மனதில் இறைநினைவோடு இருப்போர்.
நபிகளாரின் பொன்மொழிகள் அறிவுருத்தியபடி குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட வாசகங்களைக் கொண்டு இறைவனை நினைவுகூருவார்கள் வெற்றியாளர்கள்.
அனைவரும் கைவிடும் போது :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது "அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்'' என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணி திரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு
அஞ்சுங்கள்'' என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி :4563
மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாüல் (ஆதி மனிதரை நோக்கி,) "ஆதமே!' என்பான். அதற்கு அவர்கள், "என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்'' என்று கூறுவார்கள். அப்போது "நீங்கள் உங்கள் வழித்தோன்றல்கüலிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்கüலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்'' என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம்
(அலை) அவர்கள், " எத்தனை நரக வாசிகளை?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெüயே கொண்டு வாருங்கள்)'' என்று பதிலüப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம்கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரை குறையாகப்) பிரசவித்துவிடுவாள்; பாலகன் கூட நரைத்து(மூப்படைந்து)விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீங்கள் காண்பீர்கள். ஆனால் அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால், (அந்த அளவிற்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்''.
நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்கüன் முகங்கள் நிறம் மாறிவிட்டன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்கüல் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள்'' என்று கூறிவிட்டு பிறகு, " "நீங்கள் (மறுமை நாüல் கூடியிருக்கும்) மக்கüல் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போலத்தான்' அல்லது "கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போலத்தான்' (மொத்த மக்கüல் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்'' என்று கூறினார்கள். பின்னர் "(என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்கவாசிகüல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மகிழ்ச்சியூட்டும் இந்த நற்செய்தி கேட்டு) "அல்லாஹு அக்பர்'' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்கள், "சொர்க்கவாசிகüல் நீங்கள் மூன்றில் ஒருபங்கினராக இருக்கவேண்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) "அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம். பிறகு நபியவர்கள், "சொர்க்கவாசிகüல் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) "அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),நூல் :புகாரி (4741)
உள்ளம் தடம் புரளாமல் இருக்க:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்'' என்று கூறி விட்டு, "இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
நூல் : முஸ்லிலிம் : 5161
இம்மை மறுமை வாழ்வு சீரடைய :
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்:
அல்லாஹும்ம! அஸ்லிலிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிலிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ. வஜ்அலில் ஹயாத்த ஸியாதத்தன் லீ ஃபீ குல்லி கைர். வஜ்அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்ரி ஷர்.
(பொருள்: இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது
மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக!
நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக!
வாழ்க்கையை, எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்வதற்கு
எனக்குக் காரணமாக்குவாயாக!
மரணத்தை, எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!) நூல் : முஸ்லிலிம் : 5264
இறைவனிடத்தில் மன்னிப்புத் தேடும் போது :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ.அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ . வ குல்லு தாலிலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு. வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்ரிலிஷையின் கதீர்.
பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
நூல் : புகாரி : 6398
அல்லாஹ்வுக்காக ஒன்று சேர்வோம்
ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்களில் பெரும்பாலானோர்
நன்மையான காரியங்களுக்கு ஒன்று கூடுவதில்லை. சிகரெட், மது
அருந்துவது, தியேட்டர், பெண்களை பார்த்து சீட்டியடிப்பது போன்ற தீமையான காரியங்களுக்கு ஆண்களும், புறம் பேசுவது அவதூறு சொல்வது தேவையற்ற சண்டைகள் போடுவது குடும்பங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது போன்ற காரியங்களுக்கு பெண்களும் ஒன்று கூடுகின்றனர். மார்க்க சொற்பொழிவுகள், குர்ஆன் ஓதுதல், மஸ்ஜிதிற்கு செல்லுதல், கூட்டாக தொழுதல் போன்ற இறைவனை பற்றி நினைவு கூரப்படும் அவைகளுக்கு நன்மையை எதிர்நோக்கி அனைவரும் ஒன்று கூட வேண்டும் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ
அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான்.
யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு
அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை
அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி,
அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்.
அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி) ,நூல் : முஸ்லிலிம் : 5231
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க
அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம்
அவர்களை நன்கறிந்திருந்தும் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக்கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்''
என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?''
என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்கிறான். வானவர்கள்,
"அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், "அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், "இல்லை, இறைவா!'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?'' என்று கூறுவான்.
மேலும், "உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்'' என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம்
அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?'' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், "உன் நரகத்திலிருந்து, இறைவா!''
என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், "அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?'' என்று கேட்பான். வானவர்கள், "இல்லை'' என்பார்கள். அதற்கு இறைவன்,
"அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?'' என்று கூறுவான்.
மேலும், "அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்'' என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், "அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும்
அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்'' என்று கூறுவான்.
அப்போது வானவர்கள், "இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்துகொண்டான்'' என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், "அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி), நூல் : முஸ்லிம் : 5218
இறைவனை நினைக்க இறைவனிடம் உதவி தேடவேண்டும்
இறைவா ! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே'' என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர் :முஆத் (ரலிலி), நூல் : அபூதாவூத் 1301
எனது குடும்பத்திலிலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து !
அவர் மூலம் என்னைப் பலப்படுத்து !
எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!
நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக.
உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக.
நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.)
"மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது'' என்று அவன்
கூறினான் அல்குர்ஆன் 20:29லி36
இறைநினைவுகள் தவறுகள் செய்யும் போது பயத்தையும் தனக்கு கிடைக்காமல் போனதற்கும் எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளும் போதும் தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களின் போதும் ஆறுதலாக
அமைகின்றது. அனைத்து சூழ்நிலைகளிலும் ஒருவன் இறைவனை நினைவு கூர்ந்து வாழ்ந்தால் தான் அவன் இவ்வுலகில் ஒழுக்கமிக்கவனா கவும் சிறந்தவனாகவும் வாழ்ந்து மறுமை (தேர்வில்) வாழ்வில் வெற்றி பெற முடியும். அல்லாஹ்வை நினைத்து வாழ அல்லாஹ் நமக்கு
அருள்புரிவானாக !
No comments:
Post a Comment