Sunday, June 05, 2011

தினமும் படிப்போம்


தூய்மையான எண்ணம்



குல் இன் துக்ஃபூ மா ஃபீ சுதூரிக்கும் அவ் துப்தூஹு யஃலம்ஹுல்லாஹு வயஃலமு மா ஃபிஸ்ஸமாவாத்தி வமா ஃபில் அர்ளீ                                                 
"உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் அறிகிறான்.                                                       
அல்குர்ஆன் 3:29

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ رواه مسلم

இன்னல்லாஹ லா யன்ளுரு இலா சுவரிக்கும் வஅம்வாலிக்கும் வலாகிய் யன்ளுரு இலா குலூபிக்கும் வஅஃமா-க்கும்.
பொருள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
அறிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5012

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ
وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
 அவூது பிக-மாத்தில்லாஹித் தாம்மத்தி மின் குல்- ஷைத்தானின் வஹாம்மத்தின் வமின் குல்லி அய்னின் லாம்மத்தின்
"அல்லாஹ்வின் முழுமையான (குணமüக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்''                                                                 
இந்தச் சொற்களின் மூலம்  இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.                                                       
நூல் : புகாரீ 3371

No comments:

Post a Comment