நோய்நலம் விசாரிப்போம்.
எம்.முஹம்மது சலீம், மங்கலம்.
"மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை, அவனை அடைகின்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாகப் போதிக்கிற ஒரு கொள்கை இருக்கிறதா? அந்தப் பொன்னான சித்தாந்தத்தின் பெயர் என்ன? அந்த அற்புதக் கோட்பாட்டின் மூலம் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமே?'' என்று ஆதங்கப்படும் மக்கள் வையகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். இவ்வாறு, பரிபூரமாண வாழ்க்கை நெறியை சத்தியத்தைத் தேடித்தவிக்கிற மக்கள் அனைவருக்கும் மகத்தான பாக்கியமாக பொக்கிஷமாக "இஸ்லாமிய மார்க்கம்'' இருக்கிறது. இதை யாராலும் மறுக்க இயலாது. காரணம், "இஸ்லாம்' என்பது மனிதக்கரங்களால் கட்டமைக்கப்பட்ட கோட்பாடல்ல. மாறாக, இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலி-க்கும் இறைவனால்
வகுத்தளிக்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டுதலே இது. இத்தகைய இஸ்லாம், வெறும் இறைவனை பற்றிய கருத்துக்கள் மற்றும்
அவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் போன்றவற்றை மட்டும் போதித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லை; ஓய்ந்துவிடவில்லை. மாறாக, மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் பேசுகிறது. சமுதாய தளத்தில் நின்று, ஒவ்வொரு தனிமனிதனும் மக்களுடன் ஒன்றிணைந்து வாழும் விதத்தில் வளமான வாழ்வியல் வழிகாட்டுதல்களைக் கற்றுத் தருகிறது. அவைகளுள் முக்கியமான ஒன்று, நோய்நலம் விசாரிப்பதாகும். "முஸ்-லிம்களுள் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்' என்று மற்ற முஸ்-லிம்கள் அறிந்து கொள்ளும் போது, "அழகிய முறையில் அவர்கள் அவரைச் சந்தித்து அவருடைய தேகநலம் குறித்து விசாரிக்க வேண்டும்' என்று இஸ்லாமிய மார்க்கம் வ-லியுறுத்துகிறது. எனவே, நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நோய்நலம் விசாரித்து கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். அடுத்தவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுபவர்களாக இருக்கவேண்டும். இக்கருத்தைப் பின்வரும் இறைத்தூதரின் இனிய கூற்றுக்களின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்-ம் இன்னொரு முஸ்-லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்'' என்று கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவாயாக. அவர் உன்னை விருந்துக்கு அழைத்தால் அவருக்குப் பதிலளிப்பாயாக. அவர் உன்னிடத்தில் அறிவுரை கூறச் சொன்னால் அவருக்கு அறிவுரை கூறுவாயாக. அவர் தும்மிய பிறகு "அல்ஹம்து-ல்லாஹ்' என்று கூறினால் (யர்ஹமுகல்லாஹ் என்று) அவருக்கு மறுமொழி கூறுவாயாக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல்நலம் விசாரிப்பாயாக. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வாயாக'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி-),
நூல் : புகாரி (1240), முஸ்-லிம் (4368)
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்வதற்குக்) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை (விலகியிருப்பதற்குத்) தடைசெய்தார்கள். ஜனாசாவைப் பின்தொடருமாறும், நோயாளியை நலம் விசாரிக்குமாறும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுமாறும், சலாமுக்குப் பதில் கூறுமாறும், தும்மியவருக்கு மறுமொழி கூறுமாறும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதில் இருந்தும், ஆண்கள் தங்கமோதிரம் அணிவதி-லிருந்தும் (கலப்படமற்ற) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதி-ருந்தும் எங்களைத் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி-),
நூல் : புகாரி (1239, 2445, 5175)
"(போர்க்)கைதியை எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவüயுங்கள்; நோயாüயை (சந்தித்து) நலம் விசாரியுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூசா (ர-), நூல் : புகாரி (3046), (5174)
முஸ்-லிமாக இருக்கும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சியான சந்தோஷமான விஷயங்களில் மட்டும் பங்கெடுத்துக் கொள்பவராக இருக்கக்கூடாது. மாறாக, மற்ற முஸ்-லிம்கள் ஏதாவது துன்பத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும்போதும் அவர்களுடன் கலந்துறவாடுபவராக இருக்க வேண்டும்; அவதிப்படும் அவர்களுக்கு அன்போடு உதவுபவராக இருக்க வேண்டும். முக்கியமாக, அடுத்தவர்கள் நோய்வாய்ப்பட்டு பரிதவிக்கும்போது அவர்களை விட்டும் அகன்றுவிடாமல் ஆறுதல் அளிக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்; அவர்களிடம் நோய்நலம் விசாரிப்பவராக இருக்க வேண்டும்; இளகிய மனம் கொண்டவராக இருக்க வேண்டும். ஆரோக்கியம் இழந்து அல்லல்படும் மக்களுக்கு ஆறுதல் தருகிற இந்த விஷயத்தில் ஒருபோதும் முஸ்-லிம்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. இக்கருத்தை முன்செ ன்ற மூன்று செய்திகளிலும் பதிவாகியிருக்கிற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழுத்தமான ஆணையிலி-ருந்து அறிந்து கொள்ளலாம்.
தொடரும்.......
No comments:
Post a Comment