Monday, May 23, 2011

தொடர் : 2


நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்.
 நேர்வழி தெளிவாக தெரிந்தும் பின்பற்றமாட்ர்கள்
சத்தியத்தை, மார்க்கத்தை நாம் தெளிவாக எடுத்து வைத்தாலும் அதை ஏற்பதற்கு பலர் தயக்கம் காட்டுகிறார்கள். இன்னும் சிலர் சத்தியத்தை வேண்டுமென்று மறுக்கிறார்கள். இன்னும் சிலருக்கு சத்தியத்தை கூறும் போது அதற்கு தவறான விளக்கத்தையும் தருவதை நாம் காண்கின்றோம்.
இதைப் போன்று நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும் சிலர் வாழ்ந்துள்ளனர்.
நேர் வழி தங்களுக்குத் தெளிவான பின் புறங்காட்டி திரும்பிச் சென்றவர்களுக்கு ஷைத்தான் அதை அழகாக்கிக் காட்டினான். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறினான். அல்குர்ஆன் 47:25
நயவஞ்சகனின் தண்டனைகள்
கப்ரில் கடும் தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பார். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு (நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அலலாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், "எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்க்கொண்டிருந்தேன்'' என்பான். அப்போது அவனிடம் " நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
புகாரி 1338
நரகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள்
சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருப்பதை போன்று, நரகத்திலும் பல படித்தரங்கள் உள்ளன. நயவஞ்சகன் நரகத்தின் அடித்தட்டில் இருந்து கடுமையாக தண்டிக்கப்படுவான்.
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். அல்குர்ஆன் 4:145
நிலையான வேதனை
நயவஞ்சகர்கள் நரகத்தில் போடப்படும் போது நிரந்தரமாக தங்குவார்கள். அதிருந்து அவர்கள் வெளியேற மாட்டார்கள்.
நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது.
அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு. அல்குர்ஆன் : 9:68
ஜனாஸா தொழுகை கிடையாது
நயவஞ்சகர்களில் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக இறுதித் தொழுகை நடத்தவோ, அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி, அல்லது பிரார்த்தனை செய்து அவருடைய அடக்கத்தலத்தில் நிற்கவோ இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி கிடையாதுஅவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
அல்குர்ஆன் 9:84
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டான். அப்போது அவனது (முஸ்மான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்; அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, "(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன்'' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ர),
நபி (ஸல்) அவர்களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?'' எனக்
கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது''எனக் கூறிவிட்டு, "நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை'' என்ற (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே "அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர),
நூல் : புகாரி 1269
நயவஞ்சகர்களின் இந்தப் பண்புகளிருந்து நல்லவர்கள் ஒதுங்கிக் கொண்டு, இப்பண்புகளை உடைய நயவஞ்சகர்(களை அடையாளம் கண்டு, அவர்க)ளிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.
(Dheenkula Penmani)

No comments:

Post a Comment