பொறுப்புணர்வும் இறைபயமும்.
மனித சமுதாயம் அனைவருக்கும் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யாரும் பொறுப்புகளிலிருந்து, கடமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட் பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாü யாவான்.
அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாü யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 2554
இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் என அனைவரும் பல்வேறு பணிகளுக்கு பொறுப்பாளர்கள் என்பதை இந்த செய்தி திட்டவட்டமாக தெரிவிக்கின்றது. அதே வேளை பொறுப்புகள் குறித்து மறுமையில் இறைவனால் விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் இந்த செய்தியில் உள்ளது.
பொறுப்பு என்பது அது நிர்வாகம் சம்பந்தமாகவோ அல்லது குடும்பப் பொறுப்பாகவோ இருக்கலாம். நம்மில் பலர் ஏதேனும் பள்ளிவாசல், இயக்கம், அல்லது இதர நிர்வாகத்தில் அங்கம் வகிப்போராக இருப்போம். அல்லது குடும்பப் பொறுப்பில் தந்தையாக, தாயாக, கணவனாக, மனைவியாக இப்படி ஏதாவது ஒரு பொறுப்பையோ ஒரே நேரத்தில் பல பொறுப்புகளையோ சுமந்து கொண்டிருப்போம். ஆக நம்மில் யாரும் எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது, நான் பொறுப்புகளற்றவன் என்றெல்லாம் கூற முடியாது.
இதை உணர்ந்த பிறகு நம்முடைய கடமைகள் விஷயத்தில் விசாரிக்கப்படுவோம் என்ற பொறுப்புணர்வுடன் நாம் நடந்து கொள்கின்றோமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
பல குடும்பத் தலைவிகள் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை சுமந்து கொண்டு அதில் அக்கரையற்று இருக்கின்றார்கள்.
தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அதாவது பிள்ளையை பள்ளிக்கு அனுப்
புதல், தலைவாருதல், சரியான நேரத்தில் பிள்ளைகளுக்கு உணவளித்தல், கண்டிக்கத்தக்க நேரத்தில் கண்டித்தல், பிள்ளைகளின் நடவடிக்கைகளை, படிப்பை கவனித்தல், மார்க்க கல்வியை புகட்டுதல், ஒழுக்கம் போதித்தல் போன்ற ஏராளமான கடமைகளை உதாசீனப்படுத்துகின்றனர்.
அதே போன்று கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பல நேரங்களில் செய்யத் தவறிவிடுகின்றனர். இவைகள் அனைத்திற்கும் பொறுப்புகளை பற்றி இறைவன் விசாரிப்பான், அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும் என்கிற அச்ச உணர்வு இல்லாமல் போனதே காரணம்.
அல்லாஹ்வின் தூதரவர்கள் எத்தனை பொறுப்புகளை பெற்றிருந்தார்கள். அன்றைய உலகுக்கு ஜனாதிபதியாக, தந்தையாக, பல மனைவிமார்களுக்கு கணவனாக, இதற்கெல்லாம் மேலாக இறைவனின் செய்தியை உலகுக்கு தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைக்கும் இறைத்தூதராக இவ்வாறு எண்ணற்ற பரிமாணங்களை நபிகளார் பெற்றிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் தன் கடமையை நிறைவாக செய்து முடித்தார்கள். அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவாக செய்யத்தூண்டியது பொறுப்புகள் குறித்து இறைவன் விசாரிப்பான் என்ற இறைபயமே.
இதற்கு எடுத்துக் காட்டாக சில சம்பவங்களை காண்போம்.
இறைத்தூதராக . . .
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்கிற முறையில் தனது பொறுப்பில் குறை வைத்தார்களா? இறைத்தூதர் என்ற பதவியை, பொறுப்பை பெற்ற பிறகு தான் அதிகமான எதிர்ப்புகளுக்கும்,
அவதூறான விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிட்டது. நபியவர்களை கொல்லவும் திட்டமிட்டு முயற்சி செய்தனர். இறைவனின் உதவியால்
அத்தகைய முயற்சிகள் தவிடு பொடியாக்கப்பட்டன. இதை குறிப்பிடுவதற்கு காரணம் இத்தகைய எதிர்ப்புகளை நபிகள் நாயகம் பெற்றது அவர்கள் தூதர் என்ற முறையில் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றினார்கள் என்பதை சான்றளிக்கின்றது என்பதை உணர்த்துவதற்காகவே.
நபிகள் நாயகம் இறைத்தூதர் என்ற பொறுப்பை மிக அழகாக, குறைவின்றி, தொய்வின்றி சிறப்பாக நிறைவேற்றினார்கள் என்பதற்கு ஏரளாமான எடுத்துக் காட்டுகளை குறிப்பிடலாம். இருப்பினும் ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு
நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன்.
அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா? என்று கேட்டார்கள்.
அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!) என்றேன்; அவர்கள் ஐந்த நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ஒன்பது நாட்கள்! என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; பதினொரு நாட்கள்! என்றார்கள். பிறகு, தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக! என்றார்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் (ரலி)
நூல் : லிபுகாரி 1980
அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் தொடர்ச்சியாக நோன்பு நோற்கின் றார் என்ற தகவல் நபிகளாருக்கு கிடைக்கின்றது. இதை அறிந்த
அல்லாஹ்வின் தூதர் நேரே அவரது வீட்டிற்கு சென்று இந்த தவறை எடுத்துரைக்கின்றார்கள் என்று மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கின்றது.
ஒரு இறைத்தூதர் இவ்வாறு மெனக்கெட்டு தன்னை பின்பற்றும் ஒருவரின் வீட்டிற்கே சென்று அவரது தவறான செயலை மார்க்க ரீதியாக கண்டிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இறைத்தூதர் என்ற பொறுப்பை பற்றி இறைவன் விசாரிப்பான், அதில் குறை வைத்து விடக்கூடாது என்ற இறைபயத்தை தவிர வேறொன்றுமில்லை.
குடும்பத் தலைவராக . . .
ஊருக்கு உபதேசம் வீட்டிற்கு இல்லை என்று நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஊர் மக்களுக்கு தவறாமல் போதனை செய்து விட்டு தன் குடும்பத்தை வசதியாக மறந்து விடும் போதகரை பற்றி இவ்வாறு குறிப்பிடுவர். இதைப் போன்று மக்களுக்கு மாத்திரம் போதித்து விட்டு தமது குடும்பத்தை எச்சரிக்க நபியவர்கள் மறந்தார்களா? மறுத்தார்களா? அலட்சியம் செய்தார்களா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலிலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை எழுப்ப நினைத்தால்தான் எங்களால் எழ முடியும்” என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள்.அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான் (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.
அறிவிப்பவர் : அலீ பின் தாலிலிப் (ரலி)
நூல் : புகாரி 1127
அல்லாஹ்வின் தூதர் இரவில் தொழுவார்கள். வித்ர் தொழ எண்ணும் போது ஆயிஷாவே எழுந்திரு வித்ர் தொழு என்று கூறுவார்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாக தொழுது முடிப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசைக்கும் (கிப்லா) இடையே குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன்.
அவர்கள் இறுதியில் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் (எழுந்து) வித்ர் தொழுகை தொழுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி),
நூல் : முஸ்லிலிம் (885)
நடு இரவில் எழுந்து, தான் தொழுதுவிட்டு தவறாமல் தன் மகள், மருமகன் தொழுதார்களா என்று விசாரிக்க செல்கின்றார்கள். தனது மனைவியை அன்றாடம் இரவுத் தொழுகைக்காக எழுப்பி விடும் வழக்கம் உள்ளவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ற இரு தகவல்களை மேற்கண்ட இரு ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
வணக்க வழிபாடுகளில் தம் குடும்பத்தாரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற அக்கறையில் நபியவர்கள் இத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கின்றார்கள். குடும்பத்தாரை நரக நெருப்பை விட்டும் எச்சரிக்க வேண்டும் என்ற இறைவசனத்தின் பிரகாரம் அல்லாஹ்வின் தூதர் பொறுப்பாற்றியுள்ளார்கள் என்பதை தெளிவாக பறைசாற்றுவதாக மேற்கண்ட சம்பவங்கள்
அமைந்துள்ளதை யாரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஆட்சித் தலைவராக . . .
இன்றைக்கு நாட்டு குடிமக்கள் மின்வெட்டு, விலை உயர்வு போன்ற குறைபாடுகளால் பெரிதும் அல்லல்படுவதை காண்கிறோம். அன்றாட நடைமுறைகளை செய்வதற்கே விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கும் சூழல் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக குடிமக்களின் வரிப்பணம் சர்வ சாதாரணமாக அதிகாரிகளாலே கொள்ளையடிக்கப்படும் அவலமும் அனுதினமும் நடந்தேறுகின்றது.
நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் குடிமக்களைப் பற்றி போதிய அக்கறை, பொறுப்புணர்வு, தொலைநோக்குப் பார்வை ஆகியவை இல்லாததே இத்தகைய குளறுபடிகளுக்கும், மக்கள் அவதிப்படுவற்கும் காரணங்களாகும்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர் என்ற முறையில் மக்களுடைய பொருளாதாரத்தில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவங்கள் ஆதாரங்களாகும். நபியவர்களின் நேர்மைக்கும், பொறுப்புணர்வுக்கும் முத்தான எடுத்துக்காட்டுகளாகும்.
மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலிலிலி) ஹுசைன் (ரலிலிலி) இருவரும்
அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலிலிலி)
நூல் : புகாரி 1485
விளையாட்டுப்பிள்ளை தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தமது கண்டனத்தையும், கோபக்கனலையும் அந்த சிறுவரிடம் நபிகளார் பதிவு செய்வது மக்களிடம் சென்றடைய வேண்டிய பொருள்கள் விஷயத்தில் நபிகளாரின் பொறுப்புணர்வை பிரதிபலிப்பவைகளாக உள்ளன பின்வரும் சம்பவமும் அது போன்ற ஒரு சம்பவமே.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை தொழுவித்துவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் லிஅல்லது கேட்கப்பட்டது லி அதற்கு
நபி (ஸல்) அவர்கள் நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; அப்பொருளுடன் இரவைக் கழிக்க விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்துவிட்டேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஹாரிஸ் (ரலிலி)
நூல் : புகாரி 1430
மக்களின் பொருளாதார விஷயத்தில் மட்டுமல்லாது குடிமக்களின் நலன் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் நபியவர்கள்
அக்கறை கொண்டவர்களாக, பொறுப்புணர்வு மிக்கவர்களாகவே நடந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், மக்கüலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்
பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்கüன் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப் பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு, நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம் என்று கூறினார்கள். அல்லது, இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புகாரி 2908
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது அவர்கள், ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா? என்று கேட்டுவிட்டு, மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலிலி) நூல் : முஸ்லிலிம் 164
கணவனாக . . .
இவ்வளவு ஏன் நபியவர்கள் தமது இல்லறத்தைக்கூட மனைவிமார்களுக்கு மத்தியில் சரிசமமாக பங்கிட்டுக் கொண்டார்கள் என்றால் ஏன்? தமக்கு விருப்பமான மனைவியிடம் இரவு தங்கலாமே? கணவன் என்ற ரீதியில் மனைவிமார்களுக்கு மத்தியில் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லையெனில் இறைவன் விசாரிப்பான் என்ற அச்ச உணர்வினாலே நபியவர்கள் மனைவிமார்களுக்கு மத்தியில் முறை வைத்து இரவு தங்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோயின் கடுமை அதிகரித்து விட்ட போது என் வீட்டில் தங்கி சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்கüடம் அனுமதி கேட்டார்கள்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி),
நூல் : புகாரி (3099)
நபியவர்களிடம் இருந்த இந்த பொறுப்புணர்வையும், அது குறித்த இறைபயத்தையும் நாம் அனைவரும் பெற்றாக வேண்டும். பெற்றால் நமது அனைத்து கடமைகளையும் நிறைவாக செய்திட இதை வளர்த்துக் கொள்வோமாக.
No comments:
Post a Comment