Monday, June 04, 2012

விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு- 03

விரலை நீட்டி வைத்துக்கொண்டா? குறுக்கி வைத்துக்கொண்டா?
விரலசைப்பதற்கு நாம் ஆதாரமாக காட்டு வாயில் பின் ஹுஜ்ர் அவர்களுடைய ஹதீஸில் விரலை நீட்டி அசைக்க வேண்டும் என்று தெளிவாக்க் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)
தொடர்ந்தா? விட்டுவிட்டா?
அத்தஹிய்யாத்து இருப்பில் அந்த அமர்வு முடியும் வரை தொடர்ந்து விரலை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும்.  விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம்.
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)
நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனவே தொடர்ந்து விரலசைக்க வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரம்.

நபி (ஸல்) அவர்கள் இருப்பில் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இங்கே கூறப்படும் இஷாரா என்பது விரலசைப்பது தான் என்பதை ஆதாரங்களுடன் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் அமர்ந்தவுடன் அதன் ஆரம்பித்திலிருந்து இறுதிவரை இஷாரா செய்து கொண்டிருப்பார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது.
14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் தனது வலக்கையை தொடையின் மீது வைத்து தன் விரலால் இஷாரா செய்து கொண்டிருப்பார்கள்.
நூல் : அஹ்மது 14828
எனவே இருப்பு முழுவதிலும் தொடர்ந்து விரலசைப்பதற்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒரு பேச்சுக்கு விரலை அசைத்தார்கள் என இங்கே பொருள் கொண்டாலும் அப்போதும் தொடர்ந்து விரலை அசைக்க வேண்டும் என்ற கருத்தையே இந்தச் செய்தி உள்ளடக்கியுள்ளது.
இந்தச் செய்தி தொழுகையில் விரலசைப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. தொழுகையில் உள்ள மற்ற பல நிலைகளைப் பற்றியும் பேசுகின்றது.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலையில் நிற்கும்போது வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் இவர்கள் நிலையில் வலது கையை இடது கையின் மீது வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.
மேற்கண்ட செய்தியில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவில் இருக்கும் போது கைகளை முட்டுக்கால்களின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்கால்களின் மீது வைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் இவர்கள் ருகூவில் முட்டியின் மீது கையை வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே தொங்கவிட்டுவிட வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் தம் உள்ளங்கைகளை காதுகளுக்கு நேராக வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக்கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் இவர்கள் சஜ்தாவில் காதுகளுக்கு நேராக கைகளை வைத்துவிட்டு சஜ்தாவில் இருக்கும் போதே கைளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் தமது வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால்  தொடையின் மீது கையை வைத்துவிட்டு அந்ந நிலையில் இருக்கும்போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.
ஆனால் இவ்வாறு யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நிலையில் ஒரு செயலைச் செய்தால் அந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுகின்ற வரை அந்தச் செயலைத் தொடர வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலசைத்தார்கள் என்பதையும் இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைத்தார்கள் என்றால் அந்த அமர்வு முழுவதிலும் விரலை அசைத்தார்கள் என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.
மேலும் வருங்கால வினைச் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் அசைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அதுவும் இந்தக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது.
வேகமாகவா? அல்லது மெதுவாகவா?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. ஒரு செயலை நபியவர்கள் கற்றுக்கொடுத்து அதில் ஒரு அம்சத்தை அவர்கள் மூடலாக விட்டுவிட்டால் அந்த விசயத்தில் நடுநிலையைப் பேணிக்கொள்ள வேண்டும்.
அதி வேகமாகவும் அசைக்கக்கூடாது. அசைப்பது தெரியாத அளவுக்கு மிக மெதுவாகவும் அசைக்கக்கூடாது. இதில் நடுநிலையை பேணிக் கொள்ள வேண்டும்.
எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் மனமுரண்டாக நம்மிடம் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்கள்.
இருப்பில் விரலை நீட்டி வைக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. இப்போது இவர்களிடம் ஒருவர் விரலை விரைப்பாக நீட்ட வேண்டுமா? அல்லது சாதாரணமாக நீட்டினால் போதுமா? என்று கேட்டால் சாதாரணமாக நீட்டினால் போதுமானது என்று கூறுவார்கள்.
இவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விசயத்துக்கு எதிராக நம்மிடம் கேள்வி கேட்பது நியாயமற்ற செயல்.
இருப்பில் எப்போது இஷாரா செய்ய வேண்டும்?
விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் இஷாரா என்று கூறுபவர்கள் இருப்பின் ஆரம்பத்திலிருந்து இந்தச் செயலைச் செய்வதில்லை. அத்தஹிய்யாத்தில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டிய இடம் வரும்போது தான் ஆட்காட்டி விரலை உயர்த்துவார்கள். இதற்கு முன்பு விரலை உயர்த்த மாட்டார்கள்.
இவ்வாறு இருப்பின் இடையிலிருந்து விரலை உயர்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. ஏன் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியைக் கூட இதற்கு ஆதாரமாக்க் காட்ட முடியாது.
ஆனால் இன்றைக்கு சிலர் விசித்திரமான விளக்கங்களைக் கூறி இச்செயலுக்கு ஆதாரம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள். பின்வரும் பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து தவறான விளக்கத்தை கொடுக்கின்றார்கள்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் பைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.
நூல் : நஸாயீ (1253)
துஆ செய்யும் போது இஷாரா செய்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் தான் துஆ என்று கூறுகின்றனர். கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் துஆ என்ற வார்த்தையால் கூறப்பட்டுள்ளது என்று சில ஹதீஸ்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே இருப்பில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது இஷாரா செய்ய வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவர்கள் என்பதை இந்த விளக்கத்தைப் படிக்கும் யாரும் அறிந்து கொள்வார்கள்.
அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை துஆ எனக் கூறலாம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இதன் மூலம் இவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.
ஏனென்றால் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் உட்பட இருப்பில் ஓதப்படும் அனைத்துக்கும் துஆ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
இருப்பில் அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று துவங்கி இறைவனைப் புகழ்கிறோம். கலிமா துஆ என்றால் இது துஆ இல்லையா?
மேலும் நபியே உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும் என்று இருப்பில் கூறுகிறோம். இது தெளிவான பிரார்த்தனையாக இருந்தும் இந்த இடங்களில் இவர்கள் இஷாரா செய்வதில்லை. ஏன் இவையெல்லாம் துஆ இல்லையா?
பின்வரும் ஹதீஸ்கள் இருப்புக்கு வந்தவுடன் இஷாரா செய்ய வேண்டும் என்றும் துஆ என்பது அத்தஹிய்யாத் அமர்வு முழுவதையும் குறிக்கும் என்பதையும் தெளிவாகக் கூறுகின்றது.
910حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ عَجْلَانَ قَالَ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظ لَهُ قَالَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ ابْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ يَدْعُو وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى إِصْبَعِهِ الْوُسْطَى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ رواه مسلم
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால்  தமது வலக் கையை வலது தொடையின் மீதும், இடக் கையை இடது தொடையின் மீதும் வைத்துச் சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லிம் (1015)
912و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லிம் (1017)
911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.
நூல் : முஸ்லிம் (1016) 
913حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ أَنَّهُ قَالَ رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي فَقَالَ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فَقُلْتُ وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى رواه مسلم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெரு விரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (1018)
902حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حَلَّقَ بِالْإِبْهَامِ وَالْوُسْطَى وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ رواه إبن ماجه
நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல் : இப்னு மாஜா (902)
14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்தால் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். தமது வலது கையை தொடையின் மீது வைத்து தமது விரலால் சமிக்கை செய்து கொண்டிருப்பார்கள்.
நூல் : அஹ்மது (14828)
எனவே அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது மட்டும் ஆட்காட்டி விரலால் இஷாரா செய்வது பித்அத்தாகும். நபிவழியில் இதற்கு ஆதாரம் இல்லை.
விரலசைப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயலா?
இஷாரா என்றால் நாம் சொல்ல விரும்பும் கருத்தை செயலால் சொல்வதாகும். தொழுகையில் ஆட்காட்டி விரலை இஷார செய்வதன் மூலம் இறைவன் ஒருவன் தான் என்ற கருத்தை நமது செயலால் வெளிப்படுத்துகிறோம்.
எனவே இருப்பில் விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் ஏகத்துவத்தை வெளிப்படும் செயல் என்றும். விரலை அசைத்துக் கொண்டிருப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்றும் வாதிடுகின்றனர்.
இவர்களுடைய மனோஇச்சை விரலசைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இதை ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்று வாதிடுகிறார்கள்.
முதலில் இருப்பில் விரலசைப்பதற்கான காரணம் இது தான் என்பதை அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ கூறவில்லை. காரணம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பதால் மறு பேச்சு பேசாமல் இதற்குக் கட்டுப்படுவது அவசியம்.
ஒரு பேச்சுக்கு ஏகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இஷாரா செய்கிறோம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அது நமது நிலைபாட்டுக்கு எதிரான வாதம் இல்லை.
ஏனென்றால் ஒரு விரலை அசைப்பதால் இரண்டு இறைவன் என்ற கருத்தோ இறைவனே இல்லை என்ற கருத்தோ வராது. மாறாக இதுவும் ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் செயலாகும். விரலை அசைக்கும் போது தான் இறைவன் ஒருவன் என்ற கருத்தை பல முறை வெளிப்படுத்துகிறோம்.
ஒரு விரலை அசைப்பதற்கு பதிலாக இரண்டு விரலை அசைத்தால் அது ஏகத்துவத்துக்கு எதிரானது என்று கூறலாம். ஒரு விரலை அசைப்பதை இவ்வாறு கூற முடியாது.
இது ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான செயலாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் காலத்தில் நபித்தோழர்களும் இதை செய்திருக்க மாட்டார்கள்.
எனவே ஹதீஸிற்கு எதிரான இவர்களுடைய யூகத்தைக் கொண்டு நபிவழியை மறுத்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment