தூய்மை
ஒருவரை பார்க்கும் பொழுதே பல கெட்ட எண்ணங்களுடன் அவர்களுடன் பழகுபவர்களையும் உதட்டில் தேனும் உள் நாக்கில் விஷமும் வைத்து வாழ்பவர்களும் இரட்டை வேடம் போடுபவர்களும் மக்களில் ஏராளம் உள்ளனர். மனிதர்களிடத்தில் நற்பேறு வாங்குவதற்காக நல்லவர்களாக நடிப்பவர்களோ இறைவனிடத்தில் உண்மையாளர்களாக இருப்பதில்லை. மனிதர்களால் வெளிப்படையானதை மட்டும் தான் பார்க்க இயலும். ஏனெனில் கெட்டதை செய்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் பார்வையில் நல்லவர்களாகவும் நல்லதை செய்ய நினைத்து முடிவு கெட்டதாக அமைந்து மனிதர்களின் பார்வையில் கெட்டவர்களாகவும் காட்சி கொடுக்கலாம். இறைவனோ அவனுடைய வெளித்தோற்றத்தை பார்க்காமல் உள்மனதை பார்க்கின்றான்.
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார். அல்குர்ஆன் 91 :7லி10
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக,
உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்
கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (5012)
அஹ்னஃப் பின் கைஸ் அவர்கள் கூறியதாவது: (ஜமல் போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ(ரழி)அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரழிரி) அவர்கள் என்னைச் சந்தித்து "எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவிசெய்திடச் செல்கிறேன்'' என்றேன். அதற்கு
அபூபக்ரா (ரழி) அவர்கள் "நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரண்டு முஸ்லிரிம் மக்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக்கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்'' என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் "அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசைகொண்டிருந்தார்' என்று சொன்
னார்கள்'' என்றார்கள்.
நூல் : புகாரி : 31
அனைத்து சூழ்நிலைகளிலும் தூய்மையை மேற்கொள்ளுதல் :
ஒரு மனிதன் அவனுடைய எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையான அந்தரங்கமான வாழ்க்கையிலும் படைத்த இறைவன் முதல் தன் குழந்தைகள் வரை உண்மையானவனாக வாழ்வதும் தூய்மையாகும். இதைத் தான் மக்களுக்கு மத்தியில் இறைவனிடத்தில் தூய்மையானவனாக
நடந்து கொள்பவர்களுக்கு இறையச்சவாதி என்றும், வியாபாரத்தில் நேர்மையாக நடப்பவர்களுக்கு கை சுத்தம் என்றும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவர்களுக்கு வாய் சுத்தம் என்றும், கற்பொழுக்கத்துடன் நடப்பவர்களுக்கு கற்புக்கரசி என்றும் மக்களுக்கு மத்தியில் கூறுகின் றனர்.
இறைவனிடத்தில் தூய்மையாக
இறைவன் கொடுத்த அருட்கொடைகளை அனுபவிக்கும் மனிதன் அதை அனுபவித்துக்கொண்டே புறக்கணிக்கின்றான். இறைவன் தனக்கு மட்டும் தான் சோதனையை கொடுத்தது போலவும் தன்னை விட இவ்வுலகில் துர்பாக்கியசாலி இல்லை எனவும் நினைக்கின்றனர். இவ்வுலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாலோ பொருளாதாரத்தாலோ என ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இது தான் எதார்த்த நிலையாகும். மனிதன் இத்துன்பத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றான். இறைவனை சபிக்கின்றானா? அல்லது பொறுமையாக இருக்கின்றானா? என்பதை இறைவன் சோதிக்கின்றான். இதை புரிந்துகொள்ளாத மனிதன் அந்த சோதனையில் தோல்வியை தழுவுகின்றான்.
இறைவன் நல்லதை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்பவன், சோதனை தரும் போது கோபித்துக் கொண்டால் அவன் இறைவனிடம் தூய்மையாக நடக்கவில்லை என்று பொருள்.
உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும்
அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால்
அவனிடமே முறையிடுகின்றீர்கள்.
பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.
அல்குர்ஆன் 16 :53 லி55
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடைவீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:20
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்''எனக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 89 :15 ,16
இறைவன் துன்பத்தை கொடுக்கும் போது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும்.
மேலும் அத்துன்பத்தின் போது இறைவனை நினைவுகூராமல்
அவனை பிராத்திக்காமல் இஸ்லாம் அனுமதிக்காத ஒப்பாரி, தர்ஹாவிற்குச் சென்று பிரார்த்தித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆறுதல் தேடி எத்தனையோ நபர்களிடம் கஷ்டங்களை சொல்லி அழும் பெண்கள் இறைவனிடத்தில் சொல்லி அழுவதில்லை. இறைவனால் நீக்க முடியாததை இவர்கள் நீக்கிவிடுவார்களா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நான் இறைவனிடம் பிரார்த்தித்தும் எனக்கு
இறைவன் தரவில்லை என்று இறைவனின் வல்லமையை ஆற்றலை இவர்கள் இழிவுபடுத்துகின்றார்கள்.
மேலும் அவனுக்கு செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளிலும் தூய்மையற்ற முறையில் அவனை நெருங்குகின்றனர். தர்மம், நோன்பு, தொழுகை, ஹஜ், குர்பானி கொடுத்தல் மற்றும் இன்னபிற விஷயங்களில் பிறர் மெச்சுவதற்காக இந்த காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவும் முற்றிலும் தவறான செயலாகும்.
மஹ்மூது இப்னு லபீது (ரலி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் அதிகம் அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள்
அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முகஸ்துதி (பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்தல்) என்று கூறினார்கள்.
அஹ்மத் :22528
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் "யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர்(உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாüல்) விளம்பரப்படுத்துவான்.யார்முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாüல்)
அம்பலப்படுத்துவான்''என்று கூறியதைக் கேட்டேன்.
நூல் : புகாரி 6499
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தமக்கு அல்லாஹ் வழங்கியதை (நல் வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும்? அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:38,39)
அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும்
அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
நூல் : புகாரி 4919
நாம் எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற தூய்மையான எண்ணப்போக்குடன் செய்யவேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஈமான் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், "இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்துவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்'' என்றார்கள்.
அடுத்து "இஹ்ஸான் என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்)'' என்றார்கள். நூல் : புகாரி : 50
வளரும் இன்ஷா அல்லாஹ்