Sunday, April 15, 2012

சிறந்த தம்பதிகள்

சிறந்த தம்பதிகள்
யாசர் அரஃபாத், மங்களம்லிதிருப்பூர்


பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிரிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாககும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறது. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத் குடும்பங்களிலும் பெருகிய வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன் சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படை காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.

அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்க்கேற்ப தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.


நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்)பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஆம், இருக்கிறது என்று கூறி விட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டி விட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். உணவுடனா அனுப்பியுள்ளார்? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி லிஸல்லி அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரி டம்), உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி லிஸல்லி அவர்களை முன்சென்று வர வேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முட னிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, உம்மு சுலைமே! உன்னிடமிருப் பதைக் கொண்டு வா! என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ் வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளி யேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

நூல் :புகாரி (3578)

இறைத்தூதர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை கண்ட இந்த தம்பதிகள் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்களுக்காக இருவரும் இணைந்து செய்த தொண்டை இந்த சம்பவத்தில் காணமுடிகிறது.

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் உம்மு சுலைம் (ரலி):

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்க வில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப் பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப் பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனா வுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங் களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

நூல்: புகாரி (2630)

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் அபூ தல்ஹா (ரலி):

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்லிரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங் களில் “”பைரஹாஎனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். “”நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “”அல்லாஹ் தனது வேதத்தில் “”நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது “”பைரஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்என்று சொன்னார்கள். எனவே, அதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (1821)

போர்க்களத்தில் அபூ தல்ஹா (ரலி) அவர்களும் உம்மு சுலைம் (ரலி) அவர்களும்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (த் தனியே) விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல் வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்பு களில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகைள நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல் :புகாரி (3811)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), “”அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம் முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக் கிறார்என்று கூறினார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “”இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற் காகத்தான் அதை வைத்துள்ளேன்என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “”அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றி யின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட் டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3697

இந்த தம்பதிகளைப் போன்று நாமும் மறுமை வெற்றியை கவனத்தில் கொண்டு செயல்பட்டு உலக விஷயங்களில் விட்டுக் கொடுத்து பிணக்களை களைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுத்துவோம்.




No comments:

Post a Comment