத்தலுக்குப் பயந்து செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டாலோ அல்லது செலவே செய்யாமல் இருந்தாலோ நாம் அவனது ஆளுமைக்குள் இருக்கிறோம் என்பதை விளங்க வேண்டும். எந்த மாதிரி எண்ணங்கள் நம்மிடத்தில் வந்தாலும் இறைவனின் பாதையில் நம்மால் இயன்றதைச் செய்வதே ஷைத்தானை நாம் வெல்கிறோம் என்பதற்கான சான்று.
ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.                        (அல்குர்ஆன்: 2:268)
போதை மற்றும் மூட பழக்கவழக்கத்தைச் செய்வதற்குத் தூண்டுதல்
அறிவுக்குப் பொருந்தாத மூடத்தனமான காரியங்களைச் செய்வதற்கு ஷைத்தான் நம்மை ஏவுகிறான். ஆனால் அவன் பெரிய அறிவாளி. நம்மை மூடனாக்கி வழிகெடுத்து விடுகிறான். அதனால் தான் எலுமிச்சைப் பழத்தை வைத்து ஓதிப் பார்ப்பது,, ஆரத்தி எடுப்பது,, கால்நடைகளின்
முதல் குட்டிக்கு காதுகளை அறுப்பது,, சகுனம் பார்ப்பது,, பற்களை
அறுத்துக் கொள்வது,, பச்சை குத்துவது,, முகத்திலோ உடம்பிலோ கம்பி மாட்டிக் கொள்வது, இன்னும் இது போன்ற அறிவுக்குப் பொருந்தாத மடமையான காரியங்களைச் செய்தால் நாம் ஷைத்தான் ஏவியதைச் செய்தவர்களாகி விடுவோம்.
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்துவிட்டான்.
(அல்குர்ஆன்: 4:119)
எனவே ஒருவன் கிறுக்குத்தனமான காரியங்களைச் செய்வதிலிலிருந்து
அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுவது அவசியமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ளமாட்டீர்களா?
(அல்குர்ஆன்: 5:90,91)
மறக்கச் செய்வதும் ஷைத்தானின் வேலையே
நாம் ஏதேனும் ஒன்றை மறப்பதுவும் ஷைத்தானின் வேலையாகும்.
நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை
அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்தபின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!
(அல்குர்ஆன்: 6:68)
யூசுஃப் நபியவர்கள் சிறைச்சாலையில் தங்கியிருந்த போது, சிறையிலிலிருந்த இரண்டு நபர்கள் தங்களது கனவிற்கு விளக்கம் கேட்டு வந்தனர். யூசுஃப் நபி விளக்கம் சொன்னவாறு அவர்களில் ஒருவன் விடுதலையாகி சிறையிலிலிருந்து வெளியேறும் போது, மன்னரிடம் தன்னைப் பற்றி எடுத்துச் சொல்லி சிறையிலிலிருந்து வெளியேறுவதற்கு உதவுமாறு சொல்லுகி
றார்கள். ஆனால் ஷைத்தான் அந்த நபருக்கு மறக்கச் செய்து விடுகிறான்.
இதனால் யூசுஃப் நபி சிறையில் பல வருடங்கள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே ஷைத்தான் மனிதனை மறக்க வைக்கவும் செய்கிறான்.
அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் "என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!'' என்று யூஸுஃப் கூறினார்.
அவர் தமது எஜமானனிடம் கூறுவதை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். எனவே அவர் சிறையில் பல வருடங்கள் தங்கினார்.
(அல்குர்ஆன் 12:42)
இது போன்று ஹில்ரு என்ற நல்லடியாருக்கும் மூஸா நபிக்கும் இடையிலான சம்பவத்திலும், மறக்கடிப்பது ஷைத்தானின் வேலை என்று அல்லாஹ் கூறுகிறான்.
"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக
அமைத்துக்கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.
(அல்குர்ஆன் 18:63)
இரகசியம் பேசுவதும் ஷைத்தான் வேலை
ஒரு சபையில், ஒரு சமுதாயத்தில் இருக்கும் போது இருவர் குசு குசுவென்று இரகசியம் பேசினால் இதுவும் ஷைத்தானின் வேலையாகும். ஏனென்றால் இரகசியம் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டால், ஒன்றுமில்லை சும்மா தான். இல்லை.... எந்தக் கடையில் சட்டை எடுக்கலாம் என்று பேசிக்
கொண்டிருந்தோம் என்று கூசாமல் பொய் சொல்லுவார்கள். இப்படி பொய் சொல்ல என்ன அவசியம்? எனவே எல்லாரும் இருக்குமிடத்தில் இரகசியம் பேசாமல் இருப்பதே சிறந்தது.
இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க
வேண்டும்.                               (அல்குர்ஆன்: 58:10)
இப்படி, அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
ஒரு காரியம் தோல்வியில் முடிந்தவுடன், நாம் இப்படிச் செய்தால் நன்றாக
இருந்திருக்குமே! அப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். இதுவும் கூட ஷைத்தானின் ஊசலாட்டம் தான்.
உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், மளிகைக் கடை வியாபாரத்தை ஆரம்பித்து சரியாக நடக்கவில்லையெனில், ஜவுளிக் கடை வைத்திருக்கலாமோ என்று  அங்கலாய்த்துக் கொள்வதும், சனிக்கிழமை போனதால் தான் சரியில்லை. வெள்ளிக் கிழமை மட்டும் போயிருந்தால் வேலையைக் கணகச்சிதமாக முடித்திருக்கலாம் என்று புலம்புவதும் ஷைத்தானின் தூண்டுதலால் தான் ஏற்படுகிறது.
நடந்து முடிந்த காரியத்தைப் பற்றி இப்படிச் செய்திருந்தால்
அல்லது அப்படிச் செய்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என்று சொல்வது கூடாது. மேலும் நம்மில் கூட பலர் ஆர்பாட்டத்திற்கு மக்கள் அதிகமாக வரவில்லையெனில் மழை மட்டும் பெய்யவில்லையானால் மக்கள் சாரசாரையாக வந்திருப்பார்கள் என்று பேசும் பழக்கம் உண்டு. நாம் இப்படிப் பேசுவது ஷைத்தானின் ஊசலாட்டம். ஒரு வேளை மழை வராமல் இருந்திருந்து மக்கள் கூட்டம் வரவில்லையானால் அப்போது நாம் என்ன செய்வோம். ஒன்றுமே செய்ய முடியாது. எனவே நடந்து முடிந்த காரியத்தைப் பற்றி பேசும் போது அல்லாஹ் இப்படி நாடியிருக்கிறான் என்று தான் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு நடந்ததெற்கெல்லாம் நாமாக காரணங்களைத் தேடித்தேடி அப்படியிருந்தால் நடந்திருக்காது இப்படியிருந்தால் நடந்திருக்காது என்றெல்லாம் சொல்வது அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் பயன்படுத்தும் சொற்பிரயோகம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்த வரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவிதேடு. நீ தளர்ந்து விடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால்
அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்து விட்டது. அவன் நாடியதைச் செய்து விட்டான்'' என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) "லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலிலி), நூல்: முஸ்லிலிம் 5178
பிறரை இழிவுபடுத்தி பிரார்த்திப்பதினால் ஷைத்தானுக்கு ஒத்துழைக்கக் கூடாது
பிரார்த்தனை செய்யும் போது, பிறரை இழிவாகக் கருதுமளவுக்கோ அல்லது கேவலப்படுத்தியோ பிரார்த்திக்கக் கூடாது. அப்படி நமது சகோதரனைக் கேவலப்படுத்தி பிரார்த்தனை செய்வதின் மூலம் ஷைத்தானுக்கு ஒத்துழைக்கின்ற கூட்டாளியாகி விடுகிறோம். 
போதையிலிலிருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, எங்களில் சிலர் அவரைக்  கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பிய போது ஒரு மனிதர் (அவரைப் பார்த்து), "அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்'' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "உங்கள் சகோதரருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி), நூல் : புகாரி 6781,6777
பிளவை ஏற்படுத்துவதும் ஷைத்தானின் வேலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்ட)ôன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி), நூல்: முஸ்லிலிம் 5417,5418
கவலையை ஏற்படுத்தி வீழ்த்துவான்
மனிதனுக்கு ஏதேனும் ஒன்றின் மூலம் கவலையை ஏற்படுத்தி மனிதனை வீழ்த்தி ஷைத்தான் வெற்றி பெறுகிறான். கவலை இல்லாதவனை வீழ்த்துவது கொஞ்சம் கடினம் தான். ஆனால் கவலையுள்ளவனை வீழ்த்துவது இலகுவானது. நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவலையில் ஆழ்ந்து விடுகிறோம். அப்போது நம்மிடத்தில் ஷைத்தான் அவனது
வலையை விரிப்பான். நாமும் நம்மை அறியாமலேயே அவனது
வலையில் வீழ்ந்து விடுகிறோம். உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், காசு பணமில்லையென்றால் நமக்குக் கவலை ஏற்படுகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் யாராவது மரணித்து விட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, ஏதேனும் பிரச்சனை வந்தாலோ மனிதன் கவலை அடைவது மனித இயல்பில் உள்ளது தான். இந்த கவலையிலிலிருந்து விடுபடுவதற்கும் பரிகாரம் தேடவும் மனிதன் எதையாவது செய்ய வேண்டும் என்று தேடுவான். இந்த நேரத்தில் தான் ஷைத்தான் ஜோதிடத்தின் மூலமோ, தகடு, தாயத்து, பில்லிலி, சூனியம் மூலமோ, தர்ஹாவிற்குச் சென்று இணைவைக்கும் காரியத்தின் மூலமோ நம்மை இஸ்லாத்திலிலிருந்து வெளியேற்றி விடுகிறான். இப்படி இணைவைக்கும் அளவுக்குச் செல்லாவிட்டாலும் மார்க்கத்திற்கு மாற்றமான ஒன்றைச் செய்ய வைத்து நம்மை ஊசலாட வைத்து விடுகிறான்.
உம்மு ஸலமா (ரலிலி) தனது கணவர் அபூஸலமா (ரலிலி) அபீசீனியாவில் மரணித்த போது, எல்லோரும் பேசிக் கொள்கிற அளவுக்கு அழப் போகிறேன் என்று சொல்லிலிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து ஒப்பாரி வைத்து அழுவதற்காக பக்கத்து கிராமத்திலிலிருந்து ஒரு பெண்மணி வருகிறார்.  இதைப் பார்த்ததும் நபியவர்கள் ஷைத்தான் வீட்டிற்குள் நுழைவதாக எச்சரித்தார்கள். இப்படி எச்சரித்ததைக் கேட்ட உம்மு ஸலமா (ரலிலி) அவர்கள் தங்களது அழுகையை நிறுத்திக் கொண்டார்கள்.நூல் : முஸ்லிலிம் (1681)
எனவே சாதாரணமாக நமக்கு கேட்கிற சப்தத்திலோ அல்லது மௌனமாகவோ அழுவது தவறில்லை. ஆனால் ஒப்பாரி வைத்து அழுவது ஷைத்தானின் ஊடுருவலாகும்.
(என் முதல்கணவர்) அபூசலமா (ரலிலி) அவர்கள் இறந்த போது, நான் "(என் கணவர்) ஒரு வெளியூர்க்காரர்; அந்நிய மண்ணில் (இறந்து
போயிருக்கிறார்). அவருக்காக நான் (ஒப்பாரி வைத்து) நன்கு
அழுவேன். அது பற்றி (ஊரெல்லாம்) பேசப்பட வேண்டும்'' என்று கூறிக் கொண்டு அழத் தயாரானேன். அப்போது (மதீனாவையொட்டிய
"அவாலீ' எனப்படும்) மேட்டுப் பகுதியிலிலிருந்து ஒரு பெண் எனக்கு
ஒத்தாசை செய்யும் நோக்கில் வந்துகொண்டிருந்தாள். அவளை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிர்கொண்டு "அல்லாஹ் ஓர் இல்லத்திலிலிலிருந்து (அந்த இல்லத்தார் இறை நம்பிக்கைகொண்டதன் மூலம்) ஷைத்தானை வெளியேற்றிய பின் அவனை நீ உள்ளே
அனுமதிக்க விரும்புகிறாயா?'' என்று இரண்டு முறை கேட்டார்கள். எனவே, நான் அழுகையை நிறுத்திக் கொண்டேன்; (அதன்பின்
அவருக்காக) நான் அழவில்லை.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலிலி), நூல்: முஸ்லிலிம் 1681
வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment