ஸஅத் பின் முஆத் (ரலி)
1 இவர் மக்காவுக்கு உம்ராச் நிறைவேற்றச் சென்ற போது அறியாமை கால நண்பர்களில் ஒருவரான உமய்யா பின் கலஃபிடம் தங்கினார்கள்.
ஆதாரம் புகாரி (3632)
2 உஹதுப் போரின் போது அனஸ் பின் நள்ர் (ர-லி) அவர்கள் இவரைப் பார்த்து நான் சுவனத்தின் வாடயை நுகர்கிறேன் என்றார்கள்
ஆதாரம் புகாரி (2805)
3 "அல்லாஹ்வின் மீதாணையாக! கஃபாவை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்'' என்று அபூ ஜஹ்லுக்கு எச்சரிக்கை விடுத்தவர்.
ஆதாரம் புகாரி (3632)
4 மக்காவில் இவர் கஅபாவை வலம் வந்து கொண்டிருப்பதைக் கண்ட அபூ ஜஹ்ல் இவருக்கு எச்சரிக்கை விடுத்தான்
ஆதாரம் புகாரி (3632)
5 பனூ குரைழாக்கள் இவரின் தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக நபியவர்களுக்கு கூறினார்கள்
ஆதாரம் புகாரி (3043-3804)
6 அகழ்போரின் போது இவரது நாடி நரம்பு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது
ஆதாரம் புகாரி (463)
7 இவரை நபியவர்கள் பக்கத்தில் இருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் கூடாரம் ஒன்றை அமைக்கும் படி கட்டளையிட்டார்கள்
ஆதாரம் புகாரி (463)
8 பனூ கிஃபார் கோத்திரத்தார் இவரின் உடலில் இருந்து வழிந்தோடிய இரத்தத்தினால் திடுக்குற்றனர்
ஆதாரம் புகாரி (436)
9 ஆயிஷா (ர-லி) அவர்கள் பற்றி அவதூரில் சம்பந்தப்பட்ட உபை பின் சலூலை தண்டிக்க இவர் நபியவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்
ஆதாரம் புகாரி (4141-2661)
10 இவருக்கு சுவனத்தில் கிடைக்கும் கைக்குட்டை மிகவும் தரமானவையாக இருக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள்
ஸஅத் பின் முஆத் (ரலி)
ஆதாரம் புகாரி (2615)
No comments:
Post a Comment